google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோலி சோடா-சினிமா விமர்சனம்

Friday, January 24, 2014

கோலி சோடா-சினிமா விமர்சனம்


கோலி சோடா-காலி சோடா அல்ல கதையே நாயகனாக, நாயகியாக, காமெடியாக, அதிரடியாக... இப்படி எல்லாமுமான படு பந்தாவாக விஜய் மில்டன் வெண்திரையில் எழுதிய சமுக நாவல்



கதை.......கோயம்பேடு மார்க்கெட்டில் வாழும் அடையாளமில்லாத அனாதைகளான நான்கு சிறுவர்களின் ஆசா பாசங்கள்... அவர்கள் தேடிக்கொள்ளும் சுய அடையாளங்கள். 
























கோயம்பேடு  மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வாழும் (கிஷோர்,பாண்டி, ஸ்ரீராம்,  முருகேஷ் )  நான்கு சிறுவர்கள் தங்களை ஆதரிக்கும் ஆச்சி என்ற பெண்ணுடன்  சேர்ந்து  மார்க்கெட்டில் பெரிய கந்துவட்டி தாதாவும் சங்க தலைவராகவும் உள்ள நாயுடுவின்  குடோனில் ஆச்சி மெஸ் டிபன் கடை நடத்துகின்றார்கள் அவர்களுக்கு அதுவே ஆட்சி மெஸ் பசங்க என்று அடையாளமாக மாறிவிடுகின்றது 




ஒருநாள் இரவில் நாயுடுவின் அடியாள்  மயில் குடியும் குடித்தனமுமாக மெஸ்ஸில் வந்து அலப்பறை செய்ய அதனால் உண்டாகும் மோதலில் நான்கு பேரும் மயிலை அடித்துவிட தனது மரியாதை,தன் மீது உள்ள பயம்,பந்தா,அடையாளம் தொலைந்ததாக ஆத்திரம் கொண்ட நாயுடு நான்கு சிறுவர்களையும் அடித்து துவைத்து  நாலு தூர திசையில் தூக்கிப்போட்டு பிரித்து விடுகின்றார் 




























பிரிந்த நான்கு நண்பர்களும்  மீண்டும் ஓன்று சேர்ந்து நாயுடுவை எதிர்த்து பல பயங்கர ஆபத்துக்களை சந்தித்து தங்கள் அடையாளமான ஆட்சி மெஸ் டிபன் கடையை நாயுடுவிடமிருந்து மீட்டு செய்கூலி சேதாரமின்றி அவர்களும் நாயுடுவும் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.........



















இதை நகைச்சுவையும் காதலும் அதிரடியும் என்று பல திருப்பங்களுடன் சொல்வதே கோலி சோடா இப்படத்தின் உயிரோட்டமாக நகைச்சுவைக்கு இமான் அண்ணாச்சிக்கு நிறைய காட்சிகள் கலக்குகின்றார் அவர் போலிஸ் நிலையத்தில் டாஸ்மாக்கை போட்டுத் தாக்கும் காட்சி சூப்பர்   பவர் ஸ்டார்,சாம் ஆண்டர்சன் சிறப்பு தோற்றத்தில் மார்க்கெட்டில் நடக்கும் சினிமா சூட்டிங்  காட்சியில் வந்து சிரிக்க வைக்கின்றார்கள்

ஆட்சியாக நடித்திருக்கும் பெண்ணும் அவரது மகளாக நடித்திருக்கும் சாந்தினியும் ஒரு செடி ஒரு பிளவர் என்று வரும் ATM பெண்ணும் செம கலக்கல் நடிப்பு  கொத்தவால் சாவடி MKB என்ற கோயம்பேடு நாயுடுவாகவும் அவரது அடியாள் மயிலாகவும் வருபவர்கள் நடிப்பும் அதிரடி அசத்தல் (நடிகர்கள் யார் என்பதைவிட இங்கே கதையும் கதாப்பாத்திரங்களும் மட்டுமே  எல்லாமாக இருப்பதால்....)

























கோயம்பேடு மார்க்கட் கதை என்பதால் காய்கறிகள் போல் கூட்டம் கூட்டமாக நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் கதையோட்டமாக நாலு சிறுவர்களையும் நாயுடுவையும் மையமாக கொண்டு கதையை விருவிருப்பாகக் கொண்டு செல்லும் இயக்குனர் விஜய் மில்டன்   சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதால் காட்சிகள் கண்களை கவர்கின்றன 


கேரளா,கர்நாடகா என்று அவரது கேமரா ஒரு ரவுண்டு போய்வருகின்றது விடலைப் பசங்களின்  காதல் வார்த்தைகள்  கொஞ்சம் கசந்தாலும் இன்னும் சில வசனங்கள் இனிமையாக நெஞ்சை வருடுகின்றன 

அருணகிரி இசையில் அத்தனை பாடல்களும் துண்டு துண்டாக தெரிந்தாலும் எல்லாம் இனிமை அதிலும் கானா பாலாவின் ஆறு அடி வீடு.... பாடல் அருமை 























திரையில்  கணையாழி அசோகமித்திரனின் குறுநாவல் படித்ததுபோல் நிஜத்தின் பிரதிபலிப்பாக இந்த சமுதாயத்தில் வாழும் அடையாளம் இல்லாத மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அதிரடியாக திரையில் சொல்கின்ற கோலி சோடா........காலி சோடா அல்ல 


 















விரசங்களோ,அருவெறுப்பு வசனங்களோ,அதிபயங்கர அவலங்களோ..இல்லாத கோலி சோடாவை எல்லோரும் குடும்பத்துடன் குடித்து.......திரையில் பார்த்து கொண்டாடலாம் 



 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1