google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜிகர்தண்டா-சினிமா விமர்சனம்

Friday, August 01, 2014

ஜிகர்தண்டா-சினிமா விமர்சனம்

போர்ப்ஸ் இந்தியா மேக்கஸின் வெளியிட்ட 2014-ல் பார்க்கவேண்டிய 5 படங்களில் ஒன்றாக இடம்பிடித்த ஜிகர்தாண்டா........கோலிவுட்டை புரட்டிப் போடவந்த நெம்புகோல் சினிமா

சென்னையிலிருந்து ஒரு குறும்பட இயக்குனர் கார்த்தி சுராஜ் (சித்தார்த்) தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பாக ஒரு ரவுடியை பற்றி நெடும்படம் எடுக்க  மதுரையில் உள்ள பயங்கர ரவுடி கட்டபஞ்சாயத்து  ,தாதா, கொலைகாரனான அசால்ட் சேதுவை  (பாபி சிம்ஹா) தேடி வர......

சேதுவோ  தன்னைப்பற்றி கார்ட்டூன் படம்போட்டு கதை எழுதிய பத்திரிகை ரிப்போர்டரை தீயிட்டு கொழுத்திய  படுபயங்கரமானவன் என்பதை அறிந்த கார்த்தி  மதுரையில் உள்ள அவனது நண்பன் (கருணாகரன்) உதவியுடன் சேதுவின்  அடியாட்களுடன்   தொடர்புகொண்டும்.......

சேதுக்கு சாப்பாடு போடும் இட்லிகாரம்மாவின் மகள் கண்ணம்மாவை (லட்சுமி மேனன்) காதலிப்பதுபோல் நடித்தும்  சேதுவின் கதையை தெரிந்துகொள்ள முயலுகின்றான்.......

கார்த்தி  சேதுவின் கதையை எப்படி படமாக்கினான்...? என்பதை பல திகில் திருப்பங்களுடனும் படம் காட்டுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தாண்டா..... படத்தின் சிறப்பு அதன் கதையில் என்பதைவிட இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ் அடுக்கடுக்காக வைத்திருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் திருப்பமான நிகழ்வுகளிலும் உள்ளது அதை நீங்கள் படம் பார்த்தால் மட்டுமே அனுபவிக்க முடியும் 

யதார்த்தமான வசனங்கள் நிறைய உண்டு ஒரு பயங்கரமான கொலைவெறி படத்தை காமெடி படமாக அரங்கம் அதிர சிரிக்க வைக்கும் காட்சிகள்

சித்தார்த்......படித்த மேல்தட்டு இளைஞனாக ஒரு இளம் இயக்குனர் போல் யதார்த்தமாக வருகிறார் லட்சுமி மேனனுக்கு அதிக காட்சிகள் இல்லை ஆயினும் கடைசியில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கவர்ச்சி மிஸ்ஸிங் முகம் மேக்கப் போடாததுபோல் உள்ளது 

பாபி சிம்ஹாதான் படத்தின் ஹீரோ போன்று கலக்கலாக வருகிறார் சில நேரங்களில்  படு பயங்கரமும் சில நேரங்களில்   காமெடியுமாக கலக்குகிறார் விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றம் சிறப்பாக அமைந்துள்ளது கருணாகரன் காமெடி நடிகராக பின்னி பெடல்லேடுக்கிறார்

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையை பயம் காட்டுகிறது பாடல்கள் கிராமத்து வாசனையுடன் புதுமையாக உள்ளது கிணற்றுக்குள் நடக்கும் குத்துப்பாட்டு செம கலக்கல் இரவில் நடக்கும் காட்சிகள் மற்றும் மதுரை கோபுரக் காட்சிகள் ஒளிப்பதிவும் பாராட்டலாம்

ஆக மொத்தத்தில் அதிரடிப் பயங்கரம் ஒருபுறம் என்றும் குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி இன்னொரு புறம் என்றும் படம் காட்டும் ஜிகர்தாண்டா........ கோலிவுட்டை புரட்டிப் போடவந்த நெம்புகோல் சினிமா 

படம்  பார்த்தவர்களின் மதிப்பீடு..........


ஜிகர்தாண்டா-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
முடிவு-8/8/2014




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1