google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சென்னையில் அம்மா திரையரங்கம் அவசியமா?

Thursday, February 20, 2014

சென்னையில் அம்மா திரையரங்கம் அவசியமா?


ஏழை,நடுத்தர மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சென்னையில் மலிவு விலையில் படங்கள் பார்க்க அம்மா திரையரங்கம் அமைத்து உலகுக்கே முன்னோடியாகஇருக்கப்போவதாக சென்னை மேயர் அறிவித்திருப்பது....


இன்றைய சென்னையின் பிரதானப் பிரச்சனையாக உள்ள குப்பை அகற்றல்,சாக்கடை சீர் படுத்துதல்,கொசு ஒழித்தல்,போக்குவரத்து வசதி சீர்படுத்துதல்,கழிவறை வசதிகள் செய்தல்.... போன்ற அத்தியாவசியமானவைகளை சரிசெய்ய திட்டங்கள் தீட்டாமல்...........

பல IAS அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி பள்ளி நடத்தும் மேயர் அவர்கள் மக்கள் மலிவு விலையில் படம்பார்க்க என்று அம்மா திரையரங்கம் அமைக்க எத்தனிப்பது எவ்வகையில் மக்கள் சேவையாகும் 


நாளைய பிரதமராக கனவு காணும் அம்மா அவர்களின் சீரிய நோக்கத்தை இது சீரழிக்காதா...? அம்மா உணவகம் என்பதாவது ஒருவகையில் ஏழைகளுக்கும் நடுத்தர வருவாய் உள்ளவர்களுக்கும் பயன்படும் வரவேற்க திட்டம் அதைக் கேலி செய்வதுபோல் அம்மா திரையரங்கம் திட்டம் ஆகாதா...........?

ஆனால்...இது போன்ற மலிவு விலை சினிமா அரங்குகள் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு பேரிடியாக இருக்கும்....இது ஒருவகையில் சமுதாயத்தில் உள்ள சினிமா மாயை எனும் பேயை விரட்டும் செயலாக மாறலாம்....

ஏகலைவன்© @Eakalaivan 
அம்மா திரையரங்கம்# எல்லாரும் பவ்யமா நின்னுக்கிட்டே,வாய் பொத்தி படம் பாக்கனும்.மீறி சத்தம் போட்டா,இடைவேளையில் உங்க இடத்துல வேற ஆளு இருப்பாரு.

 Deepak@deepaknrn 
திருட்டு டிவிடிகள் ஒழிந்து சினிமாத்துறை வளர்ச்சியடைய ‘அம்மா திரையரங்கம்’ ஒரு தொடக்கமாக இருக்க வாழ்த்துவோம்..!

Chandra Sekar @chandar187 
சத்யம் தியேட்டர் எதிர்ல ஒரு "அம்மா திரையரங்கம்" ஓபன் பண்ணணும், அத நான் பாக்கணும் தட்'ஸ் ஆல் யுவர் ஹானர்

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
அம்மா தியேட்டரில் சேர் ,பெஞ்ச் எதுவும் கிடையாது.டென்ட் கொட்டாய் மாதிரி மண் தான்.நெடுஞ்சாண் கிடையா படுத்துக்கிட்டே தான் படம் பாக்கனுமா

























எல்லாம் தெரிந்த பதிவுலக நியாயன்மார்களே! நீங்க என்ன சொல்லுறீங்க...?
உங்கள் பார்வையில்.................
சென்னையில் அம்மா திரையரங்கம் அவசியமா?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........முடிவு-28/2/2014

கவர்ச்சிப் படம் -புவிஷா



பரதேசி,சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் 
நடித்த துணை நடிகை......................
கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய  வாய்ப்பை எதிர்பார்த்து..........

***************************************************

உலகநாயகர் பாதையில் சூர்யா

***************************************************



குக்கூ பட ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசும்போது தான் உலகநாயகர் கமலஹாசன் அடிச்சுவட்டில் பயணிப்பதாகவும் அவரே தனக்கு இன்ஸ்பிரேசன் ஆக இருப்பதாகவும் சொல்லி பெருமைகொண்டார்............
(அண்ணேன்...நீங்க அவரது நடிப்ப மட்டும் பின்பற்றுனா சரிதான்...)
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1