google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சதுரங்க வேட்டை-சினிமா விமர்சனம்

Sunday, July 20, 2014

சதுரங்க வேட்டை-சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு மணிவண்ணன் போல் இயக்குனர் வினோத்தின் லொல்லு நையாண்டி வசனங்களுடன்....மீண்டும் ஒரு சூதுகவ்வும் படம் போல் சமுதாய பித்தலாட்டங்களை கதைக்களமாகக் காட்சிப்படுத்தும் சினிமா....சதுரங்க வேட்டை 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவது தவறில்லை என்றும்  பணம்தான் எல்லாமே என்ற பாலிசிக்கு சிறுவயதிலேயே தள்ளப்பட்ட காந்தி பாபு (நடராஜ்) வின் பித்தலாட்ட வாழ்க்கை பயணம் கடைசிவரை தொடர்ந்ததா...? என்பதை  எட்டு நிகழ்வுகளாக  காட்சி படுத்தி தன் குத்தீட்டி வசனங்களால் பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார் இயக்குனர் வினோத் 

கடந்த காலத்தில் நாம் கண்ட நடுத்தர பாமர மக்கள் தங்கள் பணப் பேராசையால்  அறிந்தும் அறியாதது போல் தொடர்கதையாய் ஏமாறுவதும் ஏமாற்றாப்படுவதும்தான் கதைக்களம் 

படத்தின் கதாநாயகன் பெயர் காந்திபாபு என்பது அவனது தாயாரால் காந்தி போன்று உண்மையாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்படுகிறது ஆனால் அவன் செய்யாத பித்தலாட்டங்கள் இல்லை இன்றைய சமுதாயத்தில் வள்ளல் போன்ற பட்டபெயரில் பிரபலங்கள்...? செய்யும் மொள்ளமாரித்தனங்களை  தன் நக்கலான திரைக்கதையால் தோலுரிக்கிறார் இயக்குனர் வினோத்........

ஒவ்வொரு நிகழ்வுகளும் வேடிக்கையாகவும் அர்த்தமுள்ளதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது MLM (Multi Level Marketing) கம்பெனி சாதாரண குழாய் தண்ணீரை  கேன்சரை குணப்படுத்தும் மினரல் வாட்டர் என்று விற்பதும் நாம் அறிந்த காந்தப்படுக்கை கம்பெனிகளையும்   Amway போன்ற போலிக் கம்பெனிகளையும்  நினைவுப்படுத்துகிறது 

இப்படித்தான்'தி ரைஸ் புல்லிங்' ( 'Rice Pulling'),  50% தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை செய்யும் gold scam...போன்ற  காட்சிகள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன 


சதுரங்க வேட்டை........படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் வணிக சினிமா ரீதியான கட்டாயத்தில் சமாச்சாரங்களாலும் காதல், சென்டிமென்ட்,சோகத்தில் தள்ளாடினாலும் இன்னும் கொஞ்சம் விரிவாக இயக்குனர் தன் நோக்கத்தை விவரித்திருந்தால் சூது கவ்வும் படத்தை மிஞ்சியிருக்கும்

நடராஜ்,இஷ்ரா,பொன்வண்ணன்,இளவரசு.....என்று நடிகர்களுடன் இயக்குனர் வினோத்தின் பேனாவும் சிறப்பாக நடித்துள்ளது  படத்திற்கு பாதிப்பில்லாத பின்னணி இசை மற்றும் இயல்பான ஒளிப்பதிவு

சதுரங்க வேட்டை......
இப்படத்தை நீங்கள் விமர்சனம் படிப்பதால் மட்டுமே அதன் உள் அர்த்தத்தை உணரமுடியாது அமைதியாக திரையில் கண்டுகளியுங்கள் அதன் அர்த்தமுள்ள நையாண்டித்தனத்தை அனுபவித்து மகிழுங்கள் 

                                                                                                .........பரிதி.முத்துராசன் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1