google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இருமுகன்-சினிமா விமர்சனம்

Thursday, September 08, 2016

இருமுகன்-சினிமா விமர்சனம்




சீயான் விக்ரமின் இரு வேறுபட்ட நடிப்புடன் இருமுகன் படம் நயன்தாரா,நித்யா மேனன் காதல் ரசனையுடன் ஓர்  அறிவியல் புனைக்கதையாக வெளிவந்துள்ளது 


மலேசிய இந்தியத் தூதரகத்தை SPEED என்ற சக்தி ஊட்டும் மருந்து உதவியால் தனியாளாக ஒரு முதியவர் தாக்குகிறார் அந்த SPEED மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானி திருநங்கை LOVE (விக்ரம்) அதை தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்தால் உலகப் பேரழிவு ஏற்படும் என்று LOVE ஐ அழிக்க இந்திய அரசு முன்னாள் ரா (RAW) அதிகாரி அகிலனை (விக்ரம்)யும் உதவிக்கு ஆருஷி (நித்யா மேனன்)யையும் அனுப்புகிறது 

LOVE என்பவன் நான்கு வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலில் தன் மனைவியும் சக ரா ஏஜென்ட் மீரா (நயன்தாரா) வை கொன்றவன் என்பதால் அகிலன் பழிவாங்கும் ஆவேசத்துடன்....
LOVE ஐ எப்படி அகிலன் அழிக்கிறார் என்பதே இருமுகன் படத்தின் மீதிக் கதை   

சீயான் விக்ரம் போலிஸ் அதிகாரியாகவும் திருநங்கையாகவும் உடல் மொழியால் அந்நியன் நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் 
போலிஸ் அதிகாரியாகவும் அகிலனின் மனைவியாகவும் வரும் நயன்தாரா நளினமாக காதலை வெளிப்படுத்த...
நித்யா மேனன்,தம்பி ராமையா,நாசர்.. பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை


இயக்குனர் ஆனந்த் சங்கர் கதையை விட ஆக்ஸன் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது பின் பாதி நிறைய லாஜிக் மீறல்களால் வெறுப்பாக செல்கிறது 
ஹாரீஸ் ஜெயராஜ் BGM வுடன் R D ராஜசேகரின் பிரமாண்டமான ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப் பிடிக்கிறது 

ஆக மொத்தத்தில்.....

சீயான் விக்ரமின் நடிப்புக்காகவும் பிரமிக்க வைக்கும் ஹாலிவுட் ஸ்டைல் காட்சி ஒளிப்பதிவுக்காகவும் இருமுகன் பார்க்கலாம் 



இருமுகன்-படம் எப்படியிருக்கு....?







படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1