google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்

Sunday, November 03, 2013

பாண்டிய நாடு-சினிமா விமர்சனம்















(தீர்ப்பு- அடடடடா....என்று ஆச்சரியமூட்டுடும் எழுத்து-இயக்கம் சுசீந்தரனின் பாண்டிய நாடு..ஆகா..ஓகோ...என்று  நடிப்பில் அடித்து நொறுக்கும்  விஷாலின் பாண்டிய நாடு....)

பொதுவாக பழிவாங்கும் கதையுள்ள படம் என்றாலே நம்பகத்தன்மை மறைந்திருக்கும் ஆனால் பாண்டிய நாடு யதார்த்தமான கதையுடன் நம்பகத்தன்மை காட்சிகளுடன் மதுரை கதைக் களத்திற்கே உரிய நிதர்சனத்துடன் விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் சொல்லப்பட்டுள்ளது

pandiyanadu

எதிர்காலத்தை எண்ணி பயப்படும் சுபாவம் கொண்ட மொபைல் சர்விஸ் கடையில் வேலைசெய்யும் சிவகுமார் (விஷால்) கனிமத்துறையில் உயர் அதிகாரியான தன் அண்ணனை கொலைசெய்யும் கல் குவாரி தாதா சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தையும் தனியாளாக நின்று அழிக்கும் பழிவாங்கும் கதை 




முள்ளை முள்ளால் எடுப்பது போல் வன்முறையை வன்முறையால் வெல்லும் கதை ...ஆனால் படம் முழுக்க காதல் பாசம் உறவுகள் என்று உணர்வுகள் விதைக்கப்பட்டு வன்முறை கலாச்சார அருவெறுப்பு இல்லாமல் உணர்வுப் போராட்டமாக படம் காட்டப்படுகிறது 
pandiyanadu

படம் ஆரம்பிக்கும் போதே........மதுரையில் ஒரு பெரிய தாதா மரணம் அடைவதையும் அதையும் DIE-யாரே என்று நையாண்டி ஒப்பாரி பாடலுடன் புதுமையாக ஆட்டம் பாட்டத்துடன் துவங்கி...அப்படியே அடுத்த தாதா யார்..? என்று விறுவிறுப்பு போராட்டமாக சிம்மக்கல் ரவி-சிகப்பு ராஜா என்ற இரண்டு குட்டி தாதாக்களுக்குள்  நடக்கும் கொலைகளும்... அரசியல் கலந்த குண்டாயிசம் அதிலே சிம்மக்கல் ரவி  மிகப்பெரிய கட்டப்பஞ்சயத்து சாம்ராஜ்யத்தின் தாதாவாக மாறிவிடுகின்றான் 


இரண்டு மகன்களுடன் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாண சுந்தரத்தின்  (பாரதிராஜா)  மூத்தமகன்  கணிம வள துறையில் வேலைசெய்யும் நாகராஜ் சிம்மக்கல் ரவியின் கல் குவாரியை மூடிவிடுவதால் கொலை செய்யப்படுகின்றார் 

Made with .freeonlinephotoeditor.com

வேதனையில் வாடும் கல்யாண சுந்தரம் கூலிப்படை ஏற்பாடு செய்து சிம்மக்கல் ரவியை கொலை செய்ய முயலுவதும் அவரது இளைய மகன் சிவகுமார் தனி ஆளாக சிம்மக்கல் ரவியையும் அவன் கூட்டத்தினரையும் பழிவாங்க முயலுகின்றார்

ஒரு கட்டத்தில்  தன்னை  கொலை செய்ய முயற்சி செய்யும் குண்டர்களிடம்  தப்பிய சிம்மக்கல் ரவி கல்யாணசுந்தரத்தை தேடுவதும் அதை அறிந்த சிவகுமார் தனது தந்தையையும் காப்பாற்றி சிம்மக்கல் ரவியையும் அவனது கூட்டத்தினரையும் பழிவாங்குகின்றான் 

                                thanks-YouTube-by DiVOTamilmovies

இதற்கிடையில் துனைக்கதைகளாக சிவகுமாரின் நண்பன் சேது-அமுதா கதை திகிலாகவும் லட்சுமி மேனன்-விஷால் கதை காதலாகவும் சூரியின் கதாப்பாத்திரம்    காமெடியாகவும் ...ஆனாலும் எல்லாம் மூலக்கதைக்கு பாதகம் செய்யாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது 

