google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வடகறி-சினிமா விமர்சனம்

Thursday, June 19, 2014

வடகறி-சினிமா விமர்சனம்


ஒரு செல் போனை வைத்து காதலும் காமெடியுமாக முதல்பாதியும் போலி மருந்து பற்றிய த்திரிலிங் கலந்த ட்விஸ்ட்கள் உள்ள பின்பாதியும் ஜெய்-சுவாதியுடன் சரவண ராஜன் செய்த வடகறி......... போரடிக்காத பொழுதுபோக்கு படம்

ஒரு ஐ-போனை கண்டெடுத்த ஒருவன் அதை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கும் போது சில சங்கடங்களில் மாட்டிக்கொண்டு எப்படி மீள்கிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறார் வடகறி இயக்குனர்

தன் நண்பன் வடகறி (RJ பாலாஜி) தூண்டுதலால்  ஐ-போன் வைத்திருப்பவர் களைத்தான் பெண்கள் காதலிப்பார்கள் என்ற எண்ணத்துடன் இருக்கும் மெடிக்கல் ரெப் சதிஷ் (ஜெய்)  நவீனா (சுவாதி) வை விரட்டி விரட்டி காதலிக்க.. சந்தர்ப்பவசமாக ஒரு டீக்கடையில் ஒரு ஐ-போனை கண்டெடுக்கிறான்

அவனது ஆட்டோ ஓட்டும் அண்ணன் அருள்தாஸ் ஒரு முறை தன் ஆட்டோவில் கண்டெடுக்கும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்து போலீசாரிடம் பரிசு வாங்கும் நல்லவர் அதனால் மனம்திருந்திய சதிஷ் தான் கண்டெடுத்த ஐ-போனை உரியவரிடம் ஒப்படைக்க போகிறான்.....

அங்கே....போலி மருந்துகளையும் காலாவதியான மருந்துகளையும் மார்கெட்டிங் செய்யும் ஒரு சமுக விரோதி கூட்டத்திடம்  சதீஷ் தவறுதலாக  மாட்டிக்கொள்கிறான்

சதிஷ்தான் கூட்டத் தலைவன் ரவிசங்கர் என்று தயாளன் (அஜய் ராஜ்) என்ற இன்னொரு கூட்டம்  அவன் நண்பன் வடகறியை பினயமாக பிடித்து வைத்து சரக்க ஒப்படைக்க துன்புறுத்துகிறது

சதீஷ்  உண்மையான ரவிசங்கரை கண்டு பிடித்து தன் நண்பன் வடகறியை மீட்டானா...? சதீஷ்-நவீனா காதல் என்ன ஆனது? என்பதே............















                                 
                                                                 


அறிமுக இயக்குனர்  சரவண ராஜன் படத்தின் முன்பாதியி காமெடியிலும் காதலிலும் நகரச்செய்து இடைவேளையில் திகில் ஊட்டி...பின்பாதி சஸ்பென்ஸ்...சேஸிங்...சென்டிமென்ட்  என்று கொண்டுபோகிறார் சன்னி லியோன் கவர்ச்சியை ஊறுகாய் மாதிரி ஒரு பாட்டோடு தொட்டுக்க வைத்துள்ளார்

ஜெய்.......வழக்கம் போல் காதலியிடம் பயந்த சுபாவத்தில் நடிக்கும் நடிப்பு இப்படத்திலும் தொடர்கிறது  சுவாதி........தன் தெத்து பல் அழகுடன் கொஞ்சி கொஞ்சி காதல் செய்கிறார் RJ பாலாஜி....தன் அட்டகாசமான டைமிங் ஒன்-லைனர் காமெடியில் அரங்கம் அதிரவைக்கிறார்.வெங்கட் பிரபு... பிரேம்ஜி  கவுரவமாக வருகிறார்கள் போகிறார்கள்  அருள்தாஸ்...... ஆட்டோகாரராக அருமையான நடிப்பு

விவேக்-மெர்வின் இசையில் கானாபாலாவின் கேளுங்க அண்ணேன் கேளுங்க கேட்க்கிரமாதிரி உள்ளது சில பாடல்கள் நம்மை தலையை தடவுகிறது வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சன்னி லியோன் பாடல் செம கிக் என்றால் செல்போன் பேயாட்டம் அனிமேஷன் காட்சிகள் அருமை

என் பார்வையில்..........வடகறி நன்றாகத்தான் இருக்கு ஒருமுறை சாப்பிடலாம் இன்னொரு முறை என்றால் திகட்டும்   

vadacurry

மற்றபடி..........
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..........



படம் பார்த்தவர்கள் மட்டும் தங்கள் மதிப்பீடை தெரியப்படுத்துங்கள் ...நன்றி

   


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1