google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சந்திரா-சினிமா விமர்சனம்

Sunday, February 16, 2014

சந்திரா-சினிமா விமர்சனம்

சந்திரா   திரைப்படம் -வண்ணங்களின் கலவையாய் திரையில் தீட்டப்பட்ட  ஒரு ராஜகுமாரியின் காதல் ஓவியம்... கற்பனையும் பிரமிக்க வைக்கும் அழகு மிளிரும் காதல் கவிதை உலகம்... விரசமில்லா காதலை விருப்புவோருக்கு வெள்ளித்திரையில் விருது கலைஞர் இயக்குனர் ரூபா ஐயரின் ஒரு காதல் திரை விருந்து


அதேநேரம் அம்பிகாபதி-அமராவதி காலத்து  மிகவும் பழமையான ஒரு காதலை கதையாகக் கொண்ட காதல் பேண்டஸி உலகம்..... கதைக்களமும் ராஜ குடும்பத்தை சேர்ந்த பாராம்பரியம் மிக்க ஓன்று...கதையில் எதுவும் புதுமை இல்லாதது கொஞ்சம் அல்ல நிறையவே இழுவை...ஆனாலும் காட்சிக்கு காட்சி  வண்ணமயமான காட்சிகள் ரவிவர்மன் வரைந்த பாராம்பரிய ஓவியம் போல் படம் பார்பவர்களை புல்லரிக்கச் செய்கின்றது......

beach


பாராம்பரிய மைசூர் மகாராஜா வாரிசு மகள் பேரழகி சந்திரா  என்ற இளவரசி சந்திராவதி (ஸ்ரேயா)க்கும் மன்னரின்  நண்பரும் அரண்மனை இசை குரு(விஜயகுமார்) வின் மகன் பல்கலை இளைஞன் சந்திரா என்ற சந்திரஹாசன் (பிரேம் குமார்) க்கும் இடையில் உள்ள காதலுக்கு பாராம்பரியமும் ராஜ அந்தஸ்த்தும் குறுக்கே வருகின்றது இளவரசி சந்திரா அமெரிக்காவில் வாழும் ராயல் அந்தஸ்தில் உள்ள இந்திய வாலிபர் ஆர்யா (கணேஷ் வெங்கட்ராமன்) வுக்கு நிச்சயம் செய்யப்பட...காதலை மறக்க முடியாமல் தவிக்கும் இரண்டு ஜீவன்களும் (இரண்டு சந்திராக்களும்) ஓன்று சேர்ந்தார்களா...? என்பதே கதை....


படத்தின்  சிறப்பான காட்சிகளாக...........
-படத்தின் ஆரம்ப காட்சியாக வரும் ஸ்ரேயா மிதக்கும் ரோஜா இதழ்கள் தொட்டியில் நீந்தும் வண்ணமயமான காட்சி....

-காசியில் பிரேம் வழிப்பறி திருடனை விரட்டிச் செல்லும் காட்சி 
-ஸ்ரேயாவும்  பிரேமும் போடும் வாள்சண்டை காட்சி....
-படத்தின் பாடல்கள் படம்பிடிக்கப்பட்ட சிறப்பு 
-மைசூர் அரண்மனையின் பிரமானடமும்  தசரா விழா காட்சிகளும்....
இன்னும் பல இருக்கின்றன சில முரணாக தெரிந்தாலும் கதை லாஜிக் இன்றி உதைத்தாலும் இவை நமக்கு திருப்தியாக உள்ளன 

Made with FreeOnlinePhotoEditor.com

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரேயாவின் நடிப்பும் அழகும்  அருமை கன்னட நடிகர் பிரேம்குமாரின் கோலிவுட் வரவு தமிழுக்கு கட்டுமஸ்தான இளம் ஹீரோவின் வரவு...மற்றபடி விவேக் காமெடி வழக்கம் போல் 

Made with FreeOnlinePhotoEditor.com

கவுதம் ஸ்ரீவத்ச இசையில் ஒலிப்பவையும் கிளாசிக்கல் மார்டன் என்று கலப்படமாக உள்ளது......பாடல்கள் ஒளிர்வது தாஸ் கேமராவில் உயிரோட்டம்

Made with FreeOnlinePhotoEditor.com

இப்போதைய  காலகட்டத்தில் நடக்கும் கதையில் மன்னர் குடும்பத்தினர் பேசும் வசனங்கள் பழமையான செந்தமிழாக இருப்பது கழுதை..ச்சே.. கதை  அவ்வப்போது உதைக்கிறது ஆனாலும் இப்படத்தின்  இயக்கத்திற்கு அப்பாற்பட்டு பல துறைகளின் வேலைகளையும் சிறப்பாக செய்துள்ள இயக்குனர் ரூபா ஐயர்  இன்னும் பல விருதுகள் வெல்லுவார்

சந்திரா- எப்படி பார்த்தாலும் இப்படம் குத்துப்பட ரசிகனை திருப்பதி படுத்தாது மற்றபடி சினிமாவை கலையாக........கலைக்காக பார்க்க நினைப்பவர்களுக்கு இப்படம் உன்னதம்  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1