google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய் ரீமேக்கில் அத்தரின்டிகி டாரேடி(தெலுங்கு) வருமா?

Saturday, October 05, 2013

விஜய் ரீமேக்கில் அத்தரின்டிகி டாரேடி(தெலுங்கு) வருமா?

அத்தரின்டிகி டாரேடி(தெலுங்கு) படத்தின் டைட்டில் அர்த்தமே...மாமியார் வீட்டிற்கு வழி எப்படி...? என்பதே படத்தின் நகைச்சுவையை விளக்க....... ஆந்திரா மட்டுமல்ல இங்கேயும் அலைமோதும் கூட்டம்... கொட்டும் வசூல் மழை 


vijay

அதிலும் நம்ம இளைய தளபதி விஜய் கில்லி மாதிரி துள்ளி இப்படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணப் போகிறார் என்றதும் அரங்கம் அதிரும் தளபதி ரசிகர்கள் படையெடுப்பு.அப்படி என்னதான் இருக்கு அத்தரின்டிகி டாரேடி படத்தில்...?



ஆந்திரா பவர் ஸ்டார் பவன் கல்யாண் கவர்ச்சிப் புயல் சமந்தாவுடன் இணைந்து நடித்து வசூலில் சக்கப்போடு போடும்  இப்படம் 2013-ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை காதல் திரைப்படம் என்று அனைவரும் பாராட்ட...இத்தனைக்கும் இந்தப் படம் பாதியோ முழுசா தியேட்டருக்கு வரும் முன்னாடி youtube-ல் வந்ததாக பெரும் ரகளை....... போதாக்குறைக்கு ஆந்திராவில் பவன் கல்யாண் அரசியல்வாதியான நடிகர்  சிரஞ்சீவியின் தம்பி என்பதால் தெலுங்கானா பிரச்சனையில்..... இப்படி பிரச்சனைகளே இப்படத்திற்கு நல்ல விளம்பரமானதோ...?   

freeonlinephotoeditor


இப்படத்தின் கதை........தாத்தாவின் பிரிந்த குடும்பத்தை பேரன் சேர்த்துவைக்கும் பழைய கள்ளு....புதிய மொந்தை 

இத்தாலியில் மிலன் நகரில் வசிக்கும் இந்திய செல்வந்தர் ரகுநந்தன் (போமன் இரானி) னின் விருப்பத்திற்கு மாறாக அவரது மகள் சுகந்தா (நதியா) காதலால் ராஜசேகர் (ராவ் ரமேஷ்) என்பவரை திருமணம் செய்து பிரிந்து சென்றதால்....அவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்க....

http://www.frndzin.com/file/pic/photo/2013/07/adbe804dda7448c706de6de404823795_500.jpg

அவரது பேரன் கவுதம் நந்தா (பவன் கல்யாண்) தனது தாத்தாவை சந்தோசப்படுத்த அத்தை சுகந்தாவை மீண்டும் அழைத்து வந்து தாத்தாவுடன் ஓன்று சேர்த்து வைப்பதாகத் தாத்தாவிடம் சபதம் செய்து  (அத்தரின்டிகி டாரேடி) மாமியார் வீட்டிற்கு வழி எப்படி..? புறப்படுகிறார் 



பிரமீளா (ப்ரனிதா சுபாஸ்) & சஷி (சமந்தா) என்று இரண்டு மகள்கள் உள்ள தனது அத்தை வீட்டிற்குள் கவுதம் நந்தா கார் ட்ரைவர் சித்துவாகவும் அவரது நண்பர் படு (அலி)வுடன் நுழைந்து.....கவுதம் பிரமிளாவை டாவடிக்க....அந்தப் பட்சியோ ஆல்ரெடி காதல் என்கேஜ்ட்...அதனால்,கவுதம் காதல் பார்வையோ சஷிமீது ....சஷியோ கவுதமை சந்தேகக் கண்ணுடன் நோக்க....

http://newsaponline.com/Gallery/wp-content/gallery/aatharintiki-daredi/aatharintiki-daredi-stills-pawan-kalyansamantha-11.jpg

