google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வல்லினம்-சினிமா விமர்சனம்

Friday, February 28, 2014

வல்லினம்-சினிமா விமர்சனம்

வல்லினம்- கூடைப்பந்து விளையாட்டு பற்றியும்  வணிகரீதியாக காதல்,நட்பு,காமெடி,அதிரடி...என்று கலவையாக கல்லூரி கதைக்களத்துடன் வந்துள்ள வித்தியாசமான திரைப்படம் 




படத்தின்  கதையாக......கிரிக்கெட் மாயையில் மறைந்து போன... மறக்கடிக்கப்பட்ட கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை முன்னணிப்படுத்தும் தொலைந்து போன அதன் அடையாளத்தை மீண்டும் மேம்படுத்தும் விழிப்புணர்வு தரும் கதை....ஆனால் திணிக்கப்பட்ட காதல்,காமெடி காட்சிகளால் கொஞ்சம் சிதைவு 

திருச்சியிலிருந்து சென்னை நேஷனல் காலேஜில் படிக்க  வரும் கூடைப்பந்து விளையாட்டில் திறமையான கிருஷ்ணா (நகுல்) கல்லூரியில் கப் வாங்கிய கிரிக்கெட் விளையாட்டு முக்கியத்துவம்  பெற்றிருப்பதும் அதன் கேப்டன் வம்சி (சித்தார்த் ஜோனல்கடா)யின் அடாவடித்தனத்தையும் கண்டு பொங்கி எழுந்து தன் நண்பர்களுடனும் இணைந்து........

தன் கல்லூரி தோழியும் காதலியுமான மீரா (மிருதுளா) அவளது பணக்கார தந்தை  ஜெ.கே (ஜெயபிரகாஷ்) ஸ்பான்சர் உதவியால் நடைபெறும்  கல்லூரிகளுக்கு இடையிலான மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் கலந்து வெற்றி பெறுவதே.........

படத்தின்  சிறப்பான காட்சிகள்...........
அவ்வப்போது  படத்தில் வரும் ரயில் நிலைய அதிரடிக்காட்சிகள் 
கல்லூரி விடுதி வாழ்க்கையை தத்ரூபமாக காட்சிப்படுத்தியது....
கடைசியில் காட்டப்படும் மிகப்பெரிய விளையாட்டுப போட்டி 
ஜெகன்  வரும் காமெடிக் காட்சிகள்...நகுல்-மிருதுளா காதல் காட்சிகள்
அதேநேரம்  டோர்னமென்ட் பைனல் விளையாட்டில் உண்மையான ஆப்ரிக்க கூடைப்பந்து வீரர்களை மாணவர்கள் என்ற போர்வையில் களம் இறக்கி இருபது சிரிப்பூட்டுவதாக இருந்தாலும்....படத்துக்கு விறுவிறுப்பு ஊட்டுகின்றது
vallinam


நகுல் உண்மையான கூடைப்பந்து விளையாட்டு வீரர் போன்று ஆவேசமாக நடித்துள்ளார் மிருதுளா நல்லாவே காதல் செய்கின்றது ஜெகன் காமெடியில் சந்தானத்தின் விரசமில்லா டைமிங் நகைச்சுவையுடன்  நம்மை சிரிக்க வைக்கின்றார்.....கொஞ்சநேரமே ஆயினும் கோச்சராக வரும் அதுல் குல்கர்னியும் ஜேகே என்ற பணக்காரராக வரும் ஜெயபிரகாஷும்   அசத்தலான நடிப்பு.......

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயின்ட் பாஸ்கரனின் ஒளிப்பதிவு ரயில் முன் நகுல் பாயிந்து ஓடும் காட்சி.....விளையாட்டு திடலில் கூடைப் பந்து வீச்சு மற்றும் எஸ்.தமனின் இசை பாடல்களைவிட பின்னணியில்  ரசிக்கும்படி உள்ளது






















இயக்குனர் அறிவழகன் பல இடங்களில் வசனங்களால் மனத்தைக் கவர்கின்றார் நகைச்சுவை வசனங்கள் சிறப்பு முடிவில் இந்திய விளையாட்டு வெற்றிவீரர்கள் வரிசையில் அஜித்தின் கார் ரேஸ்   படத்தைக் காட்டி...தல  ரசிகர்களையும் கவர்கின்றார்....

திணிக்கப்பட்ட காதல் காட்சிகளும் நகைச்சுவையும் நட்பு சென்டிமென்ட் காட்சிகளும் இல்லையென்றால் வல்லினம் முழு விளையாட்டு திரைப்படமாக மாறியிருக்கும் அதேநேரம் நாம் கொடுத்த காசும் எள் ஆகியிருக்கும்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1