(குறிப்பு-இது விரைவில் திரைக்கு வரவிருக்கும் எழில் இயக்கத்தில் விமல்-பிந்து மாதவி நடிப்பில் வரவிருக்கும் தேசிங்கு ராஜா திரைப் படம் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை)
இப்படத்தின் இயக்குனர் எழில்....துள்ளாத மணமும் துள்ளும்,பெண்ணின் மனதைத் தொட்டு,பூவெல்லாம் உன் வாசம் போன்ற காதல் வெற்றிப் படங்களை 1999-லிருந்து வரிசையாகத் தந்து.... இடையில் தோல்வியால் துவளாமல் மீண்டும் 2012- ல் மனம் கொத்திப் பறவை மூலம் கோலிவுட்டில் தனக்கென்று ஒர் இடம் பிடித்தவர்
இப்படத்தின் நாயகன் விமல்......கூத்துப்பட்டறை சினிமா தொழிற்சாலையின் தயாரிப்புகளில் ஒருவரான இவர் விஜய்-அஜித் இவர்களின் படங்களில் தலை காட்டினாலும் பாண்டிராஜின் பசங்க படத்தில் வெற்றிக்கொடி நட்டி களவானி-யில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தனது வித்தியாசமான நடிப்பால் தொடர்ந்து.........கேடி பில்லா கில்லாடி ரங்கா-வில் கேசவனாக நம் இதயத்தில் இடம் பிடித்தவர்....இந்தப் படத்தில் இதயக்கனி என்ற பெயருடன் நடிக்கும் இவர் தனக்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பார்.
இந்தப் படத்தின் நாயகி பிந்து மாதவி.........மாடல் அழகியாக விளம்பரங்களில் தன் அழகைக் கூட்டி....ஆவக்காய் பிரியாணி தெலுங்கு படத்தில் அறிமுகமாகி...தமிழில் பொக்கிஷம் படத்தில் தொடங்கித் தனது வெற்றிப் பயணத்தைக் கேடி பில்லா கில்லாடி ரங்கா...இப்போது தேசிங்கு ராஜா...தொடர்கிறது வருத்த படாத வாலிபர் சங்கம்...இன்னும் நிறைய.
இவர்களுடன்...சூரி,ரவி மரியா,சிங்கம்புலி,ஆடுகளம் நரேன்,வினு சக்ரவர்த்தி,சிங்கமுத்து...நிறைய காமெடி நடிகர்களும் நடிக்க.....
தேசிங்கு ராஜா......முழு நீ...ள...நகைச்சுவைப் படம்..தஞ்சாவூர்,கும்பக்கோணம் பகுதிகளில் எடுக்கப்பட்ட இரண்டு கிராமங்களுக்கு இடையில் நடக்கும் சின்னச் சின்னக் காமெடி சண்டைகள் பற்றிய படம்...அதே நேரம் கிராமத்து ஒற்றுமையை வலியுறுத்துகிறது..
விமல்...இதயக்கனி என்ற பெயரில் பழக்கடையில் வேலைசெய்பவராகவும்.. எம்.ஜி.ஆர். ரசிகராகவும் பிந்து மாதவி..தாமரை என்ற பெயரில் கிராமத்து அப்பாவிப் பெண்ணாக.... ரஜினி ரசிகையாகவும் நடித்து...அவர்களுக்குள் உள்ள கெமிஸ்ட்ரி...பிஸிக்ஸ்...கணக்கு சரியானது என்று நிருபிக்க வருகிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் தாமிரபரணி (முக்தா) பானு விமலுடன் திருவாரூரில் ஒரு குத்துப்பாட்டும்....குத்து ஆட்டமும்..படத்துக்குத்தூக்கலாகவும் கலக்கலாகவும்.
thanks-YouTube-by D. Imman
இமான் இசையில் யுகபாரதியில் வார்த்தைகளில்....மிகவும் நேர்த்தியான...கிராமத்து பாணி கலப்பில் 5 பாடல்கள்.....அத்தனையும் இனிமை.
thanks-YouTube-by Prasath Rithik
ஒரு சிரிப்பு நடிப்பு பட்டாளமே நடித்துள்ள தேசிங்கு ராஜா....ஒரு காமெடிக் கலக்கல் படமாகவும் மனம் கொத்திப் பறவை போல் இயக்குனர் எழிலுக்கு ஒரு வெற்றிப் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
******************************************************************************
இங்கே...........
தல'அஜித்தின் ஆரம்பம்-ஓர் அலசல்
(குறிப்பு-இது தல' அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ஆரம்பம் பற்றிய சில செய்திகளும் அட்டகாசமான படங்களும்.....)
மேலும்.......
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |