google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆஹா கல்யாணம்-ஏலே என்னல படம்காட்டுறீங்க..?

Sunday, February 23, 2014

ஆஹா கல்யாணம்-ஏலே என்னல படம்காட்டுறீங்க..?

ஆஹா கல்யாணம்-எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால்...முக்கிக்கிட்டு கிடக்கிற மும்பாய் கலாச்சாரத்த இங்க படம் காட்டும் பரதேசிகள என்னத்தச் சொல்றது...? இந்த ஊடகங்கள் அதிலும் தி ஹிந்து,நக்கீரன்...இவியிங்க நல்லாயிருக்குனு வாயவச்சாலே அதில வில்லங்கம் இருக்கும்...நாடு நாசமாப் போட்டும்னு கூடவே சாபம் இருக்கும்
aahakalyanam

ஏலே...சினிமாவ சினிமாவா பார்க்கத் தெரியாத  நாடுல இது...இங்கதான் இந்த கூத்தாடிக கோட்டையில இருந்து கும்மாளம் அடிக்க முடியும் இன்னும் கோட்டையப பிடிக்க வரிச கட்ட முடியும் ஏலே..எங்க மக்க  சினிமாவைப் பார்த்தே வயித்த நிரப்பிக்கிறவியிங்க... கற்பனையிலேயே காலத்த ஒட்டுறவியிங்க........இப்ப அம்மா திரையரங்கம் வேற கட்டி மலிவுவிலையில மக்களைமகிழ்விக்கப் போறாயிங்களாம்...

ஏலே...பேண்டு பஜா பராட் - இந்தி படத்த தமிழ்ல ரீ-மேக் பண்ணுனது தப்புயில்லல.... அதில பாலிவுட் அம்மணி வாணி கபூர் பெல்லி ஆட்டுரத காட்டினது தப்பு இல்லையா?....நாணி-வாணி உதடுகள ஓட்ட வச்சது தப்பு இல்லையா? பொழுது போக்குனு  இப்படி எச்ச காட்சிகள காட்டி கவிச்ச கலாச்சாரத்த ஊட்டுனதுதப்பு இல்லையா?
aahakalyanam

 
அரங்கம் நிறைந்து வசூல் அள்ளிக்கிட்டும்  துள்ளிக்கிட்டும்  ஓடும ஆஹா கல்யாணம் தமிழ் சமுதாயத்த  சீரழிக்க வந்த சினிமால.....இத ஆகானா ஓகோனா பாராட்டுனா இந்த  பாலிவுட் பண்ணி இன்னும் நிறைய குட்டி போடும்ல........

26-வயசுக்குள்ள வாலிபர்கள் உருவாக்கின படம் என்கிறாயிங்கல...ஏன்தான் இவியிங்க புத்தி இப்படி போச்சோ...கொஞ்சம் சொந்தமா யோசிங்கல...? 

(யோவ் நாட்டுப்புறத்து பதிவரே! என்ன சினிமாவ காக்க வந்த அந்நியன் மாதிரி அலப்பறக்  காட்டுற....இந்த ஆஹா கல்யாணம் அப்படி என்னதான்  ஆகாதத சொல்லுது..?ஏதோ விமர்சனம் படிக்கலாம்னு வந்தா இப்படி சாகடிக்கீறியே...)

இப்பட்டித்தான்  ஆஹா கல்யாணம் படத்துக்கு சினிமா விமர்சனம் எழுத நினைத்தேன் படம் பார்ப்பதற்கு முன்னாடி...ஆனால் படம் பார்த்தப் பிறகு அப்படியே அசந்து விட்டேன்.....மக்கா இப்படியொரு படத்த பார்க்க கொடுத்து வச்சிருக்கணும் 

ஆம்மாம்...நம்ம நட்சத்திர நடிகர்க படம்னு நம்மள பாடாப் படுத்துறத பார்த்தப் பிறகு எந்த அலட்டலும் இல்லாமல் கொடுத்த காசுக்கு அருமையானபொழுது போக்கு படம் காட்டுறாயிங்க....
இவியிங்க  BUTX பிடின்னு கூத்தடிக்கும் போது இது எம்புட்டோ பரவயில்ல.....

படத்தின் கதையாக....FINANCE + ROMANCE ஒன்னுசேர முடியுமா...? அதாவது பணம் சம்பாதிக்கனும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் ஒரு இளஞ்சியும் காதல் போதையில் தள்ளாடும் இளைஞனும் வாழ்வில் ஓன்று சேரமுடியுமா..? என்பதை காதலும் நகைச்சுவையாகவும் கலந்து கட்டி..காட்டியிருக்காங்க 



கல்லூரி விடுதியில் சாப்பாடு சரியில்லாததால் கல்யாண மண்டபங்களில் நடக்கும் விசேஷங்களில் போய் உறவினர்கள் போல் உண்டு மகிழும் மானவர்களில் ஒருவராக யதார்த்தமாக அறிமுகமாகும் சக்தி (நாணி)...அதைக் கண்டு பிடித்து கேலி செய்யும் ஸ்ருதி (வாணி கபூர்) யின்  ஆட்டம் பாட்டத்தில் மயங்கிய சக்தி அவளைக்  விரட்டிக் காதலிக்க....ஸ்ருதியோ திருமண ஏற்பாடு செய்யும் தொழில் மீது கனவில் இருக்க...

