google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிகரம் தொடு-சினிமா விமர்சனம்

Friday, September 12, 2014

சிகரம் தொடு-சினிமா விமர்சனம்

அப்பா-மகன் சென்டிமென்ட்,காதல்,நகைச்சுவையுடன் நகரும் சிகரம் தொடு சினிமா இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக ஏடிஎம் கொலை கொள்ளை என்று மின்னல் வேகத்தில் பயணித்து திகில் நாவல் படித்த உணர்வு......
sigaramthodu

ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாடியும்  அப்பாவும் இருக்கிறார் என்று படம் காட்டுவதே சிகரம் தொடு படத்தின் கதை......

ஒரு காலை இழந்த போலிஸ் அதிகாரி செல்லப்பா (சத்யராஜ்) தன் மகன் முரளி பாண்டியனை  (விக்ரம் பிரபு) விருது வாங்கும் போலிஸ் அதிகாரியாக பார்க்க கனவு காண்கிறார் ஆனால்....

முரளி பாண்டியனோ போலிஸ் வேலையில் வெறுப்படைந்து பேங்க் ஆபிசராக முயற்சி செய்கிறார் அதேபோல் போலிஸ் வேலையை வெறுக்கும் டாக்டர்  அம்புஜம் (மோனல் காஜர்) மீதும் காதல் கொள்கிறார்

அதேநேரம்...அப்பாவின் ஆசையை தட்ட முடியாத முரளி வேண்டா வெறுப்பாக போலிஸ் அதிகாரியாகவும் ஆகிவிடுகிறார் அம்புஜத்துடன் காதலையும் தொடர்கிறார்

ஒருநாள் செல்லப்பா ஒரு ஏடிஎம்- மைக்  கொள்ளையடித்த இரண்டு முகமூடி கொள்ளையரை பிடித்து மகன் போலிஸ் அதிகாரியாக உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்

கொள்ளையர்கள் காவல் நிலையத்திலிருந்து செல்லப்பாவையும் சுட்டுவிட்டு  தலைமறைவாகிறார்கள்

முரளி திறமையுடன் அந்த போலி கிரடிட் கார்ட் மூலம் கொள்ளை அடிக்கும் கும்பலை துப்பறியும் போது அவரது காதலி டாக்டர் அம்புஜத்தையும் கடத்திவிடுகிரார்கள்

முரளி அந்தக் கொள்ளையரிடமிருந்து தன் காதலி அம்புஜத்தை மீட்டாரா....?  
அவரது அப்பாவை காப்பாற்றி பதக்கம் வாங்கும் அதிகாரியாக மாறினாரா....? என்பதை திரையில் காணுங்கள்..........

sigaramthodu

 படத்தின் சிறப்பான காட்சிகளாக........
-சத்யராஜ் கொள்ளையருடன் போடும் சண்டை....
-விக்ரம் பிரபு சதிஸ்வுடன் விமானத்தில் அடிக்கும் லூட்டி....
-ஹரித்வாரில் சீட்டு எடுத்து குறி சொல்லும் சாமியார் 
-சதிஷ் ஜிம் மாஸ்டராக சிரிப்பூட்டும் காட்சிகள்....
-விக்ரம் பிரபு போலிஸ் பயிற்சியில் செய்யும் அடாவடிகள்...
-போலிஸ் லாக்கப்பிலிருந்து கொள்ளையர்கள் தப்பிப்பது...
-நடிகர் சிங்கம் புலியின் தற்கொலை மிரட்டல் காட்சி...
-இமயமலை குளுமையுடன் கிளுகிளுப்பு ஊட்டும் பிடிக்குதே... பாடல் காட்சி
இப்படி நிறைய காட்சிகள் மனத்தைக் கவர்கின்றன 
  
ஒரு துப்பாக்கி சுடும் சப்தம் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேனில் ஒருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவது போல் இயக்குனர் கவுரவ் நாராயணன் சிகரம் தொடு படத்தை ஒரு திகில் படம் போல் ஆரம்பிகிறார்  

இந்தியாவில் பரவலாக நடைபெறும் ஏடிஎம் கொள்ளை,போலி கிரெடிட்,டெபிட் அட்டைகள் மோசடி திருட்டு போன்ற குற்ற நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்படியே வணிகரீதியாக பாசம்,காதல்,நகைச்சுவை...என்று கலந்துகட்டி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் அவரும் வில்லன்களில் ஒருவராக வருகிறார் 


காதல் காட்சிகளில் யதார்த்தமாகவும் அதிரடிக்காட்சிகளில் ஆக்ரோஷமாகவும் முகபாவனை காட்டும் விக்ரம் பிரபு....ஏனோ சோகக் காட்சிகளில் மட்டும் சொதப்புகிறார்

கொஞ்சம் காஜல் கொஞ்சம் லட்சுமி மேனன் என்று அழகு காட்டும் மோனல் காஜர்...... இன்னும் கொஞ்சம் நடித்தால் கோலிவுட்டில் நிலையான இடம் கிடைக்கும்

சத்யராஜ்....பொறுப்பான  அப்பாவாகவும் வேலையில் ஒரு காலை இழந்த  போலிஸ் அதிகாரியாகவும் சிறப்பாக நடிக்க....அவருக்கு நண்பராக கே.எஸ்.ரவிகுமார் ஒரு காட்சியில் வந்து கலக்குகிறார் 

ஜிம் மாஸ்டராக வரும் சதிஷ்........நிறைய சொரி விட்களுடன் ஆனாலும் நம்மை சிரிக்க வைத்து கலகலப்பு ஊட்டுகிறார்  இன்னும் கோவை சரளா, சிங்கம் புலி,லொள்ளு சபா மனோகர்  நம்மை சிரிக்க  வைக்க முயல்கிறார்கள்

டி.இமானின் இசையில்........BGM விட பாடல்கள் இனிமை பிடிக்குதே.....காதல் மெலடி பாடல் இதயத்தை தொடுகிறது என்றால் அன்புள்ள அப்பா பாடல்....மனதை உருக்குகிறது ஸீன்னு ஸீன்னு பாடல் ...80 களில் உள்ளது போல் கலக்கல்

விஜய் உலகநாத் ஒளிப்பதிவில்......ஹரித்துவார் பயணக் காட்சிகள்,இயற்கை கொஞ்சும் பனி படர் இமயமலைக் காட்சிகள் காண்பதற்கு குளுமை டக்கு டக்கு....பாடலில் வரும் கார்டுன் காட்சிகள் புதுமை
                        thanks-YouTube by Sony Music India  Sony Music India


சிகரம் தொடு.........முழு நீள த்திரிலர் படம் இல்லை என்றாலும் திகில் பட நேயர்களுக்கு பிடிக்கும் அதேநேரம் இளைஞர்களுக்கு கொஞ்சும் காதலுடனும் பெரியவர்களுக்கு அப்பா-மகன் உறவுவுடனும் படம் காட்டுகிறது 

ஆயினும் முதல் பாதியில் வரும் காதல்,சென்டிமென்ட்,நகைச்சுவை  காட்சிகளை குறைத்தும்  எடுத்துக்கொண்ட ATM கொள்ளை கதைக்கருவை பட்டை தீட்டியுமிருந்தால்....சிகரம் தொடு    படம் இன்னும் படு வேகம் எடுத்து சிகரத்தை தொட்டு இருக்கும்



படம் பற்றிய மதிப்பீடு...........

சிகரம் தொடு-டம் எப்படியிருக்கு....?



படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1