google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரம்மி-சினிமா விமர்சனம்

Friday, January 31, 2014

ரம்மி-சினிமா விமர்சனம்





















ரம்மி-கொஞ்சம் காதல் நிறைய திகில்,அதிரடி,மோதல்,பயங்கரம்... என்று படம் காட்டும் கிராமத்து காதல் திகில் திரைப்படம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது...ஆனால் ஏதோ ஓன்று இல்லை



சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கிராமத்தில் 1987-ல் காதல் என்றால் கவுரவக் கொலை செய்யும் ஊரும் மக்களும் உள்ள கதைக்களம் அங்கே கல்லூரியில் படிக்க வந்த சக்தி (இனிகோ பிரபாகர்) ஜோசப் (விஜய் சேதுபதி) என்ற இரண்டு கல்லூரி நண்பர்களின் காதல் கதை.......


rummy

ஜோசப்  அந்த ஊர்  பெரிய மனிதரும் காதல் எதிரியும் ஆன தலைக்கட்டுகாரரின் மகள் சொர்னத்தை (ஐஸ்வர்யா)  காதலிக்க அவனது நண்பன் சக்தியோ தலைக்கட்டு தம்பி மகள் மீனாட்சியை (காயத்திரி) காதலிக்க என்று கலகலப்பாக நகரும் படம்........


rummy

இவர்கள்  காதல் ஊர் தலைக்கட்டுக்கு தெரியவர படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வித திகில்  உணர்வு நெஞ்சில் திக்..திக்...என்று
ஒருநாள் இரவு சொர்ணம் ஜோசப்பை இழுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓட...   தலைக்கட்டு ஆட்கள் கொலைவெறியுடன் ஜோசப்பை தேடுவதும் சக்தியையும் துரத்துவதும் என்று திகிலுடன் கதை நகர்கின்றது.....



ஓடிப்போன ஜோசப்-சொர்ணம் காதல் என்ன ஆனது....? திகிலுடன் இருக்கும் சக்தி-மீனாட்சி காதல் என்ன ஆனது.....? திகிலும் திருப்பங்களும் நிறைந்த ரம்மியை திரையில் பாருங்கள்

அறிமுக இயக்குனர் என்பது போல் இல்லாமல் பாலகிருஷ்ணன் படம் ஆரம்பத்திலையே  தலைக்கட்டுவின் அடியாள் ஊருக்குள் காதலித்த ஒருவனை விரட்டி கையை வெட்டும்  காட்சியை வைத்து...இரண்டு காதல் ஜோடிகள் காதலிக்கும் கதையை காட்டும் போதே பார்வையாளர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு 



விஜய் சேதுபதி வழக்கம் போல் நல்ல காதாப்பத்திரம் தேடி நடித்துள்ளார் அவருக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அவரது பாத்திரம் பேசும் படி அமைந்துள்ளது அவரும் பல்வேறு நடிப்பு பரிணாமங்களை காட்டி அசத்துகின்றார் 



இனிகோ பிரபாகர் கதாநாயகனாக காதல்,பாடல்,சண்டை காட்சிகளில் பிரமாதப் படுத்துகின்றார் முகபாவனையில் கொஞ்சம் மாற்றம் காட்டி நடித்து இருந்தால் இன்னும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.மற்றபடி காயத்திரி,ஐஸ்வர்யா,சூரி இவர்கள் கதையோடு ஒன்றி நடித்திட....ஊர் தலைக்கட்டாக வரும் பெரியவர் அவரது அடியாள்,கல்லூரி வில்லன் சையது..இவர்கள் நடிப்பும் அருமை 


                                thanks youtube by JSK Film Corporation

இமானின் ஒலிப்பதிவில் பாடல்கள் அத்தனையும்  கேட்பதற்கு 80-90 காலக்கட்டங்களில் நாம் ரசித்த பாடல்கள் போல் உள்ளது கூட மேல கூட வச்சு...பாடலும் கேட்க இனிமை பார்க்க   குளுமை பிரேம் குமாரின் ஒளிப்பதிவில் பாடல்களில் வரும் கோயிலும் கோயில் சார்ந்த தூண்கள்,கோபுரம்,குளம்...என்று பார்க்க கிராமத்து சூழலின்யதார்த்தம் படம் காட்டப்படுகின்றது (நல்லவேளை...கூட மேல கூட வச்சு...பாடலை கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு...மாதிரி ஜப்பானுக்கு பறந்துப் போகவில்லை)



கிராமத்துக் காதலை ரம்மியமாக படம்  காட்டிய ரம்மி திரைப்படம்....  எல்லாம்  நால்லாத்தான் இருக்கு ஆனால் மனதில் ஏதோ ஒரு தாக்கம்...ஜாதி வெறி ,கவுரவக் கொலை..இப்படி பழைய பஞ்சாங்கத்தையே படம் காட்டி பத்தில் ஒன்றாகிவிட்டதோ...? என்று....................




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1