google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோச்சடையான்-சினிமா விமர்சனம்

Friday, May 23, 2014

கோச்சடையான்-சினிமா விமர்சனம்


கோச்சடையான்-இப்படத்தை நல்லக் கண்ணு,நோள்ளக் கண்ணு,மாறு கண்ணு...என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் திரைக்கதை, தொழில்நுட்பம்,இசை...என்று பல பரிமாணங்களில் ஒரு சிறந்த படமே!!!!
 
படத்தின் கதையாக.......ஒரு மகன் தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்குவதுமே.

அனாதை சிறுவனாக கலிங்கா புரி நாட்டிற்கு வந்த ராணா (ரஜினிகாந்த்) அந்நாட்டின் தளபதியாகி அங்கே அடிமையாக வாழும் கோட்டை பட்டணத்தின் வீரர்களுடன்  படையெடுப்பது போல் நடித்து அவ்வீரர்களை காப்பாற்றி தன் சொந்த நாட்டிற்கு மீட்டுவருகிறான் 

கோட்டை  பட்டணத்தின் தளபதியாக மாறிய ராணா தன் நண்பன் இளவரசன் செங்கோடகனுக்கு (சரத்குமார்) தன் தங்கை யமுனாவை (ருக்மணி) மணமுடித்து வைக்கிறான் இதனால் கோட்டை பட்டிணத்தின் மன்னன ரிஷி கோடகன் (நாசர்)னின் கோபத்திற்கு ஆளாகிறான் ராணா 

தன் தந்தை கோச்சடையான் (ரஜினிகாந்த்) மரணத்திற்கு காரணமான மன்னனை ராணா தந்திரமாக கொலை செய்ய முயலும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

சிறையில்  தன்னைச் சந்திக்கும் தன்  காதலி இளவரசி வதனா தேவி (தீபிகா படுகோன்) யிடம் மன்னரின் நயவஞ்சகத்தையும் தன் தந்தை கோச்சடையான் கொலை செய்யப்பட்ட முன்கதையாக............

கலிங்க  புரிக்கும் கோட்டை பட்டிணத்திற்கும் நூற்றாண்டுகால பகை 
போரில்  வென்ற  கோட்டை பட்டிணத்தின் வீரர்களுக்கு தந்திரமாக உணவில் விஷ மருந்தை  ஏற்றிய கலிங்க புரி மன்னன்  ராஜா மகேந்திரா (ஜாக்கி ஷேராப்)விடம்  தளபதி கோச்சடையான் (ரஜினிகாந்த்) தன் வீரர்களை உயிர் பிழைக்க வேண்டி அடிமையாக விட்டுவருகிறான் ஆனால் கோட்டை பட்டிணத்தின் மன்னன ரிஷி கோடகன் நயவஞ்சகமாக குற்றம் சாட்டி கோச்சடையானை கொலை செய்கிறான்......

அதனால்  தன் தந்தை கோச்சடையான் மரணத்திற்கு பழிக்கு பழி வாங்கவே மன்னரை கொலை செய்ய வந்ததாக ராணா சொல்கிறான்

அதேநேரம் ராணாவை கைது செய்ய கலிங்க புரி மன்னன் ராஜா மகேந்திரா  தன் மகன் வீர மகேந்திரா (ஆதி) வுடன்  படைதிரட்டி வர.... ஆனால் வீர மகேந்திரனுக்கு கோட்டை பட்டிணத்தின் மன்னன ரிஷி கோடகன் தந்திரமாக தன் மகள் இளவரசி வதனா தேவியை மணமுடிக்க முயற்சி செய்ய.....

சிறையிலிருந்த ராணா தப்பித்து வந்து கலிங்கபுரி மன்னனையும் கோட்டை பட்டிணத்தின் மன்னனையும் கொன்றானா....? தன் காதலி இளவரசி வதனா தேவியை கரம்பிடித்தானா...? என்பதை வெள்ளித்திரையில் வண்ண வண்ண உயிரோட்டமுள்ள சித்திரங்களாக நட்பு,பாசம்,காதல்,குடும்பம், வீரம்,பக்தி, அதிரடி என்று பலபரிமானங்களில் படம் காட்டுகிறார் புதுமை இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின்............

படத்தின் சிறப்பான காட்சிகளாக.............

-படம் ஆரம்பிக்கும் போது... காட்டுவெள்ளத்தில் சிறுவன் ராணா அடித்துச் செல்லும் அதிபயங்க திகில் காட்சி 

-கலிங்கபுரி தளபதியாக ராணா ஆவேசமாக மலைக்குன்றை தாண்டி பறந்து வந்து மிக உயரமான கோபுரத்தில் கொடியேற்றும் ரஜினிகாந்தின் அறிமுக காட்சி

-ரானாவின் மாமனாக வரும் அமரர் நாகேஷ்  குடித்துவிட்டு தள்ளாடும் தத்ரூபமான காட்சிகள் 

-வியக்க வைக்கும் நடன அசைவுகளுடன் ராணாவும் வதனா தேவியும் காதல் செய்யும் கண்கவர் தேனிசை பாடல் காட்சி....

