google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதலும் தமிழ் சினிமாக்களும்

Thursday, February 13, 2014

காதலும் தமிழ் சினிமாக்களும்


இங்கே  காதலை பல்வேறு கோணங்களில் படம் காட்டிய சில தமிழ் சினிமாக்களும்  அந்த சினிமாக்கள் காட்டிய காதல் எந்த வகை என்றும் அதன் நடிகர்-நடிகைகளும் இயக்குனர்களும் பற்றியும்...

பருத்திவீரன்-இப்படத்தில் சாதிவெறி யான கிராமத்து பால்ய வயது முதல் தொடரும் முத்தழகு(பிரியாமணி) -பருத்திவீரன் (கார்த்தி) காதலும் அதன் களிப்பும் சோகமும் இன்றும் நினைவில் நிற்பவை..இயக்குனர் அமீர்  

மூன்றாம் பிறை-பாசமும் நேசமும் கலந்த  அற்புதமும் அப்பாவித்தனமும் நிறைந்த காதலை கமல் ஹாசன்(சீனு)-ஸ்ரீதேவி(லட்சுமி) மூலம் படம் காட்டியவர் இயக்குனர் பாலு மகேந்திரா...வெள்ளித்திரை வரலாற்றில் ஓர் உன்னதம் 

இதயத்தை திருடாதே-நோய் பட்டு மரணத்தை தழுவும் இரண்டு இளம் இதயங்கள் கொள்ளும் சோகம் கலந்த சந்தோசமான காதலை பிரகாஷ் (நாகார்ஜுனா)-கீதாஞ்சலி (கிரிஜா) மூலம் புதுமையாகதிரையில் படைத்தவர் இயக்குனர் மணிரத்தினம்.

மதராசபட்டினம்-நாடு கலாச்சாரத்தை கடந்தது காதல் என்று இளம்பரிதி (ஆர்யா) என்ற சென்னை டோபிக்கும் ஆமி வில்கின்சன் (எமி ஜாக்சன்) என்ற ஆங்கிலேய சீமாட்டிக்கும்  உள்ள இதய உணர்வு பிரதிபலிப்பை உணர்த்திய இயக்குனர் விஜயின் படம்

சேது-இயக்குனர் பாலாவின் முதல் படமான இதில் கல்லூரி சண்டியர் மாணவன் சேது என்ற சீயான் (விக்ரம்) க்கும் ஏழை புரோகிதர் மகள் அபிதா(அபிதா) வுக்கும் இடையில் உள்ள காதலை வெள்ளித்திரையில் கண்ணீர் காவியமாக காட்டி பார்வையாளர்களை கலங்கடித்தார்


city

வைதேகி காத்திருந்தாள்-காதல் தோல்வியில் விரக்தியடைந்த வெள்ளைச்சாமி- (விஜயகாந்த்)யும் இளம் விதவையான வைதேகி (ரேவதி) யும் ஓர் இளம் காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் கிராமத்து காதல் கதை திரையில் ஓர் அற்புதம் செய்தவர் இயக்குனர் சுந்தர்ராஜன்

கடலோரக் கவிதைகள் - ஒரு கடலோர கிராமத்தை கதைக்க்களமாகக் கொண்டு  இயக்குனர் பாரதிராஜா சின்னப்பதாஸ் (சத்யராஜ்) என்ற ரவுடிக்கும் ஜெனிபர் (ரேகா) என்ற ஆசிரியைக்கும் இடையில் உருவாகும் காதலை கவிதையாக திரையில் பாடினார்


காதல்-இயக்குனர் பாலாஜி சக்திவேல் காதல் வலையில் விழுந்த இரண்டு இளம் காதல் பறவைகளின்  முருகன் (பரத்)-ஐஸ்வர்யா(சந்தியா) வலியையும் வேதனையையும் படம் காட்டினார்


புன்னகை மன்னன-காதல் தோல்வியால் களையிழந்த சேது (கமல் ஹாசன்) என்ற நடன ஆசிரியர் மீண்டும் தன் மாணவி மாலினி (ரேவதி) மீது காதல் கொள்ள... இயக்குனர் பாலச்சந்தர் திரையில் இசைத்த காதல் ராகம்

அலைகள் ஒய்வதில்லை-காதலுக்கு மதம் என்ற நிறம் கிடையாது என்று ஓரு ஏழை  இந்து மதத்தைச்  சேர்ந்த விச்சு (கார்த்திக்) க்கும் கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மேரி (ராதா) க்கும் இடையில் உருவான காதலை இயக்குனர் பாரதிராஜா அமரர் மணிவண்ணன் கதை வசனத்தில் திரையில் தீட்டிய காதல் சித்திரம்


விண்ணைத்தாண்டி வருவாயா-இயக்குனர் கவுதம் மேனனின் இப்படம் கண்டதும் காதல் என்ற வகையில் காதல் மொழி,இனம்,மதம் போன்றவைகளுக்கு  அப்பாற்பட்டது என்று கார்த்திக் (சிலம்பரசன்) என்ற தமிழ் இந்து துணை-இயக்குனருக்கும் ஜெஸ்ஸி (திரிஷா) என்ற கிருத்துவ மலையாளிக்கும் இடையில் தோன்றிய மேல் தட்டு காதலை திரையில் படம் காட்டியது

