google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தலைமுறைகள்-பாலுமகேந்திராவுக்கு இது தேவையா?

Monday, December 23, 2013

தலைமுறைகள்-பாலுமகேந்திராவுக்கு இது தேவையா?


திரையில் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம்.... திரையரங்ம் முழுவதும் பரவிக்கிடக்கும் இனம்புரியாத நிசப்தம் அந்த இனிமையான அமைதி... படம் பார்ப்பவர்களின் இதயங்களில் உதித்த இதமான உணர்வுகளின் பிரதிபலிப்பா? இல்லையேல்...
பாலுமகேந்திராவுக்கு இது தேவையா? என்ற எதிரோலிப்பா?

Made with .freeonlinephotoeditor.com

ஒரு கிராமத்து தாத்தாவுக்கும் ஒரு நகரத்து பேரனுக்கும்  உள்ள தலைமுறை இடைவெளி கடந்த களங்கமில்லாத  உண்மையான  பாசம்.... வேசமில்லாத  நேசம்....தலைமுறைகள்- திரையில் எழுதிய கவிதை  

சாதிப்பற்று உள்ள கிராமத்து முதியவர், ஒய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்பு பிள்ளை (பாலுமகேந்திரா), தன் மகன் டாக்டர் சிவராமன் (ஷஷிகுமார்) தன் விருப்பத்துக்கு மாறாக வேற்று மத ஸ்டெல்லா (ரம்யா சங்கர்) வை திருமணம் புரிந்ததால் தன் மகனை விரட்டிவிடுகிறார் 



12 வருடங்களுக்குப் பிறகு தனது உடல் நலக்குறைவை கேள்வியுற்று குடும்பத்துடன் தன்னை பார்க்க வரும் தன் மகன்,மருமகள்,பேரன்....... இவர்களுடன் படிப்படியாக ஐயிக்கியமாகிறார்   அன்றாட வாழ்க்கையின் நிஜத்தையும் நடைமுறைகளையும் தாத்தா தன் பேரன் ஆதித்தியா (மாஸ்டர் கார்த்திக்) வுக்கும் பேரன் தாத்தாவுக்கும்......... என்று தொடர்ந்து..........

                         thanks-YouTube-by Sasikumar Company Productions

நல்ல பட்டுச்சேலையின் ஊடே பின்னப்பட்ட பருத்தி நூலிழையாக சுப்பு பிள்ளை வாத்தியாருக்கு ஒரு சின்ன வீடும் மகளும் (வினோதினி) இருப்பது கூட நளினமாக காட்சிபடுத்தி ஒரு குடும்பத்தில் தலைமகன் செய்யும் செயல் அக்குடும்பத்தை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ற சமுக அவலத்தையும்  வெளிப்படுத்தி...........


தமிழ் தெரியாத பேரனுக்கு அரிச்சுவடி ஆரம்பித்து வைக்கும் தாத்தா..... கடைசியில் அந்த பேரனே விருது பெரும் தமிழ் எழுத்தாளராக வளரும் அளவுக்கு  மாற்றத்தை காட்சிபடுத்தி ஆங்கில எழுத்துரு,தமிங்கலம் என்று சில அறிவிலிகளால் அழிந்துகொண்டிருக்கும் தமிழை காக்கும் காலத்தால் அழியாத ஆவணப் படம் போன்று ஒருபுறம் ..........

thalaimuraigal

சாதி, மத வேற்றுமைகளால் சீரழியும்  இன்றைய தலைமுறையினருக்கு நல்ல பாடம் நடத்தும் விழிப்புணர்வு படமாகவும் இன்னொரு புறம்....
என்று ஆழமான பல நிகழ்வுகளை மேம்போக்காக காட்சிபடுத்தி இளைய தலைமுறையை சீர்படுத்த வந்த திரைப்படம்.......தலைமுறைகள்


ஒரு சிறந்த கலை படைப்பளியான இயக்குனர்  பாலுமகேந்திரா அன்று  தன் கலை படைப்புகளுக்கு வணிக ரீதியில் இடையிடையே இடைகளைக் காட்டி மசாலா சாயம் பூசி விற்பனை செய்ய வேண்டியிருந்தது....அது காலத்தின் கட்டாயம்



