google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லா Vs வீரம்-கருத்துக்கணிப்பு முடிவு

Sunday, December 01, 2013

ஜில்லா Vs வீரம்-கருத்துக்கணிப்பு முடிவு












(குறிப்பு-இங்கே ஜில்லா Vs வீரம்-ஜெயிக்கப்போவது யாரு? கருத்துக்கணிப்பு முடிவும் ....போக்கிரி Vs ஆழ்வார் போன்று இவர்கள் இந்தப் பொங்கலுக்கு மோதிக்கொண்டால் என்ன  பக்க விளைவுகள் உண்டாகும்...? என்ற ஆய்வும் 


அன்றைய போக்கிரியும் ஆழ்வாரும் அசின் என்ற அம்மணியை கதாநாயகியாக கொண்டாடி திரைக்கு வந்தன மற்றபடி கதை இரு படங்களும் இரு வேறு துருவங்கள்.......

vijay

போக்கிரி-ஒர் இளம் போலிஸ் IPS அதிகாரி கிரிமினலாக வேஷம் போட்டு சர்வதேச அளவில் உள்ள பெரிய குற்றவாளியை அழிப்பதுதான் கதை படத்தில் விஜயின் உண்மையான அடையாளம் எது...? என்று பார்வையாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தெரியாத வண்ணம் சஸ்பென்ஸ் ஆக கதை சொல்லப்பட்டு 200 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபீஸ் பிளாக் பஸ்ட்டர் படமானது
ajith

ஆழ்வார்-அறிமுக இயக்குனர் செல்லாவின் இயக்கத்தில் அஜித் நடித்த இப்படத்தின் கதையோ......ஒரு வார்ட் பாய் சிவா    தனது தாய்-தங்கையை கொன்ற வில்லன்களை பழிவாங்க   ராமர்,கிருஷ்ணர்,நரசிம்மர் .. அவதாரங்கள் எடுத்து அழிப்பதே கதை...இப்படம் பழைய கள்ளு புதிய மொந்தை என்று நிறைய  எதிர் மறை   விமர்சனங்களுக்கும்   அதே நேரத்தில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பு என்று நேர்மறை விமர்சனங்களுக்கும் ஆளாகி போக்கிரி அளவுக்கு ஆழ்வார் வெற்றிபெறவில்லை



அப்போதும் ரசிகர்களுக்குள் இப்போது போன்றுதான் விமர்சன சண்டைகள்அந்த நேரம் தல சொன்னது........." Its Not a Good For Theatre owners if we two clashes "அதற்குப் பிறகு இதுநாள் வரை அஜித்-விஜய் இருவரும் தனித்தனியாக படங்களை வெளியிட்டு இருவரும் நல்ல அறுவடை செய்தார்கள்


ஆனால்...இவர்கள் இருவர் படங்களிலும் கதை சரியில்லை என்றால் இவர்களும் இவர்களது ரசிகசிகாமனிகளும் எவ்வளவு கூப்பாடு போட்டாலும் வசூலில் சாதனை படைப்பதில்லை அப்படியே அவர்கள்  தனியாக வந்தாலும் சாதித்து விடுவதில்லை


அப்படித்தான் சமீபத்திய உதாரணம் அஜித்துக்கு பில்லா-2 விஜய்க்கு தலைவா நல்ல கதை இருக்குமேயானால் அவர்களின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது
ஆனாலும் நமது கருத்துக்கணிப்பின் முடிவு.......
ஜில்லா Vs வீரம்-ஜெயிக்கப் போவது   யாரு?





இதில் இருவருக்கும் அப்படியொன்றும் மிகப் பெரிய வேறுபாடு இல்லை என்பதை நீங்களே அறிவீர்கள்......அந்த 6 விழுக்காடு வாக்குகள் இரண்டும் என்பதில் சரி சமமாக போனது 




இதனால் நமது சினிமா பஞ்சாயத்தில தீர்ப்பு என்ன வென்றால்........
இந்தப் பொங்கலுக்கு ஜில்லாவும் வீரமும் மோதிக்கொண்டாலும் நல்ல கதையம்சமுடன் யார் வருகின்றார்களோ அவர்களே வெல்வார்கள் என்று தீர்ப்பு அளிக்கப்படுதுங்கோ.........

அதனால் ரசிகசிகாமனிகளே உங்களுக்குள் சண்டை சச்சரவு இல்லாமல் இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கோ....

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1