இருவரும்  இதே தொழிலை பெரிதாக செய்யும் சந்திரலேகா(சிம்ரன்) விடம் வேளையில் சேர்ந்து...பிறகு இருவரும் தனியாக கெட்டிமேளம்  என்ற திருமண ஏற்பாடு செய்யும் தொழிலை பார்ட்னராக தொடங்கி ஓகோ என்று வளர்கிறார்கள்....ஆனாலும் சக்தி காதல் எண்ணத்திலும் ஸ்ருதி தொழில் எண்ணத்திலும் என்று மட்டுமே இருக்கின்றார்கள்

ஒருநாள் ஒரு பெரிய திருமணத்தை நடத்திய வெற்றிக் களிப்பில் இருவரும் மப்பில் உடலளவிலும் ஓன்று சேர்ந்து விடுகின்றார்கள் அதனால் அம்மணிக்கு சக்தி மீது காதல் வருகின்றது ஆனால் இருவருக்கும் உள்ள ஈகோ மோதலாகி பிரிவு......இருவரும் தனியாக தொழில் நடத்தி நஷ்டம் 


aahakalyanam


சக்தியும் ஸ்ருதியும் மீண்டும்  ஒரு பெரிய திருமண ஏற்பாடை செய்ய  ஓன்று சேர்ந்து நடத்தவேண்டிய சந்தர்பம் வருகின்றது அதேநேரம்  ஸ்ருதிக்கு வேறு மாப்பிளை நிச்சயிக்கப்பட்டதை அறிந்து சக்தி துடிக்கின்றான் இப்படி தொழிலில் ஓன்று சேர்ந்த சக்தியும் ஸ்ருதியும் வாழ்வில்  ஓன்று சேர்ந்தார்களா...? என்பதே..............

படம்முழுக்க காட்சிகள் அனைத்தும் வண்ணமயமாக காட்டப்படுகின்றது தெளிவான கதைப் போக்கு..சிலநேரம் லோக்கல் கீழ்குடி மக்களின்  ஈத்தர மொழியில்  இருந்தாலும் சில நேரம்  உயர்மட்ட மேல்குடி மக்கள் உளறலாக இருக்கும் கலகலப்பான வசனங்கள்....






எந்த எதிர்பார்ப்பும் பார்வையாளனுக்கு இல்லை என்றாலும் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு கட்டுப் பட்டவர்களாக அரங்கில் அமர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது...........(அண்ணேன்..அடுத்து ஏதாவது சீன் வரும்னு எதிர்பார்த்து இருப்பாயிங்க....ஹா..ஆஹா...?)

படத்தில் சூடான அந்தப் படுக்கை காட்சிகள்...நாணி-வாணி லிப்-லாக்கிங் காட்சி...இவைகளை தவிர்த்திருந்தால் தமிழில் அருமையான குடும்பப் படமாக....ஆஹா கல்யாணம் கொண்டாடலாம்      

நாணியின் நடிப்பு தமிழுக்கு புதுசு அல்ல...ஓவர் ஆக்டிங் இல்லாத யதார்த்தம் அவரது தமிழும் நமக்கு புதுசு அல்ல...தசாவதாரம் நாயுடு பேசும் ஸ்டைலு தமிழ்+தெலுங்கு=தமிலுங்கு......? 

வாணி....ஒட்டகத்துக்கு சுடிதார் போட்டது போல்...சேலையில் சகிக்கல...ஆனாலும் அம்மணி நல்ல ஆட்டம் போடுது அசத்தலா நடிக்குது....கோலிவுட் முதிர்கன்னிகள்..ச்சே..கவர்ச்சிக் கன்னிகள் வரிசையில் அம்மணிக்கு நல்ல இடமிருக்கு ..........



 


















ஆக...........ஆஹா கல்யாணம் கொடுத்த காசுக்கு போக்கு இல்லை ஆனால் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பொழுது போக்கு இல்லை 
ஆஹா  கல்யாணம்..... 40 வகை பதார்த்தங்கள் வைத்து பரிமாறப்பட்ட விருந்து அதில் ஓன்று  விரசம் உறுகாய் போல..........ஆனாலும் இயக்குனர் கோகுல் கிருஷ்ணாவணிக ரீதியில் பிழைக்கத் தெரிந்த படம் காட்டும் வெற்றியாளர்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1