வாழ்வே  மாயம்-காதலியின் நல்வாழ்வுக்காக மரணத்தின் வாசலில் நிற்கும் ஒரு காதலனின் தியாகமாக காட்டப்பட்ட பணக்கார இளைஞன் ராஜா (கமல் ஹாசன்)- ஏர் ஹோஸ்டஸ் தேவி  (ஸ்ரீதேவி) க்கும் இடையில் நடக்கும் வலிமிகுந்த போராட்டம்...கான்பவருக்கும் இதயம் வலிக்கும்


முதல்  மரியாதை-காதலுக்கு வயதில்லை அந்தஸ்து இல்லை என்பதை சந்தோசமில்லாத குடும்ப வாழ்க்கையில் உள்ள நடுத்தர முதியவர் மலைச்சாமி (சிவாஜி) க்கும் ஏழை படகோட்டி மகள் இளம் பெண் குயிலு(ராதா) க்கும் உள்ள காதல் பந்தத்தை பவ்வியமாக நளினமாக திரையில் காட்டியது

குணா-காதல் பைத்தியம் பற்றிய வித்தியாசமான இப்படத்தில்  மனநலம் பதிக்கப்பட்ட வாலிபன் குணா (கமல்ஹாசன்) பணக்கார பெண் அபிராமி (ரோஷினி) யை தன் காதல் தேவதையாக எண்ணி கடத்திக்கொண்டு மலைக்குகையில் ஒளித்து வைத்து அழிந்துபோகும் காதலை இயக்குனர் சந்தானபாரதி  அழுத்தமாக சொல்லி...

மௌனராகம்-கல்யாணத்திற்கு பிறகு என்றும் முன்பு என்றும் இரண்டு வகையான காதலை இயக்குனர் மணிரத்தினம் தனக்கே உரிய டச் மிளிர கார்த்திக்-ரேவதி என்று இளமைத் துள்ளல்  காதலையும் மோகன்-ரேவதி என்று மேட்சுர் காதலையும் திரையில் காட்டி.......

அலைபாயுதே-காதல் தடாகத்திலிருந்து  அலப்பறையாய் துள்ளி கல்யாணத்தில்  விழும்  இரண்டு காதல் மீன்கள் கார்த்திக் (மாதவன்)- சக்தி (ஷாலினி) மூலம்  அவர்கள் படும் அவஸ்தையும் முதிர்வும் என்று மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் ஏ.ஆர்.ரகுமானுடன் இசையாய் சொன்ன காதல் படம்

இதயம்-கல்லூரி இளசுகளாக நடித்த முரளி-ஹீரா மூலம்  காதலை சொல்ல தயங்கிய காதலனின் சோகக்  கதையாக இப்படம் இளையராஜாவின் இசையில் அமரர் வாலியின் வார்த்தைகளில் புல்லாங்குழல் கீதமாக......

காதலுக்கு  மரியாதை-இதுவும் சாதி,மதம் சார்ந்த...ஆனால் இயக்குனர் பாஸில் வித்தியாசமாக....இந்து மதம் சார்ந்த ஜீவானந்தன் (விஜய்) கிருத்துவ பெண் மினி (ஷாலினி) மூலம் பெற்றோர் சம்மதிக்கும் காதலாக கதாப்பாத்திரங்கள்,காட்சிகள் உருவாக்கி திரையில் ஒளிரும் காதல் தீபம் ஏற்றினார்

காதல்  கோட்டை-காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே.... போன்,கடிதங்கள் மூலம் காதலைப் பரிமாரிக் கொள்ளும் ஒரு புதுமையான காதலைக் காட்டினார்  இயக்குனர் அகஸ்தியன்.......ஜெய்ப்பூரில் இருக்கும் சூர்யா(அஜித் குமார்) மற்றும் சென்னையில் இருக்கும் கமலி (தேவ்யாணி) மூலமாக........

7G ரெயின்போ காலனி-இதுவும் காதல் மொழி,இனம்.. அப்பாற்பட்டது என்பதை இயக்குனர்   செல்வராகவன்..... சென்னையைச் சேர்ந்த சோம்பேறி சுப்பராயன்  கதிர் (ரவி கிருஷ்ணா) வட இந்திய ஹிந்தி பேசும் பெண் அனிதா (சோனியா அகர்வால்) மீது ஜோள்ளுவிட்டு வரும் காதலாக காட்டி பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்தார்

இப்படி இங்கே இருபது வகையான காதல் மட்டுமே சொல்லியிருக்கின்றேன் அதிலும் இப்போது சமீபத்தில்  வந்த  காதல் படங்களை தவிர்த்துவிட்டேன் அவைகள் எந்த வகையைச் சேர்ந்தது என்று எதுவும் பிடிபடவில்லை காதல்- மீண்டும் பரிணாம வீழ்ச்சியாக மிருகம் வகையை (காமம்) நோக்கி போவது போல்....

**************************************************************************
கண்ணீர்  அஞ்சலி............

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/01/balumahendra.jpg  
பாலு மகேந்திரா என்ற சினிமா கலைஞருக்கு பல்வேறு முகங்கள் உண்டு சிறந்த திரைக்கதை எழுத்தாளர்,சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவாளர்... இவை எல்லாவற்றையும் விட அவர் ஒரு ஒரு சிறந்த வலைப் பதிவரும்கூட...........மேலும்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1