google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இனம் அல்ல இழிவு-வைகோவின் அதிரடி விமர்சனம்

Sunday, March 30, 2014

இனம் அல்ல இழிவு-வைகோவின் அதிரடி விமர்சனம்

இங்கே சந்தோஷ் சிவனின் இனம் படம் பற்றிய வைகோவின் அதிரடி விமர்சனமும் ஆவேச  அறிவிக்கையும்...இனம்-தடை செய்யப் படவேண்டிய திரைப்படமா...? என்ற கருத்துக்கணிப்பும்

-ஈழ விடுதலையை கொச்சைபடுத்தி பயங்கரவாதி என்ற படம் எடுத்தவர் இனம்  இயக்குனர் சந்தோஷ் சிவன் 

- சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும் பாலியல் இச்சைக்கு ஆட்படுவதாகவும் காட்டப்படுகிறது 

-பாடசாலையில் விடுதலைப்புலிகளின் காணொளி காட்டப்படுவது 

-ஒர் இளம் தமிழ் பெண் கற்பழிக்கப்பட்டு கொச்சையாக பச்சையாக இச்சையாக காட்டப்பட்டுள்ளது 

-ஒரு புத்த பிச்சு தன் நீர் குடுவையில் சிக்கிய மீனை மீண்டும் நீரில் விடும் மனிதாபியாக காட்டப்படுகிறது 

இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்

இனம்-திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும்

அதனால்  தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் இனம் படத்தை திரையிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் 

அண்ணன் வைகோ  இனம் படம் பற்றி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்காரு எப்படினா...? சிங்கம்... சாரி..புலி ஒன்னு புறப்பட்டதே....என்ற கதையாக ஆனால்...நாம் தமிழர் என்று ஒருவர் மார்தட்டுவாறே அண்ணன்...சீமான்...அவரைக் காணவில்லை...

அட..போங்கப்பா நீங்களும் உங்க அரசியலும் சினிமாவும் என்று எங்க ஊர் மண்ணாங்கட்டி குப்புற படுத்துக்கிட்டு குபேரக் கனவில்.....

உங்கள் பார்வையில்.........


இனம் தடை செய்யப் படவேண்டிய படமா....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-4/4/2014 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1