அப்படிப்பட்ட கலைஞர் இன்று தன் எண்ணங்களுக்கு உயிரும் உடலுமாக தன்னையே காட்சிபடுத்தி உணர்வு ரீதியான பாசங்கள் தவிர எவ்வித வணிக ரீதியிலான ஆபாசங்களுமின்றி திரையில் ஒரு ஓவியமாய்....காவியமாய்  வந்து....வாழ்ந்து காண்போரை கண்கலங்கச் செய்து,அவரவர் கடந்த காலங்களை நினைத்திட வைக்கின்றார்.....இது இன்றைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி.....அதை அறிந்து கொண்ட ஒரு கலைஞனின் முயற்சி........தலைமுறைகள்

இளையராஜாவின் இன்னிசையில் படம் உயிரோட்டமாக உள்ளது பாடல்களின் தேவை தேவையில்லை மலையும் மலைசார்ந்த காட்சிகளும் அருமையாக படம்பிடிக்கப்பட்டுள்ளது 

https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQBkLdjPahFh6ULT&url=https%3A%2F%2Ffbcdn-vthumb-a.akamaihd.net%2Fhvthumb-ak-frc3%2Fp280x280%2F1096895_665675983473114_665675796806466_17692_1852_b.jpg&jq=100

தலைமுறைகள்- திரைப்படம் பார்க்கும் போது....
அமைதியான நதியினிலே ஓடும் ஓடத்தில் அமர்ந்து....
அவ்வப்போது எழும் உணர்வு அலைகளால் அசைந்தாடி...
வாழ்வின் சின்னச் சின்ன நிகழ்வுகள்கூட.......
நீர்குமிழியாய் அழிந்து போவதில்லை.....வாழ்க்கைப் பயணம்    

Made with .freeonlinephotoeditor.com

இப்படியொரு கலைப்படைப்பை தமிழ் திரைக்கு என்றெடுத்த தலைமுறைகள் தயாரிப்பாளர் இயக்குனர்  சசிகுமாருக்கு இந்தத் தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் வாழ்த்துச் சொல்லும் 

Made with .freeonlinephotoeditor.com

இலங்கையில் பிறந்து லண்டனில் படித்து புனே திரைப்படக் கல்லூரியில் தங்க மெடல் வாங்கி....1971-ல் மலையாள நெல்லு திரைப்பட சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுடன் தன் திரியுலக வாழ்க்கையை துவங்கிய பாலுமகேந்திரா ஒரு இயக்குனராக,ஒளிப்பதிவாளராக,திரைக்கதை எழுத்தாளராக,ஒரு எடிட்டராக 20-க்கு மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி திரையுலகில் தன்னை பெருமையாக நிலைநாட்டிக்கொண்ட பாலுமகேந்திரா தலைமுறைகள் திரைப்படம் மூலம் முதன் முறையாக  தான் ஒரு சிறந்த நடிகராகவும் நிலைநாட்டிக்கொண்டார்....காலத்தால் அழிக்க முடியாத பிம்பத்தை தான் வாழும் காலத்தில் வடித்துக்கொண்டார் 

thalaimuraigal

 திரைக்குப் பின்னால் தன் திறைமையை வெளிப்படுத்திய எத்தனையோ கலைஞர்கள் இன்று நினைவில் இல்லாமல் நீர்த்துப்போனார்கள் ஆனாலும் எம்கேடி பாகவதர் காலம் தொட்டு திரையில் முகத்தை காட்டியவர்கள் இன்றும் நினைவில் நிற்கின்றார்கள் இந்த ஏக்கத்தையும் தாகத்தையும் பாலுமகேந்திரா போன்ற கலைஞர்களுக்கு தீர்த்து வைத்த தலைமுறைகள்-திரைப்படம்........ இன்னும் தொடரட்டும் இனிவரும் தலைமுறைகளுக்கு திரைப்பாடமாக   
          

Made with .freeonlinephotoeditor.com


தலைமுறைகள்-
இது திரைப்படமல்ல 
ஒரு கைதேர்ந்த 
இசைக்கலைஞனின் 
புல்லாங் குழலிசை.....

மீண்டும் 
லியோனார்டோ டா வின்சி 
இங்கே பிறந்துவந்து 
வெள்ளித்திரையில் 
வரைந்து வைத்த 
வாழ்க்கை ஓவியம்......

நண்பர்களே! நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்....
அல்லது படம் பார்த்துவிட்டு (முடிவு தேதி -29/12/2013) இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டு.......... 
உங்கள் பார்வையில்..............
தலைமுறைகள் திரைப்படம் பற்றிய உங்கள் மதீப்பீடு என்ன...? 


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........முடிவு-29/12/2013      

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1