google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வேலையில்லா பட்டதாரி-சினிமா விமர்சனம்

Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி-சினிமா விமர்சனம்



எவ்வித எதிர்பார்ப்புமின்றி காதல்,காமெடி கலாட்டாவில் கலகலப்பாக நகரும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இடைவேளைக்கு பிறகு யதார்த்தமான கட்டுமான கம்பெனிகளின் தில்லுமுல்லுகளை  தோலுரித்து த்திரிலிங் அதிரடியாக  மின்னல் வேகத்தில் பயணிக்கிறது.......

என் பெயர் ரகுவரன் நான் ஒரு வேலையில்லா பட்டதாரி என்று ஆரம்பிக்கும் படம்.......
சொந்தமாக பில்டிங் கட்டவேண்டும் என்று வேறு வேலைகளுக்கு போக விரும்பாத திறமையான B.E (civil) Eng.பட்டதாரி இளைஞர்  ரகுவரன் (தனுஷ்) கண்டிப்பான தந்தை (சமுத்திரக்கனி) பாசமுள்ள தாய் (சரண்யா) வேலைபார்க்கும் தம்பி உடன் வாழ்கிறார்

எதிர்வீட்டுக்கு குடிவரும் மாதம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் ஷாலினி (அமலா பால்) மீது காதல் கொள்ள...சிறு மோதலுக்குப் பிறகு அம்மணியும் லவ்வ... எதிர்பாராமல் தன் தாய் மரணத்துக்கு காரணமாகிறார்

அதனால் அவருக்குள் இருக்கும் லட்சிய தீ பற்றி எரிய....ஒரு கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்து ரூ.300 கோடியில் அரசு குடிசை மாற்றுவாரிய கட்டுமான ஆர்டரைப் பெறுகிறார்

அங்கே அவருக்கு வில்லனாக அருள் சுப்பிரமணியம் (அமிடேஷ்) என்ற பெரிய பித்தலாட்ட கட்டுமான கம்பெனி நிறுவனர் மகன் இடையூறுகள் பல செய்ய....
ரகுவரன்  VIP என்ற வேலையில்லா பட்டதாரி பேஸ்புக் நண்பர்கள் துணையுடன் அரசு குடியிருப்பை வெற்றிகரமாக கட்டி முடிப்பதே படத்தின் கதை........

இயக்குனர்  வேல்ராஜ் முன்பாதி கலகலப்பாகவும் பின் பாதி அதிரடியாகவும் குடும்ப சென்டிமென்ட் கலந்த அழகான ஒரு காதல் கதையை படைத்துள்ளார் படம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தனுஷ் என்ற கதாப்பாத்திரமாக மாறிவிடும் நடிகனுக்காகவும் அவரது ரசிகர்களுக்காகவும்  எழுதப் பட்ட கதையுடன் படம் காட்டுகிறார் வசனங்கள் நச்சென்று இருக்கின்றன பன்ச்க்கு பஞ்சமில்லை நிறைய காட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாமலை,படையப்பா. படக்காட்சிகளை நினைவுப்படுத்துகிறது

தனுஷ்...தனக்கே உரிய ஸ்டைலுடன் காமெடி-காதல்-அதிரடி காட்சிகளில் கலக்கலாக வருகிறார் கிளைமாக்க்ஸ் சண்டைக்காட்சியில் புருஸ் லீயை நினைக்க வைக்கிறார் 

அமலா பால்....காதலுக்கும் அவ்வப்போது தனுஷ்க்கு ஆக்சிசன் கொடுத்து ஊக்குவிக்கவும் வருகிறார் சமுத்திரக்கனி........அப்பா வேடத்தில் புதிய பரிணாமம் நல்ல நடிப்பும்கூட சரண்யா......வழக்கம் போல் பாசக்கார அம்மா பாதியிலேயே அவுட் ஆனாலும் கடைசிவரை இன்னொரு உடலில் வாழ்கிறார் விவேக்........இடைவேளைக்குப் பிறகு வந்து அவரது தோஸ்த் செல் முருகனுடன்  சிரிக்க வைக்கிறார்

அனிருத் இசையில் ...வாட் ஏ கர்வாட்.....பாடல் கலக்கல் என்றால் தனுஷ்-ஜானகி பாடிய அம்மா அம்மா... பாடல் உருகவைக்கும் ரகம் அனிருத் பாடிய ஊதுங்கடா சங்கு...பாடல் ஆட்டம் போட வைக்கும் என்றால் தனுஷ் பாடிய பூ இன்று நீயா....காதுக்கு இனிமை

அருன்பாபு ஒளிப்பதிவில்.........பூ இன்று நீயாக....பாடல் கண்ணுக்கு குளுமை சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கிறது

வேலையில்லா பட்டதாரி......தனுஷ் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தோன்றினாலும்  இன்றைய கட்டுமான கம்பெனிகளின் தில்லு முல்லுகளை காட்சிப்படுத்திய விதத்தால் வேறுபடுகிறது...

வேலையில்லா பட்டதாரி......இன்றைய காலகட்டத்தில் பேஸ் புக் வலைதளத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியையும் எடுத்துரைப்பதால் எல்லோரும் கண்டுகளிக்கலாம்

என்  பார்வையில்........வேலையில்லா பட்டதாரி படம் நன்று
மற்றபடி....படம் பார்த்தவர்கள் மதிப்பீடு தெரிந்துகொள்ள..........
(தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டும் வாக்களிக்கவும்.........)
வேலையில்லா பட்டதாரி படம் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1