google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னமோ ஏதோ-சினிமா விமர்சனம்

Tuesday, April 29, 2014

என்னமோ ஏதோ-சினிமா விமர்சனம்


தற்போதைய காதலையும் காதலர்களையும் ஏனோ தானோவென்று பார்வையாளர்களால் ஜீரணிக்க முடியாத காட்சிகளால் படம் காட்டி பரிதாபமாக முனங்கச்செய்யும்.......என்னமோ ஏதோ 

படத்தின்  கதையாக.......இன்னும் முதிர்சியடையாத இளம் காதலர்கள்  இடையில் தோன்றும் லவ்-பிரேக் அப்-மீண்டும் லவ் என்று  காதலை விளையாட்டுத்தனமாக காட்டுவதே 

ஒரு கிரிமினல் ரவுடி சக்ரவர்த்தி (பிரபு) ஹைதராபாத்தில் ஒரு கலயானத்தை தடுத்து நிறுத்தச் செல்லும் இளைஞன்   கவுதமை (கவுதம் கார்த்திக்) காரில் கடத்துவதும்....வழிப்பயனத்தில் போர் அடிக்காமலிருக்க  துப்பாக்கி முனையில் கவுதமிடம் அவரது காதல் கதையைக் கேட்பதுமாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் தொடங்குகின்றது 

பிளாஷ்பேக் கதையாக......
ஒரு டிவி சேனலில் வேலை செய்யும் கவுதம் தன் முதல் காதலை சிம்ரன் என்ற காதலியிடம் சொல்லும் போது விபத்தில்  சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட...அங்கே   அவனது காதலி சிம்ரனுக்கும்  டாக்டருக்கும் காதல் பற்றிக் கொள்கின்றது அவர்கள்  காதல் பிரேக்-அப்  

அவனது பிரேக்-அப் காதலி சிம்ரனின்  கல்யாணத்திற்கு  சென்ற இடத்தில் கவுதம் அங்கே அந்த டாக்டரால் கைவிடப்பட்ட காதலி நித்யா(ராகுல் பிரீத் சிங்) வை சந்தித்து காதலிலே தோல்வியடைந்த இருவரும் போதையில் தள்ளாடி காதலர்களாகின்றார்கள்.... கவுதம்-நித்யா காதல் கொடிகட்டி  பறக்க நித்யா வேறு ஒருவருக்கு நிச்சயக்கிப்பட இவர்கள் காதலும் பிரேக்-அப் 

இப்போது கவுதமுக்கு  தன்  நாய்க்குட்டியை வெட்டினரி ஆஸ்பிடலுக்கு  கொண்டு போன இடத்தில் அங்குள்ள டாக்டர் காவ்யா (நிகேஷா பட்டேல்) மீது காதல் இருவருடைய காதலும் நல்லா போய்க்கொண்டிருக்கும் போது அங்கேயும் பிரேக்-அப் ...ம்...காவ்யா வேறு ஒருவரை மணந்து கொள்கின்றாள் 

மீண்டும் நித்யாவுக்கு கவுதம் மீது காதல் வந்து அவனது வீட்டுக்கு வரும்போது அங்கே கவுதமின் முன்னாள் காதலியும் இந்நாள் நண்பியுமான காவ்யா கழுத்தில் தாலியுடன்  இருப்பதை பார்த்து வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதிக்கின்றாள் 

தனது காதலி நித்யாவின் கல்யாணத்தை தடுக்க போகும் வழியில்தான் கவுதம் சக்ரவர்த்தியால் கடத்தப்படுகிறான் இந்த தெய்வீக காதல் கதையெல்லாம் நமக்கு தெரியவருகின்றது

அப்புறம் சக்ரவர்த்தியை அடித்துப் போட்டுவிட்டு கல்யானமண்டபத்திற்கு வருகின்றான் கவுதம் ஆனால் நித்யாவுக்கு கவுதம் மீது தப்பு இல்லை என்று தெரிந்ததால் மணமகள் கோலத்தில்  கவுதமைத்  தேடி அங்கிருந்து தப்பி ஓடிவரும் போது சக்ரவர்த்தியிடம் மாட்டிக்கொள்கின்றாள்

சக்ரவர்த்தியிடமிருந்து நித்யா தப்பித்து கவுதமுடன் இணைந்தாளா....? கவுதம்-நித்யா காதல் என்ன ஆனது...? ஸ்...ஸ்....அப்பாடா....என்ன நண்பர்களே தலை சுற்றுகிறதா? வாசித்த உங்களுக்கே இப்படியென்றால் படம் பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

கேப்டன் தேர்தல் கூட்டணி போல் கவுதம் காதல் அல்லாடுது.........
சரி... கதைதான் காதுலபூ என்றால்....119 கிரிமினல் கேஸ் உள்ள ரவுடியாக வரும் பிரபுவின் கோமுட்டி நடிப்பு பெரிய அக்கப்போர்......

பிளேபாய் காதலனாக வரும் கவுதம் கார்த்திகிடம் அப்பா கார்த்திக்கின் குரல் மட்டுமே எப்போதாவது எட்டிப்பார்க்கின்றது நடிப்பு பூஜ்யம் கன்னியர்களை கவர்ந்திழுக்கும் முதிர்ச்சியான முகபாவம் இல்லை இளம் கன்னியர்கள் பிரித் சிங்-நிகேஷா இருவரும் சும்மா வந்து போகின்றார்கள் நடிப்பும் இல்லை  கவர்ச்சியும் இல்லை 

டி.இமான் இசையில் கதைக்கு சம்பந்தமில்லாத பாடல்கள் நீ என்ன அப்பாடக்கரா..பாடல் கேட்க என்னமோ போல் உள்ளது எல்லா பாடல்களும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டாலும் பார்பதற்கு ஒளிப்பதிவில்  பிரமாண்டம் எதுவுமில்லை   படமே அழுவி வழியுது பாடல்கள் கழுவி ஊற்றுது....





















இப்ப இருக்கிற காதலும் என்னமோ ஏதோ என்று விளையாட்டுத்தனமாக  இருக்குமென்றால் இயக்குனராவது கொஞ்சம் சிரத்தை எடுத்து தெளிவாக  படம்காட்டி இருக்கலாம் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1