google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கும்கி வீரன்-3D படத்துக்கு ஒரு 3D விமர்சனம்

Wednesday, January 08, 2014

கும்கி வீரன்-3D படத்துக்கு ஒரு 3D விமர்சனம்


என்  இனிய பிளாக்கர் நண்பர்களே! பேஸ்புக்,ட்விட்டர்களால்.....
பிளாக் பதிவுகளுக்கு குறைந்து வரும் பயனர்களை அதிகப் படுத்தும் எண்ணத்தில்....என் பதிவுகளில் பல புதுமைகள் செய்கின்றேன்... அதில் இதுவும் ஓன்று
கும்கி வீரன் (TYG 2) 3D படத்துக்கு ஒரு முப்பரிமான வண்ணச் சுவற்றில் 3D சினிமா விமர்சனம்  

(பதிவை படிக்க கண்ணாடி தேவையில்லை... ஆனால் கண்ணைக் கெடுத்துவிட்டேன் என்று யாரும் என் மீது கண்டனைக் கணை வீசாதீர்கள்... விருப்பமில்லாதவர்கள் இத்துடன் விட்டுவிடுங்கள்... )  




















கும்கி வீரன் பேருமட்டுமல்ல படமும் ஆக அதிரடி குப்பை என்று எல்லோரும் கழுவி ஊத்தியப் பிறகும் டோனிஜாவுக்காக படம் பார்க்கப் போனால்....


ஹாங்..ஊங்...டாங்....என்று  கராத்தே,மயோ தாய்,குங்பூ,காபோயிரா,வெஸ்டர்ன் பாக்ஸிங்...இப்படி ஏகப்பட்ட அயிட்டங்களுடன்  அவிங்களும் சண்டை போட்டு படம் பார்த்த என்னையும் மூக்கில் குத்தி அனுப்பிட்டாயிங்க


ஒரு சூப்பர் பைக் ரேஸ் இருக்கு என்று அண்டப்புளுகு விமர்சகர்களின் விமர்சனத்தை படித்து விட்டுப் போனால்....சைக்கிளும் இல்லாமல் பைக்கும் இல்லாமல் ஏதோ ஒரு சக்கடா வண்டிய வச்சிக்கிட்டு சர்க்கஸ் வேலை காட்டுறாயிங்க....

என்ன ஒரு ஆறுதல் என்றால் கிராபிக்ஸ் வேலைகள் இல்லாமல் கொஞ்சம் யதார்த்தமாக சண்டை போடுறாயிங்க.....அதையும் 3 D-யில் பார்க்கும் போது கொஞ்சம் நம்பும் படி இருக்கு... ஆனால் அதையே பார்த்துப் பார்த்து நம்ம மண்டை டமர்னு  உடைஞ்சிடும் போலிருக்கு.....
அப்ப அப்ப எதையாவது எடுத்து நம்ம மூஞ்சில எறியுராயிங்க...கம்பிய எடுத்து குத்தவறாயிங்க

tyg2


படத்தில் கதையென்று ஒன்றும் பெரிதாக இல்லை...தற்காப்பு கலை தெரிந்த  டோனிஜா அன்பாக வளர்க்கும்  யானையை Marrese Crump தலைமையில் ஒரு  கொள்ளைக்கூட்டத்தினர் கடத்தி அதன் தந்தங்களில் வெடிகுண்டு வைத்து தாய்லாந்து முக்கிய பிரமுகரை முக்கி முக்கி கொல்ல நினைக்கின்றனர்
டோனிஜா அந்தக் கூட்டத்தினரிடமிருந்து  தன் யானையை பாதுகாப்பாக மீட்டாரா..? என்பதை கொலைவெறியுடன் அடி பிடி அதிரடியாகவும் அவ்வப்போது நம்மளையும் மொக்கை அடியாகவும் அடித்து சொல்லுராயிங்க....



இப்படத்தில்  வரும் மொட்டத் தலை வில்லன்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரி இருக்கிறாயிங்க.....ஆனால் கவர்ச்சியாக இரண்டு பாங்காங் சிட்டுக்களைக் காட்டி..அய்யோ பாவம் அதுகளையும் அடிதடியில் இறக்கி கவர்ச்சியைக் கண்ணில காட்டவே மாட்டேங்கிராயிங்க.........


பாதாள குகையில் பாயிந்து  வரும் ரயிலுக்கு அடியில் போடும் சண்டை.........பெட்ரோல் டாங்கர் மீது மோதும் கார்கள் பற்றி எரிவது....ஆயில் குடோனில் சுற்றி எரியும் நெருப்புக்குள்  டோனிஜா போடும் சண்டை.......கடைசியில் யானை தந்தங்களில் தொங்கிக்கொண்டு போடும் சண்டை...

ஆக...கும்கி வீரன் ஒரு அரைவேக்காடு படம்.....கண்டம் துண்டமான வெட்டு ஒட்டு எடிட்டிங்,  கரடு முரடான ஒலிப்பதிவு, போலித் தோற்றம் தரும் சண்டைக்காட்சிகள்....

                               thanks-YouTube-by thethailandlife
தூம்-3 போன்ற அதிபிரமாண்டமான படங்கள் பார்த்தவர்களுக்கு......

cricket


இப்படி எந்தப் பிரமாண்டம் இல்லாத இந்த கும்கி வீரனை ஒருதரம்  பார்ப்பது நூறு தடவ நம்ம  ஆல் இன் ஆல் அழகுராஜா பார்ப்பதற்கு சமம்


 
இப்பதிவு பற்றிய தங்கள் மதிப்பீடு என்ன...? நண்பர்களே!




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1