google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரிமா நம்பி-சினிமா விமர்சனம்

Friday, July 04, 2014

அரிமா நம்பி-சினிமா விமர்சனம்


பி.எஸ்.எல்.வி ராக்கெட் வேகத்தில் காதல்,அரசியல்,சஸ்பென்ஸ், அதிரடி, திகில்..காட்சிகளுடன் விர்ரென்று பறக்கிறது விக்ரம் பிரபு-பிரியா ஆனந்த் நடித்த இயக்குனர் ஆனந்த் ஷங்கரின் த்திரிலர் திரைப்படம்....அரிமா நம்பி 

புராண காலத்திலேயே கண்டதும்  காதலாக ராமன்-சீதை காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது இந்த டாஸ்மாக் காலம் மட்டும் விதிவிலக்கா? BMW ஷோ-ரூம் சூப்பர்வைசர் அர்ஜுன் கிருஷ்ணா (விக்ரம் பிரபு) ஒரு பப்பில்  நண்பர்களுடன் பீர் அடிக்கும் போது அங்கே நண்பிகளுடன் வரும் அனாமிகா (பிரியா ஆனந்த்) மீது காதல் கொள்ள....

அடுத்த நாளே இரவு அம்மணியை டின்னருக்கு அழைத்து தண்ணியடிக்க..... போதாக்குறையாக அம்மணியின் அபார்ட்மென்ட் வீட்டிலும் போய் ஒட்கா அடிக்கும் போது......அடடா அர்ஜுனை அடித்து போட்டு அம்மணியை ஒரு லோக்கல் ரவுடி கூட்டம் கடத்திச் செல்கிறது 

ஒரு  நல்ல போலிஸ் அதிகாரி எம்.எஸ்.பாஸ்கர் துணையுடன் அர்ஜுன் அனாமிகாவை தேடும்போது.....
அம்மணியின் அப்பா ரகுநாத் ஒரு டி.வி.சானல் COO என்றும் அவரிடம் மாட்டிக்கொண்ட அடுத்த பிரதமர் அளவுக்கு சக்தியான மத்திய அமைச்சர் ரிஷி தேவ் (JD Chakravarthy) தன் கள்ளக் காதலியும் நடிகையுமான அனுஷா வர்மாவை கொலை  செய்த காட்சி பதிவான( SCAN DISK) மெமோரி கார்ட்டை திரும்பப் பெறவே அம்மணியை கடத்தியது தெரியவருகிறது 

அதிகார பலம்,பணபலம் மிக்க மத்திய அமைச்சர் ரிஷி தேவை எதிர்த்து
 அர்ஜூன்  தன் இரண்டு நாள் காதலி அனாமிகாவை காப்பாற்றினாரா?
அந்த மெமோரி கார்ட்டை கைப்பற்றி அமைச்சருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா....? என்பதை திரையில் காணுங்கள் 

படத்தின்  சிறப்பான காட்சிகளாக......
-பப்பில் அர்ஜுன் பாடும் யாரோ....பாடலும் இசையும் ஆட்டமும் 
-ரவுடியிடமிருந்து  அர்ஜுனை எம்.எஸ்.பாஸ்கர்  காப்பாற்றும் காட்சி.....
-செல்போன் சிம் கார்டை வைத்து அர்ஜுனை ட்ரெஸ் பண்ணும காட்சி
-அர்ஜுன் டி.வி.சானல் அலுவலகத்தில் ஸ்கேன் டிஸ்க்கை திருவது 
-பேங்கில் வில்லன் ஆட்களை அர்ஜுன் கடத்தும் காட்சி 
-கொலையுண்ட அனுஷ்கா வர்மா உடலை பார்த்து பக் நாய்க்குட்டி கொஞ்சும் மனதை வருடும் காட்சி...
- நட்சத்திர ஓட்டலில்  அர்ஜுன் யு-டூப்பில் அப்-லோட் பண்ணும் போது நண்பனின் வருகையும் பிளாஷ்பேக் காட்சியும்.........
-போலிஸ் உயரதிகாரி அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பேனாவை வைத்து செய்யும் கொலை.......
-மாலில் அர்ஜுன் போலிஸ்க்கு தண்ணி காட்டும் வித்தைகள்  
-அர்ஜுன்-ரிஷி தேவ் கிளைமாக்ஸ் லைவ் ஒளிபரப்பு 
இன்னும் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் சில லாஜிக் மீறல் இருந்தாலும் சிறப்பாக உள்ளன 

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் திறமையான திரைக்கதையாலும் நிறைய ட்விஸ்ட்கள் நிறைந்த  விறுவிறுப்பான காட்சிகளாலும் படத்தை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திலிருந்து கடைசிவரை திகிலுடன் அடுத்து என்ன நடக்கும்...?  என்ற எதிர்பார்ப்புடனும் படம் பார்ப்பவர்களை இருக்கையின் விளிம்பிலேயே அமரவைக்கிறார்  நிறைய கட்டிங் போட்டால் ஒரு ஹாலிவுட் த்திரிலர்  படம் போல் ஆகியிருக்கும் 

விக்ரம் பிரபு அதிகம் பேசாமல் அமைதியாக அவருக்கே உரிய யதார்த்தமான அதிரடி நடிப்புடன் மிளிர்கிறார் பிரியா ஆனந்த் சில நேரங்களில் அழகாக தெரிகிறார் எம்.எஸ்.பாஸ்கர் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார் மற்றபடி அமைச்சர்,போலிஸ் அதிகாரியாக நடித்தவர்கள் பரவாயில்லை 

ட்ரம்ஸ் சிவமணியின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை அதிரடியாக படத்துக்கு விறுவிறுப்பு ஊட்டுகிறது கொஞ்சம் ட்ரம்ஸ் சத்தம் அடிக்கடி கடிக்கிறது ஆனாலும் யாரோ யார் அவள்? பாடல் அருமை இதயம் என் இதயம்...மெலோடி மனதில் நிற்கிறது 

ராஜசேகர்  ஒளிப்பதிவில் நள்ளிரவு சேஸிங் காட்சிகள் தெளிவாகவும் அதேநேரம் படத்தோடு நம்மை ஈர்க்கும் விதமாக பாடல் காட்சிகள் அமைந்துள்ளன 

ட்விட்டர்,பேஸ்புக்,யு-டியுப், இ-மெயில்,ஸ்கேன் டிஸ்க்,பட்டன் கேமரா,ஐ-போன்,இணையம்,லைவ் ஒளிபரப்பு.... போன்ற நவீன சமாச்சாரங்களை நன்றாக பயன்படுத்தி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் பி.எஸ்.எல்.வி ராக்கெட் வேகத்தில் கொண்டு செல்லும் அரிமா நம்பி திரைப்படம்.......என் பார்வையில்....... நன்று 



படம்பார்த்தவர்களின்  மதிப்பீடு.........?

அரிமா  நம்பி-படம் எப்படியிருக்கு?




படம் பார்த்தவர்கள் அல்லது படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........                                                           அன்புடன்

   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1