google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இது கதிர்வேலன் காதல்-சினிமா விமர்சனம்

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல்-சினிமா விமர்சனம்


காதலுக்கு பெற்றோர்கள் ஆதரவு செய்யலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு விடை சொல்கின்ற படமாக.......காதலர் தினத்தை குறிவைத்து எடுக்கப்பட்ட....... இது கதிர்வேலன் காதல்


 
தன் மகள் கோயம்புத்தூரில் ஒருவரை காதலித்ததால் அவளை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்கு.... மதுரையைச் சேர்ந்த ஆடுகளம் நரேனுக்கு காதல் என்றால் கசப்பு ஒருநாள்  அவரது மகள் கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வர,அவரது மகன் கதிர் (உதயநிதி) அப்பாவிடம் பொய் சொல்லி கோவையில் உள்ள தன் அக்காள் கணவரை சந்தித்து சமாதானம் செய்ய போகின்றார்..

அங்கே அஞ்சு வயசிலிருந்து ஆஞ்சநேயர் பக்தரான கதிருக்கு அவரது  அக்காள் கணவரின் எதிர் வீட்டு அழகி  பவித்ரா (நயன்தாரா) வை கண்டதும் காதல் தீ பற்றிக்கொள்ள.....

http://tamil.webdunia.com/articles/1402/04/images/img1140204021_1_1.jpg  

அவரது நண்பன் மயில்வாகனம் (சந்தானம்) உதவியுடன் தீயா வேலை செய்யனும் கதிரு என்று விரட்டி விரட்டி காதலிக்க அம்மணிக்கோ இன்னொரு மோசமான பாய்பிரண்டு   மீது காதல்....

ஒருவழியாய் பாய்பிரண்டை கழட்டிவிட்டு பவித்ரா-கதிர் காதல் ஆரம்பிக்கும் போது   கதிரின் அக்காள் கணவருக்கும் பவித்ராவின் அப்பாவுக்கும் இடையே உள்ள இருபது வருட பகை குறுக்கே நிற்க.....

அதையும் கதிர் அன் கோ மயில்சாமியின் உதவியுடன் சரிகட்டி வரும் போது மீண்டும் கதிர்-பவித்ரா காதலுக்கு குறுக்கே கதிரின் அப்பா நிற்கிறார்...

கதிர்-பவித்ரா காதல் நிறைவேறியதா....? கதிரின் காதலை அவரது அப்பா ஏற்றுக்கொண்டாரா...? என்பதே கதை....
nayan


இப்படி மதுரை  To கோவை என்றும் கோவை To மதுரை என்றும் மாறி மாறி ஓடும  கதிர்வேலன் காதல் எக்ஸ்பிரஸ் எந்த வழியில் போவது என்று தெரியாமல் ஏதோ ஒருவழியாக அவ்வப்போது குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தும் சென்டிமென்ட்,பாசம்,குடும்பம்,உறவு...என்றும்  குறுக்கே வரும்  தடைகளையும் உடைத்தும் .......தடம் பிறழாமல் ஓடுகின்றது 


இப்படத்தின் சிறப்பான காட்சிகள் பல இருக்க....அதிரும் சரவெடி சிரிப்பு காட்சிகளாக... உதயநிதி அவினாசி அனுமார் கோயிலில்  ஆசீர்வாதம் வாங்கும் காட்சி...டிவி ஷோரூமில் நயனுடன் அடிக்கும் கூத்து...சந்தானம் ஆஸ்பத்திரியில் அடிக்கும் லொள்ளு கலாட்டாக்கள்....  

இப்படத்தின் மூலம் இன்றைய சமுகத்தில்  உள்ள காதல் பிரச்னையை அழுத்தமாக அதேநேரம் வன்முறைக்காட்சிகள் விரசங்கள் எதுவுமின்றி  நகைச்சுவையாக சொன்ன இயக்குனர் பிரபாகரனை 
பாராட்டலாம் 


 











ரொம்ப இளமையாக தெரியும் உதயநிதி நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் சந்தானம் வழக்கம் போல் நக்கலும் விக்கலுமாக  கலக்குகின்றார் இரட்டை அர்த்த வசனங்கள் குறைவு......மயில்சாமியும் அவர் பங்குக்கு அருமை நயன்தாராவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி...மூஞ்சியிலும்தான்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கவும் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் பார்க்கவும் நன்றாக இருந்தாலும் படத்தின் ஓட்டத்துக்கு இடையூறாக உள்ளது.........

Made with FreeOnlinePhotoEditor.com

 
இது கதிர்வேலன் காதல்-அழுத்தமான காதல் பிரச்னையை காமெடியாக சொல்லுகின்ற காதல் காமெடி திரைப்படம்....வன்முறைக்காட்சிகள் இல்லாத மதுரையை கதைக்களமாக கொண்டஇது (கதிர்வேலன் காதல்).....வித்தியாசமான காதல்தான் குடும்பத்துடன் பார்க்கலாம் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1