google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: யாசகன்-சினிமா விமர்சனம்

Monday, March 24, 2014

யாசகன்-சினிமா விமர்சனம்



சமுதாயத்தில் பணமே எல்லாமுமாக இருப்பதாகவும் பண்பு,பாசம், உறவு... போலியாக உள்ளதாகவும் ஓர்  ஆழமான கருத்தை ஆனால் அழுத்தமில்லாத காட்சிகளால் சொல்லும் படம் .........யாசகன்

மனிதாபிமானத்துடன்  வாழும் ஒருவன் தன்னைச் சுற்றி உள்ளவர்களும் மனிதாபிமானத்துடன் வாழ்கின்றார்களா? என்று பரிசோதனை செய்வதே படத்தின் கதை......
படத்தின்  முதல்பாதி....
சூர்யா (மகேஷ்) மற்றவர்களுக்கு பணத்தை தவிர வேறு வழிகளில் உதவும் வேலையில்லாத  நல்லவராக வருகின்றார்... அவரது தந்தையைத் தவிர ஊரே அவரை பாராட்டுகின்றது   அவரது அப்பாவின் நண்பர் மகள் ஷாலினியும் (நிரஞ்சனா)  கொஞ்ச நேரம் காதல் செய்துவிட்டு வேறு ஊருக்கு போகின்றாள் 

ஒருநாள் அபி என்ற ஏழை சிறுமியின் மருத்துவத்திற்கு  பணம் உதவிட    அனைவரிடமும் ரூ.5 லட்சம் கடன்  கேட்கின்றார் ஆனால் யாரும் உதவாமல்  அவர் மீது திருட்டு பட்டம் கட்டி அவமானப்படுத்துகிறார்கள்.  சிறுமி அபியும்   மரணமடைகிறாள் அதனால் வருந்திய சூர்யா புத்தி பேதலித்து,  பைத்தியமாகின்றார் 

பின்பகுதியில் பெறும் பகுதி....
அவரது வீட்டினரும் தெருவில் உள்ளவர்களும் அவரை தொல்லையாக நினைத்து விரட்டுவதே ஆனால்  சூர்யாவின் நிலையைக் கேள்விப்பட்ட அவரது காதலி ஷாலினி ஓடோடி வந்து ஆதரவு காட்டி, அவரை மணந்துக்கொள்ள முடிவு செய்கின்றாள் ஆனால் ஷாலினி வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட, விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறாள்...

பைத்தியம் பிடித்த சூர்யா என்ன ஆனார்...? ஷாலினி உயிர் பிழைத்தாளா? அவர்கள் காதல் நிறைவேறியதா...? என்பதை கிளைமாக்சில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்து அறிமுக இயக்குனர் துரைவாணன் முடித்துள்ளார்

இதனூடே ஒரு குழந்தையுடன்  காதலனால் கைவிடப்பட்ட சூர்யாவின் அடங்காப்பிடாரி அக்காவுக்கு இன்னொரு நல்லவருடன் காதல்  என்றும் சூர்யா மீது அவரது  அக்காமகன் காட்டும்  பாசமும்  ஒருவித நெகிழவைக்கும் உணர்வைத் தருகின்றது 

அங்காடித்தெரு கலக்கல் நாயகன் மகேஷ்  படம் முழுக்க எதையோ பறிகொடுத்தவராக முகத்தைக் காட்டுவது...ஆனால் புதுமுகம்  நிரஞ்சனா தமிழ் படத்துக்கு நல்ல வரவு....மற்றவர்கள் அனைவரும் நாடக நடிகர்கள் போல் வந்து போகிறார்கள். 

சில படங்கள் சமுதாயத்திருக்கு ஏதேனும் செய்தியுடன் வரும் ஆனால் யாசகன் படமே சமுதாயச் செய்தியாக வந்துள்ளது டிவி சீரியலை சினிமாத் திரையில் பார்த்தது போல் பிரமை. ஆனால்,பெண்களுக்கு அதுவும் கிராமத்துப் பெண்களுக்கு இப்படம் ரொம்ப பிடிக்கும்

படம் பார்க்கும் உணர்வை தராமல் ஏதோ போதனை வகுப்பறையில் நுழைந்துவிட்டது போல் நமக்கு விழி பிதுங்குகிறது ஆனாலும் புகை,மது,நக்கல் காமெடி,விரசமான காதல்..போன்ற சினிமாத்தனங்கள் இல்லாத சமூகச் சினிமா எடுத்துள்ள  அறிமுக இயக்குனர் துரைவாணனின் முயற்சி  பாராட்டுக்கு உரியது......வாழ்த்துக்கள்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1