google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நிமிர்ந்து நில்-சினிமா விமர்சனம்

Sunday, March 09, 2014

நிமிர்ந்து நில்-சினிமா விமர்சனம்

nimirnthunil

GlitterPhoto

நிமிர்ந்து நில் - ஆம் ஆத்மியின் ஊழல் எதிர்ப்பு போன்று சமூகப் பிரச்னையை படம் காட்டி நம்மை நெகிழ வைத்து இடைவேளை வரை இருக்கையில் நிமிர்ந்து இருக்க வைக்கும் படம் இடைவேளைக்குப் பிறகு நிஜத்தில் ஆம் ஆத்மியின் கோமாளிக் கூத்து போல நெளிய வைக்கின்றது.......

அரண்மனையில் வாழ்ந்த புத்தர் வெளி உலகத்தின் நிஜத்தைக் கண்டு வருந்துவது போல ஏதோ ஆசிரமத்தில் படித்து வளர்ந்த  அரவிந்த் கெஜ்ரிவால்...சாரி.....அரவிந்த் சிவசாமி (ஜெயம் ரவி) சமுதாயத்தில் நடக்கும் லஞ்சம்-ஊழல்-லாவண்யம் கண்டு வெகுண்டு எழுந்து......

அவரது நண்பர் சூரி,காதலி பூமாரி (அமலா பால்) செய்தி வாசிப்பாளர் (கோபிநாத்) உதவியுடன்  போலியாக அரிச்சந்திரன் என்ற ஒருவரை உருவாக்கி அவருக்கு பிறப்பு சான்றிதல்,ஐ.டி,கார்ட்,சாதிச் சான்றிதல், லைசென்ஸ், பாஸ்போர்ட்... இத்தியாவதிகள் பல லட்சம் லஞ்சம் கொடுத்து  எடுத்து உண்மை டி.வி.யில் ஒளிபரப்பி...

பியூன் முதல் உயர் போலிஸ் அதிகாரி,மந்திரி, நீதிபதிஎன்று  147 பேரை வேலை  நீக்கம் செய்யவைத்து கம்பி என்ன வைக்கின்றார்...எதிரிகள் அனைவரும் ஓன்று சேர்ந்து பல கோடி செலவு செய்து அரவிந்த் சிவசாமி உருவாக்கிய அவரது சாயல் கொண்ட (லாஜிக்..?) அரிச்சந்திரனைப் போன்று ஆந்திராவில் இருக்கும் நரசிம்ம ரெட்டி (இன்னொரு ஜெயம் ரவி)யை கோர்ட்டில் கொண்டு வர முயற்சி செய்கின்றார்கள்.....

கோர்ட்டில் அரிச்சந்திரனாக வரும் நரசிம்ம ரெட்டி உண்மையான அரவிந்த் சிவசாமிக்கு உதவினாரா...? அல்லது ஊழல் பேர்வழிகள் 147 பேர்களுக்கு உதவினாரா....? என்பதே படத்தின் கதை

இயக்குனர் சமுத்திரக்கனியின் அதிரடி வசனங்கள் நிஜத்தின் பிரதிபலிப்பாய் பிரமிக்க வைக்கின்றன அத்தனையும் சரவெடி பட்டாசுகளாக வெடிக்கின்றது...வசனங்களுக்காகவே எத்தனை முறையும் படம் பார்க்கலாம் 


படத்தில் வரும் கார் சேஸிங் காட்சி ஆச்சரியப்பட வைக்கின்றன...அரவிந்த் சிவசாமியின் நேர்மையுடன் ஊழலுக்கு வளைந்துக்கொடுக்காத தன்மையுடன்  சாதரணமாக ட்ராபிக் போலிஸ் சிரிப்புடன் துவங்கும் படம் மின்னல் வேகத்தில் நகர்ந்து சூடு பிடிக்கின்றது...

இடைவேளைவரை இவை எல்லாம் முடிந்துபோகின்றது அத்தோடு முடித்திருந்தால் ஆகா...ஓகோ...த்தான் அதற்குப் பிறகு  என்ன செய்வது என்று தெரியாமல் ரமணா,கஜினி,அரவிந்தன், ஆதி பகவன்... இப்படி சில படங்களின்  ஸ்கிரிப்ட்களை கலந்து முடித்துவிட்டார்....சமுத்திரக்கனி 


ஜெயம் ரவி....அட்டகாசமான நடிப்பு...வசனம் பேசுவதில் நல்ல தெளிவு...அமலா பால் நல்ல அழகு....(வேற என்ன சொல்ல?)  சூரியின் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடமும் அவரும் அருமை... சரத்குமார் கொஞ்ச நேரம் விறுவிறுப்பு...தம்பி ராமையா சும்மா...இன்னும் நாசர் என்று ஒரு நடிகர்கள் கூட்டமே  இருக்கின்றார்கள்

நீயா? நானா? கோபிநாத்..... அதே வேலையைத்தான் இங்கேயும் செய்கின்றார் ஆரம்பத்தில் ஆச்சரியமாக....அப்புறம் அதுவே அறுவையாக...ப்ப்ப்பா தாங்கமுடியலையடா சாமி.......... இன்னும் கொஞ்ச நாளைக்கு விஜய் டி.வி பக்கமே போகமாட்டேன்

city

பாடல்கள் பின்னணி இசை.....ஜி.வி.பிரகாஷ் மோசமில்லை மெலோடி நல்ல ரசனை சுகுமார்-ஜீவன் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் ...கார் சேஸிங் காட்சிகள் அருமை....


ஆக...நிமிர்ந்து நில் படம்-இடைவேளைவரை படம் பார்ப்பவரை நெகிழ வைத்து நிமிர்ந்து இருக்க வைக்கின்றது இடைவேளைக்குப் பிறகு நெளிய வைத்து தலையை சொரிய வைக்கின்றது ஆனாலும் இயக்குனர் சமுத்திரக்கனியின் நிஜத்தின் பிரதிபலிப்பாய் வரும் ஜீவனுள்ள வசனங்களுக்காக படம் பார்க்கலாம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1