google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விடியும் முன்-சினிமா விமர்சனம்

Saturday, November 30, 2013

விடியும் முன்-சினிமா விமர்சனம்


இருண்ட காமெடியாலும் வரண்ட பேண்டஸியாலும் வீழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை புது யுகத்துக்கு அழைத்துச் செல்லும் அறிமுக  இயக்குனர் பாலாஜி கே குமாரின்  வித்தியாசமான முயற்சி.....   சமுகத்தில் வெளியே தெரிந்தும் தெரியாமலும் உள்ள பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் 

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6561-vidiyum-munn-movie-stills-33.jpg

விபச்சார தொழில் செய்யும் ரேகா (பூஜா) ஒரு 12-வயது பெண் குழந்தை நந்தினி (மாளவிகா மணிகுட்டன்) யுடன் ரயிலில் தப்பிக்கும் காட்சியுடன் துவங்கும் படம்....அவளை விரட்டும் நான்கு  அதி பயங்கர மனித மிருகங்களிடமிருந்து ரேகா நந்தினியை காப்பாற்றினாளா....?   எதற்காக இந்த தீவிர விரட்டல்...? என்பதை ஒரு நாள் இரவில் நடக்கும் நிகழ்வுகளாக விருவிருப்பான காட்சிகளாலும் குறைந்த கதாப்பத்திரங்களாலும் திறமையான  திரைக்கதையாலும் திகிலுடன்  சொல்கிறது.......விடியும் முன் 

http://dailyindiamail.com/NewsImages/dailyindiamail%20pooja.jpg

பிரிட்டிஷ் திரிலர் திரைப்படமான லண்டன் டூ பிரைட்டன் ( London to Brighton) படத்தின் ரீமேக் என்றும் அதன் தாக்கம் என்றும்  சொல்லப்பட்டாலும் விடியும் முன் திரைப்படம் அதன் வேறுபட்ட காட்சிகளாலும் அதன் இயக்குனர் பாலாஜி கே குமாரின் தனித் திறமையாலும் பார்வையாளர்களின் இதயத்தில்  இனம்புரியாத ஒரு வித உணர்வு தாக்கத்தை நெடுநாளைக்கு விதைத்து செல்கின்றது. 

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6531-vidiyum-munn-movie-stills-03.jpg

இப்படத்தின்  பெரும் பகுதி இரவில் நடந்தாலும் காட்சியமைப்புகள் சீராக உள்ளன ஓர் அறிமுக இயக்குனர் போல் இல்லாமல் அடுக்கடுக்கான காட்சிகளால்........அதிலும் ஒரு 12 வயது குழந்தையையும் அவளை காப்பாற்ற நினைக்கும் ஒரு  பெண்ணையும் சுற்றியே கதை சென்றாலும் கொஞ்சமும் நமக்கு வெறுப்பு ஊட்டாமல் விறுவிறுப்பு ஊட்டி.....

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6566-vidiyum-munn-movie-stills-38.jpg

நான் கடவுள் படத்திற்குப் பிறகு காணாமல் போன பூஜா இப்படத்தில் விபச்சாரி ரேகாவாக  சிறந்த நடிப்பை பிரதிபலித்துள்ளார்.சிறுமி நந்தினியாக வரும் மாளவிகா நடிப்பில் வயதுக்கு மீறிய நல்ல முதிர்ச்சி தெரிகின்றது மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,ஜான் விஜய்,வினோத் கிஷன்,அமரேந்திரன்...இப்படி அளவான கதாப்பாத்திரங்கள் அவர்களும் அளவாக கதைக்கு ஏற்ப நடித்து படத்திற்கு மெருகூட்டுகின்றனர்  

http://haihoi.com/Channels/cine_gallery/Vidiyum-Mun-Movie-Photostills-Gallery-20_S_700.jpg

பிட்சா,யுத்தம் செய்...படங்கள் போன்று விடியும் முன் திரைப்படமும் படத்தின் உச்ச கட்ட காட்சிவரை அடுக்கடுக்கான திகில் காட்சிகளின் கட்டமைப்பில் நகர்ந்து கடைசியில் படத்துடன் நம்மை முழுமையாக ஒன்றச் செய்கின்றது 


படத்தில் நகரும் காட்சிகள் நம்மை கதையின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்க முடியாத வண்ணம் இருக்கும் ஆனால் கிளைமாக்ஸ் இப்படித்தான் என்று.......பையில் பணத்துக்குப் பதிலாக கருநாகத்தையும் தாதா துரைசிங்கத்தின் கையையும் லங்கேஷ்-சிங்காரம் இருவரும் காணும் வரை..........ஆனாலும் எந்த தீர்மானத்துக்கும் வரமுடியாத கதாப்பாத்திரங்களுடன் பார்வையாளர்களையும் அங்கே-இங்கே என்று அலைபாய வைக்கும் இப்படியொரு திரைக்கதையையும் இயக்கத்தையும்  நம்ம தமிழ் திரைப்படம் இதுவரை கண்டதில்லை...வெல்டன் பாலாஜி குமார்  

                               thanks-YouTube-Saregama Tamil
திறமையான  திரைக்கதையும் அளவான உரையாடலும் படத்துக்கு சிறப்பு.... 
"இந்த உலகத்துல என்ன என்னமோ மாறிடுச்சு...ஆனா இந்தத் தொழிலும் மாமாப்பசங்களும் மட்டும் மாறவே இல்ல..."


"ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு சாத்தான் இருக்கான்....அதை சிங்காரம் காட்டிட்டான் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு கடவுள் இருக்கான் அதை நீ காட்டிட்ட...." 

http://www.tvlankaonline.net/gallery/plog-content/thumbs/miscellaneous/vidiyum-munn-movie-stills/large/6556-vidiyum-munn-movie-stills-28.jpg

எல்லாவற்றையும் விட எல்லா திகில் படங்களிலும் பிரதானமாக இருக்கும் பின்னணி இசையே இப்படத்திலும் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் மூலம் படத்திற்கு ஜீவனாக உள்ளது அதேப் போன்று சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு திகிலூட்டும் பிரமாண்டம் படைக்க....எடிட்டர் சத்யராஜ் கத்தரியை  சரியாக போட்டு.....படத்திற்கு விறுவிறுப்பு செய்துள்ளனர்

புதுமை விரும்பிகள் மட்டுமன்றி...இந்தச் சமுகத்தின் இருண்ட உலகில் காலங்காலமாக நடந்துவரும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை  அறிந்துகொள்ளவும் அனைவரும் காணவேண்டிய காவியம்






விடியும் முன்-மெதுவாக நகர்ந்து மின்னல் வேகம் பிடிக்கும் இப்படம்  பார்வையாளர்களின் இதயத் துடிப்பை ஏகமாய் எகிரச்செய்யும் 


சிறப்பு வெளியீடு........








 
ஜில்லா Vs வீரம்-ஜெயிக்கப் போவது யாரு? கருத்துக்கணிப்பு முடிவு

2007-ஆம் ஆண்டு விஜயின் போக்கிரி-யும்  அஜித்தின் ஆழ்வார்-ரும் மோதிக்கொண்ட போது சினிமா உலகில் உண்டான  விளைவுகள் என்ன..? மீண்டும் விஜயின் ஜில்லாவும் அஜித்தின் வீரம்-மும் இந்த பொங்கலுக்கு மோதிக்கொண்டால் உண்டாகும் பக்க விளைவுகள் என்ன...? என்று ஓர் ய்....வுப் பதிவு. 
 http://parithimuthurasan.blogspot.in/2013/12/vijay-ajith-pollresult.html
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1