google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கவியரசர் கண்ணதாசன்-தெரியாத சில உண்மைகள்

Tuesday, June 24, 2014

கவியரசர் கண்ணதாசன்-தெரியாத சில உண்மைகள்


நடுநிலை பள்ளிப் படிப்பைக்கூட தொடராத கவியரசர் கண்ணதாசன் ஆங்கிலத்திலும் வார்த்தை விளையாட்டு வல்லமை கொண்டவர் என்பது தெரியுமா? அவரது பாடல்களில்  சாக்ரடிஸ்  தத்துவம்  ஒளிந்திருந்தன ஷேக்ஸ்பியரின் சில நாடக வரிகள் துள்ளிக்குதித்தன......

ஆங்கில கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மகள் கவிதாயினி சென்னையில் ஒரு நட்சத்திர தங்கும்விடுதியில் இருப்பதை அறிந்த கவியரசர் சந்திக்க நினைத்து அனுமதி மறுக்கப்பட........

கவியரசர் விடுதி ஊழியரிடம் ஒரு துண்டு சீட்டில் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்து அனுமதி கேட்டு அனுப்பினார்.அதைப் பார்த்த அடுத்த நொடியே அந்த அம்மையாரும் அறையைவிட்டு வெளியே வந்து மணிக்கணக்காக கவிஞரிடம் உரையாடினார் 

அப்படி  என்னதான் ஆங்கிலத்தில் கவியரசர் எழுதியிருந்தார்.....
"An Outstanding Tamil Poet is Standing Outside"......என்றுதான்.

எந்த கவிஞரும் இன்னொரு கவிஞரின் தாக்கத்தில் தான் எழுதியதை ஒப்புக்கொண்டதில்லை ஆனால் கவியரசர் சென்னை வானொலி தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் தான் ஷேக்ஸ்பியரின் மக்பெத் (Macbeth) நாடக வரிகள்..........
O sleep! O gentle sleep!
Nature’s soft nurse, how have I frighted thee,
That thou no more wilt weigh my eyelids down
And steep my senses in forgetfulness? .........என்பதின் தாக்கத்தில் உருவானதே தனது பாடல்.............


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்....என்று பெருமையாக சொல்லிக்கொண்டார் 


உலகதத்துவஞானி சாக்ரடிஸ் வரிகள்.......உன்னையே அறிவாய் என்பதின் முழு அர்த்தத்தையும்........

உன்னையறிந்தால் நீ 
உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 

தலை வணங்காமல் நீ வாழலாம்......என்ற கவியரசரின் பாடலில் ஒளிந்திருப்பதையும் ஒரு மாபெரும் தத்துவத்தை எந்த ஒரு தமிழ் பாமரரும் பாடி மகிழச் செய்த கவியரசர் கண்ணதாசரே..........

நீ காவியத்தாயின் 
இளையமகன் மட்டுமல்ல
பாமரசாதியில் தனிமனிதன் 
நீ  கவிதை படைத்ததினால்........
உன் பேர் கவிதைக் கடவுள் 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1