இதற்கிடையில் பிரமிளாவின் காதலை சேர்த்துவைக்கக் கவுதம்-படு-சஷி மூவரும் ஒரு கிராமத்திற்குச் செல்லும் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் சஷி தற்காலிக சுயநினைவு இழக்க...கவுதம் அவளது காதலன் என்று சொல்லி.......ஏக ரகளையிலும் பிரமிளாவின் காதலனை கிராமத்திலிருந்து அடிதடியுடன் கடத்துவதும் படம் நகர்ந்து..காதலனுடன் மூவரும் அத்தை வீட்டுக்கு திரும்புகின்றனர்  சஷிக்கும் பழைய நினைவு திரும்புகிறது  

http://images.desimartini.com/media/versions/main/original/17f991c2-9bde-4791-9c15-5b45ec963013_original_image_500_500.jpg

ஒரு கட்டத்தில்.... கவுதம் யார் என்பது சுகந்தாவுக்குத் தெரிய வர....கவுதம் வீட்டைவிட்டு வெளியேறும் போது சஷியும் அவரைக் காதலிப்பதை அறிந்து...



மீண்டும் கவுதம்......பாஸ்கர் (பிரமானந்தம்) என்ற பணக்காரா NRI-யின் அசிஷ்டன்டாகச் சுகந்தா வீட்டிற்குள் நுழைந்து.....சஷிக்கும் வில்லன் சித்தப்பா(கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மகனுக்கும் சுகந்தாவால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தடுத்து நிறுத்தி....

freeonlinephotoeditor

ஆக......கவுதம் நந்தா தனது அத்தை சுகந்தா குடும்பத்தைத் தனது தாத்தா ரகுநந்தனுடன் இணைத்தாரா...? கவுதம்-சஷி காதல் வென்றதா....? என்று பல திருப்பங்கள் அதிரடி நகைச்சுவையுடன் இப்படம் சொல்லப்படுகிறது.



NRI பணக்காரராக வரும் பிரேமானந்தா சமந்தாவை அடைய செய்யும் முயற்சிகளும் அதைப் பவன் கல்யாண் தடுப்பதும் படத்தில் நல்ல நகைச்சுவை.........கிளைமாக்ஸ் காட்சியில் சமந்தாவை பிரமானந்தத்தின் ஆட்கள் கடத்திச் செல்வது.....பவன் நண்பராக வரும் அலி....இப்படி படத்தில் காமெடி கலாட்டாக்களுக்குப் பஞ்சமில்லை 



இப்படத்தில் பவன் கல்யாண் ஒரு கலக்கல் பாடலும் பாடியுள்ளார்...நம்ம இளைய தளபதி போல்.... வாங்கண்ணா...வணக்கங்கண்ணா...கூகுள் கூகுள்... மாதிரி.... இப்படம் ரீமேக் பண்ணினால்....மியாவ்..மியாவ்...மாமியார்... என்று நம்ம தளபதி ஒரு குத்துப்பாட்டும் போடலாம்...ச்சே...பாடலாம் .

http://i1.ytimg.com/vi/ex9XNjoY03U/hqdefault.jpg

அதிரடி சண்டைகளும் கவர்ச்சியான காதலும் நிறைந்த இந்தக் கதையைத் தமிழில் ரீமேக் செய்ய கடும் போட்டி....? அதிலும் நம்ம இளைய தளபதியே முன்னாடி நிற்பதாகக் கேள்வி...விஜய் ரீமேக் செய்தால் தெலுங்கு ஒக்கடு தமிழில்  கில்லி ஆனதுபோல் வெற்றியை சொல்லி அடிப்பாரா...? இந்தக் கடும் ரீமேக் உரிமை போட்டியில் விஜய் வெற்றி பெறுவாரா...?


http://peppycinema.com/wp-content/uploads/2013/05/Thalaivaa-Unseen-Working-Stills-3.jpg

 
(அண்ணேன்...அப்படியே அத்தரின்டிகி டாரேடி தமிழ் ரீமேக் உரிமை இளைய தளபதிக்கு கிடைக்காவிட்டாலும்.......இருக்கவே இருக்காரு நம்ம தலைவா டைரடக்கரு விஜய்...அவருக்கிட்ட சொன்னா அப்படியே அம்புட்டையும் சுட்டுச் சுட்டு தள்ளு வாரு....மீண்டும் விஜய் & விஜய் கூட்டணியில் சூப்பர்-டூப்பர் ஹிட்  
மாமியார் வீட்டுக்கு வழி எப்படி...? என்ற திரைப்படம் ரெடி....


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1