Made with .freeonlinephotoeditor.com

சிம்மக்கல் ரவி படிப்படியாக தீவிரமாக மிகப்பெரிய தாதாவாக மாறுவதை நிறைய காட்சிகளால்  படத்தில் அதிக நேரம் எடுத்துக் கொண்டது இயக்குனர் மிக வலுவான ஒரு வில்லனை உருவாக்க என்பதும்...அப்படி பட்ட கொடூரமான அசுரனை எப்படி சிவகுமார் தனி ஆளாக நின்று ஜெயிப்பதை நம்பகத்தன்மையுடன் தனது திரைக்கதையால் யதார்த்தமாக காட்டியுள்ளார் படத்தில் வரும் ஒவ்வொரு பிரேமும் முக்கியமானவை அதேப்போல் கதாப்பாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படவேண்டியது 

vishal


விஷால்......இப்படத்தில் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் காட்டுகின்றார்.கோயிலில் நண்பன் சூரியின் காதலுக்கு துணைப்போகும்  போது அங்கே டீச்சர் பாப்பா லட்சுமி மேனனை லவ்வுவதும் அப்புறம் பள்ளிக்கூடத்தில் லவ்வை திக்கி திக்கி உளறுவதும் லட்சுமியை ஈவ் டீஸ் பண்ணும் ரவுடிகளை நண்பன் சேதுவை அடிக்க விட்டு தனது லவ்வை பில்டப் செய்வதிலும் சாந்த ரூபியாக இருக்கும் அவர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு கிட்டங்கியில் தனது தந்தையை காப்பாற்றுவதிலாகட்டும் கிளைமாக்சில் வில்லனையும் அவனது அடியாள்களையும் அடித்து நொறுக்கும் தில்...லாகட்டும் நடிப்பில் அசத்துகின்றார் 

lakshmimenon


லட்சுமி மேனனுக்கு படத்தில் லவ் பண்ணுவதை விட நடிப்பதற்கு வேறு  வேலை இல்லை........ ஆனாலும் FY FY  KALACHI FY என்று நல்லாவே விஷாலை கலாய்ச்சி குத்து ஆட்டமும் போடுகின்றார்... அம்மணி உனக்கு எங்கேயோ மச்சமிருக்கு உன் படங்களில் நீ வரும் காட்சிகளெல்லாம் செம கிக்காக இருக்கு

ஒரு சிறந்த இயக்குனராக வெற்றிக்கொடி நாட்டிய பாரதிராஜா... இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வயதான தந்தையாக பாசமுள்ள குடும்பத்தலைவராக.... இப்படி நடிப்பிலும்  முதிர்சியைக்காட்டி சிறந்த நடிகராகவும் பரிணமிக்கின்றார் 

துணை நடிகராக வரும் நடிகர் சூரி....ஓவர்-ஆக்டிங் இல்லாத நல்ல நண்பனாகவும் அளவான விரசமில்லாத நகைச்சுவை நடிகராக பளிச்சிடுகின்றார் வில்லன் சிம்மக்கல் ரவியாக நடித்துள்ள சோமசுந்தரம் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் 

BGM இசையில் D.இமான் உன்னதம் புரிந்துள்ளார்  என்றால் பாடல்களில் இனிமையை இசைத்துள்ளார்...வைரமுத்துவின் வார்த்தைகளில் ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான் பாடல் அருமையோ அருமை மதியின் ஒளிப்பதிவில் பாடல் கட்சிகள் உயிர் பெற்று உலாவுகின்றன மூனாறு இயற்கைகாட்சிகளில்  அவரது காட்சிப்படைப்புகளில் மிளிர்கின்றன  கலைப்படத்தின் கைவண்ணம் 

vishal

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் சண்டைக்காட்சிகள் அத்தனையும் யதார்த்தம் ...கடைசி கிளைமாக்ஸ் போராட்டம் விஷால் பாரதிராஜாவை காப்பாற்றும் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது 
இவை எல்லாவற்றையும் தனது எழுத்து இயக்கத்தால் சிறப்பாக்கிய இயக்குனர் சுசீந்திரனை பாராட்டலாம் 

                                  thanks-YouTube-by DiVOTamilmovies


இங்கே வன்முறைக்கு வக்காலத்துவாங்குவது போல் கதை இருப்பதும் வன்முறையை வன்முறையாலேயே வெல்லவேண்டும் என்று நியாயப்படுத்துவது போல் காட்சிகள் நிறைந்திருப்பதும் உள்ள பாண்டிய நாடு இயக்குனர் சுசீந்திரனின் திரைக்கதை படம் பார்ப்பவர்களை மதிமயங்கச் செய்கின்றது..... 
நியாயமே என்று தீர்மானிக்கத் தோன்றுகிறது 

பாண்டிய நாடு-அடடடடா....என்று ஆச்சரியமூட்டும் சுசீந்தரனின் எழுத்து-இயக்கம் ....ஆகா..ஓகோ...என்று  அடித்து நொறுக்கும் விஷாலின் நடிப்பு



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1