google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரெமோ - சினிமா விமர்சனம்

Friday, October 07, 2016

ரெமோ - சினிமா விமர்சனம்

பெயரில் மட்டுமே அந்நியன் பட ரெமோ கதாப்பாத்திரத்தின் பெயரில் வந்துள்ள சிவகார்த்திகேயனின் "ரெமோ" திரைக்கதையில் இன்றைய காலத்திற்கு ஏற்ப காதல்,நகைச்சுவை காட்சிகளுடன் களை கட்டுகிறது 

  ரஜினி போன்று சூப்பர் ஸ்டார் நடிகராக வேண்டும் என்ற சினிமா கனவில் வாழும் சிவகார்த்திகேயனுக்கு   சினிமாவில் பெண் நர்ஸ் வேடம் கிடைத்து "ரெமோ" வாக நடிக்கிறார்   

அதேநேரம்...

 தன் காதலை மறுத்த பெண் டாக்டர் கீர்த்தி சுரேஷை மயக்க அவரிடம் நர்ஸாக மாறுவேடத்தில் வேலைக்கு சேர்கிறார் 

  சிவகார்த்திகேயனின் கீர்த்தி சுரேஷ் மீது கொண்ட காதல் நிறைவேறியதா...? என்பதை காதலும் நகைச்சுவையாகவும் படம் காட்டுகிறார் அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் 

  சிவகார்த்திகேயன்.... ஆண்-பெண் என இரு வேறு  மாறுபட்ட வேடங்களில்   நடித்து கலகலப்பு உட்டுகிறார் அவருக்கு WETA வின் வித்தியாசமான   நர்ஸ் மேக்கப் தோற்றமும் உடல் மொழி நடிப்பும் பொருத்தமாக உள்ளது 

 கீர்த்தி சுரேஷ்....கோபக்கார டாக்டராக நடிக்க,  சதிஸ்...பேச்சு காமெடி ரசிக்கும் படி உள்ளது    

படத்தின் முதல் பகுதிபெண்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் உள்ளது இடைவேளைக்குப் பிறகு லாஜிக் மீறலால் கொஞ்சம் தள்ளாடுகிறது   


ஆக மொத்தத்தில்......  

ஷேக்ஸ்பியர் டெம்ப்ளேட் (TEMPLET) நாடகத்தின் கதைக்கருவை கொஞ்சம் மாற்றி வந்துள்ள ரெமோ காதல் காமெடி திரைப்படம் இன்னும் நிறைய பழைய தமிழ் படங்களை நினைவுப் படுத்தினாலும் அதன் காதல் நகைச்சுவை காட்சிகளுக்காக பார்த்து ரசிக்கலாம் 


  படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........
 
 
ரெமோ - படம் எப்படி இருக்கு...?
 

படம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி....

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1