-மலைக்குன்றின் மீது  கோச்சடையானின் அட்டகாசமான ருத்திரதாண்டவம் 

-கோச்சடையான் கப்பலில் பாய்ந்து பாய்ந்து போடும் அதிரடி சண்டைக்காட்சிகள் 

-ராணா தந்திரமாக கோபுரத்திலிருந்து நாசரை தள்ளி கொலை செய்ய முயல்வதும் பின் காப்பாற்றுவதுமான திகில் காட்சி  

-ராணா சிறையிலிருந்து தப்பிக்க கழுத்தைப் புலிகளை தந்திரமாக வரவழைத்து சண்டையிடுவது.

-கிளைமாக்ஸில் ராணா இரட்டைக் குதிரை மீது நின்று போரிடும் போர்களக் காட்சிகள் 

இன்னும்  இதுபோன்ற அரிய பல காட்சிகள்...மனிதர்களால் செய்ய முடியாத வீர தீர செயல்களை மோஷன் கேப்ச்சர் தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தியும் கிராபிக்ஸில் வரைந்தும் முப்பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு நிஜத்தின் பிரதிபலிப்பாக காட்ட தொழில்நுட்ப குழுவினர் அதிசிரத்தை எடுத்துள்ளனர் 

இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த் தன் கனவிலும் கற்பனையிலும் வடித்து வைத்திருந்த இளமையானதன் தந்தையின் உருவத்தை இப்படத்தின் மூலம் காட்டுவதோடு....உலகளவில் தமிழர் பண்பாடு,நட்பு,காதல்,குடும்பம்,திருமணம்,கலாச்சாரம்....என்று பல சிறப்புகளையும் எடுத்துச்செல்கிறார் 

கே.எஸ்.ரவிகுமார்-கதையில் தொடர்ந்து அதிரடி நிகழ்வுகளும் திருப்பங்களும் வைத்தது மட்டுமல்லாமல் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ற பேண்டஸி கதையை தேர்ந்தெடுத்துள்ளது சிறுவர்கள் முதல்பெரியவர்கள் வரை கவர்கின்றது 

"எதிரிகளை ஒழிக்க பல வழிகள் உண்டு ...முதல் வழி மன்னிப்பு....."

இதுபோன்ற   வசனங்கள் நிறைய உள்ளன

ஏ.ஆர்.ரகுமான்-படத்தின்இன்னொரு நாயகனாக இருக்கிறார்  படத்திற்கு  சிறப்பு ஊட்டுபவரகவும் பின்னணி இசையில் கலக்குகிறார் இவரது இசை ... நமக்கு படத்தோடு ஒன்ற வைக்கும்  ஓர் ஈர்ப்பு விசை.....பாடல்கள் தேனிசை 

படத்தின்  பின்னைடைவு....அனிமேஷன் குறைபாடுகளை சரிகட்ட காட்சிகள் அனைத்தும் லாங்-ஷாட்டில் வைத்து உள்ளது. இடைவிடாமல் தொடர் அதிரடி-பிரமிப்பு காட்சிகள் வைத்து பார்வையாளர்களையும் இமைக்க விடாமல் பொம்மை போல் ஆக்கியது

படம் முழுக்க கேப்ச்சரிங் நுட்பம் பயன்படுத்தாமல் அப்பா கோச்சடையான் கதாபாத்திர காட்சிகளில் மட்டும் அவதார் படம் போல் பயன்படுத்திருந்தால்.....இன்னும் பிரமிப்பாக இருந்திருக்கும் 

தீபிகாவை   மொக்க பிகராக படம் வரைந்து சென்னை எக்ஸ்பிரஸ் அம்மணியை அவமானப்படுத்தியது 

சரத்குமாரை சத்தியமா நான் இல்லை என்று அவர் சொல்லும் அளவுக்கு அடையாளம் தெரியாமல் ஆக்கியது.....




ஆக மொத்தத்தில்..............

கோச்சடையான்-இப்படத்தை நல்லக் கண்ணு,நோள்ளக் கண்ணு,மாறு கண்ணு...என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் திரைக்கதை, தொழில்நுட்பம்,இசை...என்று பல பரிமாணங்களில் ஒரு சிறந்த படமே!!!!

beach

நண்பர்களே!....
நீங்கள் படம் பார்த்தவராக  இருந்தால் இங்கே மதிப்பீடு செய்யுங்கள் இல்லையேல் படம் பார்த்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள்...........



 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1