google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எவ்வடு (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Sunday, January 19, 2014

எவ்வடு (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

ராம் சரணின் எவ்வடு - ஒரு பழி வாங்கும் கதையை மையமாக கொண்டு பல சினிமாத் தனங்களால் சாயம் பூசப்பட்டு  அவரது ரசிகர்களுக்கு படைக்கப்பட்ட ஓர் ஆர்பரிக்கும் பொழுதுபோக்கு காதல் அதிரடி திரைப்படமாகும்  
























சத்யா (அல்லு அர்ஜுன்) தீப்தி (காஜல் அகர்வால்) மீது காதல் கொள்ள....அவர்கள் காதலுக்கு இடையுறாக மிகப்பெரிய தாதா தேறு பாய் (ராகுல் தேவ)வும் தீப்தி மீது வெறித்தனமாக காதல்  கொள்ள.... கோபம்கொண்ட பாய் காதலர்கள் இருவரும் பயணிக்கும்   பேருந்தில் தீ வைக்கின்றான்..விபத்தில் தீப்தி மரணிக்க,சத்யா முகம் கருகி பிழைத்துக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை செய்து...ஒரு  கல்லூரி இளைஞன்  விஸ்வா (ராம் சரண் தேஜா) போன்று முகமாற்றத்துடன் தேறு பாய் கூட்டத்தினரை பழிவாங்குவதே கதை........



ராகுல் தேவ் கூட்டத்திரை விரட்டி பழிவாங்கும் ராம்சரண்  சாய்குமார் கூட்டத்தினரால் விரட்டப்படுவதுதான் படத்தின் மிகப் பெரிய ட்விஸ்ட் கடைசி கிளைமாக்ஸ் 15 நிமிடங்களும் தியேட்டரில் ராம் சரணின் அதிரடி அலப்பறை பார்வையாளர்களை இருக்கையின் விளிம்புக்கு வரச்செய்யும்.......அசந்தால் கீழே விழச்செய்யும்....... 


yevadu

இப்படத்தின் கதை ஹாலிவுட் திரைப்படம் Face Off என்பதின் உல்டா என்றாலும் எவ்வடு இயக்குனர் வம்சி அவருக்கே உரிய  சிறப்பான திரைக்கதை வடிவமைப்பாலும் டோலிவுட் சினிமாவுக்குள்ள மசாலாத் தனங்களாலும் விறுவிறுப்பாக படத்தை நகர்த்துகின்றார் 
இடைவேளைக்கு முன்பு வரும்  ட்விஸ்ட் படத்தை கடைசிவரை மின்னல் வேகத்தில் நகர்த்துகின்றது.



இப்படம்  ராம் சரண் ரசிகர்களுக்கு கிடைத்த மசாலா பிரியாணி விருந்து அல்லு அர்ஜுன்-காஜல் அகர்வால் காதல் காட்சியுடன் துவங்கும் படம் அவர்கள் இருவரும் 10 நிமிடங்களே திரையில் தோன்றினாலும் மனதில் இடம் பிடிக்கின்றனர்  ஸ்ருதி ஹாசனும் எமி சாக்சனும் நடிப்பதற்கு ஒன்றுமில்லை ஆயினும் பார்வையாளர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்க தவறவில்லை 























வழக்கம்போல் டி.எஸ்.பி பின்னணி இசையிலும் பாடல்களிலிலும் கலக்க... கண்ணுக்கு குளுமையாக ஷ்யாம் ஒளிப்பதிவில் பிரமிப்பு ஊட்டுகின்றார்  
படத்தின்  சிறப்பான காட்சிகள்........அல்லு அர்ஜுன் சுவரை துளைத்து அடிக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள்....ராம் சரண் கரண்ட ஷாக் வைத்து தேறு பாய் கூட்டத்தில் ஒருவனைக் கொள்வது... போலிஸ் அதிகாரியை  ஷாப்பிங் மாலில் தொங்கவிடுவது...சாய்குமார் கூட்டத்துடன் நடக்கும் அதிரடிச் சண்டை...ஜெயசுதாவின் கதாப்பாத்திரம்....வம்சியின் திரைக்கதை வடிவமைப்பு   


                                           thanks-YouTube-by myaishtv

விரசமும் வன்முறைக்காட்சிகள் குத்துப்பாட்டு என்று ஒருபுறம் கொடிகட்டி பறந்தாலும் ஒரு த்திரிலர் படமாகவும் சிறந்த பொழுதுபோக்கு சித்திரமாகவும் உள்ள எவ்வடு....பொழுதுபோக்கு சினிமா  விரும்பிகளுக்கு குச்சி மிட்டாய்....

இப்பலாம்...டோலிவுட்டானாலும் கோலிவுட்டானாலும் சினிமாக்கள் கதைக்காக எடுக்கப்படுவதில்லை நடிகர்களுக்காக மட்டுமே...



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1