google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தர்மதுரை-சினிமா விமர்சனம்

Wednesday, August 24, 2016

தர்மதுரை-சினிமா விமர்சனம்




காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை பெருமை படுத்துவதாகவும் மக்கள் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கே சேவை செய்யவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை விழிப்புணர்வு செய்யும் சமுக சிந்தனையுடன் இயக்குனர் சீனு ராமசாமியின் "தர்மதுரை" படம் பாராட்டப் படவேண்டிய ஓன்று 

மருத்துவரான தர்மதுரை (விஜய்சேதுபதி) குடிகாரனாக மாறி சீட்டுத்தொழில்  செய்யும் தன் நான்கு சகோதரர்களுக்கு தொல்லை கொடுப்பதால்.அவரை கொல்ல முடிவு செய்த சகோதரர்களிடமிருந்து.....
 தாய் பாண்டியம்மாள் (ராதிகா) உதவியுடன் அவருக்கே தெரியாமல் அவர்களின்  சீட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிக்கும் தர்மதுரை.....

 தன மருத்துவக் கல்லூரி தோழிகள் சுபாஷினி (தமன்னா) ஸ்டெல்லா (ஸ்ருஷ்டி) இருவரையும் தேடிப் போகிறார் 

அவரைத் தேடி விரட்டி வரும் சகோதரர்களிடம் தர்மத்துரை அகப்பட்டாரா...? என்பதை ஒரு பிளாஸ்பேக் மருத்துவக் கல்லூரி வாழ்க்கையும் அழகான ஒரு கிராமத்துக் காதலும் கலந்து படமாக்கப் பட்டுள்ளது 

இயக்குனர் சீனு ராமசாமியின் சமுக சிந்தனை நிறைய காட்சிகளிலும் கதாப்பாத்திரங்களிலும் தெளிவான வசனங்களுடன்  சித்தரிக்கப்பட்டுள்ளது புரோட்டா வசனம் ஒன்றே போதும்

விஜய்சேதுபதியின் குடிகாரராக,காதலராக,நண்பராக என்று முப்பரிமான நடிப்பில் மிளிர்கிறார் 

நடிகை ராதிகா கிராமத்து தாயாராக பழக்கப்பட்ட கதாப்பாத்திர நடிப்பில் அசத்துகிறார் 

வறுமையில் வாடிய முனியாண்டி காமராஜரின் மதிய உணவு சாப்பிட பள்ளிக்கூடம் போனதால் படித்து மருத்துவராக மாறியதால் காமராஜ் என்ற பெயருடன் நடித்துள்ள   நடிகர் ராஜேஷ் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் 

நடிகைகள் தமன்னா,ஸ்ருஷ்டி யை விட ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு அருமை 
அவ்வப்போது காமெடி தெளிக்கும் கஞ்சா கருப்பு குணச்சித்திர நடிப்பில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர் 

யுவன் சங்கர் ராஜாவின் கிராமத்து இசையும் பாடல்களும்  கலக்கல் சுகுமாரின் கிராமத்து இயற்கை காட்சிகள்,கோடைக்கானல் குளுமை படத்துக்கு பக்கபலம் 

ஆக மொத்தத்தில்.......

சமுக சிந்தனை விழிப்புணர்வு தொட்டு ஒரு கிராமத்துக காதலை நளினமாக காட்டி ஏதோ சமுகத்துக்கு சொல்ல நினைக்கும் இயக்குனர் சீனு ராமசாமியின் "தர்மதுரை" பார்க்கவேண்டிய படம்

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு......
தர்மதுரை-படம் எப்படி இருக்கு?





படம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1