google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓநாய் சினிமாக்களும் ஆட்டுக்குட்டி ரசிகர்களும்

Friday, October 04, 2013

ஓநாய் சினிமாக்களும் ஆட்டுக்குட்டி ரசிகர்களும்


(குறிப்பு-இங்கே நான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தால் என்னுள் எழுந்த சில கேள்விகள் இங்கே ஓநாய்களாக வந்து கொண்டிருக்கும் சில  சினிமாக்களிடம் ஆட்டுக்குட்டிகளாய் அகப்பட்டுக்கொண்ட  ரசிகர்கள் பற்றி ...........)


mishkin

இயக்குனர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் மனித உணர்சிகளாளும் இருண்ட நகைச்சுவைகளாளும் நிரப்பப்பட்ட ஓர் அற்புதமான கதை உண்டு....நல்ல நோக்கம் கொண்ட ஒருவரது வாழ்க்கையை இடைவிடாது அழிக்க நினைக்கும் சமுகத்திலிருந்து தன்னை மீட்க்க நினைக்கும் ஆபத்தான கூலிப்படைப் பற்றிய உணர்வுப்பூர்வமான சஸ்பென்ஸ் த்திரிலர் என்று......... Rediff Rating: கொடுத்து பாராட்டுகிறார் விமர்சகரி சரஸ்வதி 



 

துரத்தல் ஓட்டமும்  பாச்சலாகவும் இருக்கும் இப்படத்தில் அதற்கான காரணத்தை ஒரே காட்சியில் வித்தியாசமாக விளக்கம் கொடுத்த இயக்குனர் மிஷ்கின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ஈர்க்கிறார் என்றும் சுருங்கச் சொன்னால்..........இப்படம் அறிவார்ந்த திரைக்கதையாலும் அற்புதமான தொழில் நுட்பத்தாலும் உண்மையான கலை வெளிப்பாட்டாலும் நாம் கொடுத்த காசுக்கு நல்லதொரு சஸ்பென்ஸ் த்திரிலர் திரைப்படம் பார்த்த நிறைவு என்றும் மீண்டும் இயக்குனர் மிஷ்கின் தன்னை நிலைபடுத்திக் கொண்டார்  என்று தீர்ப்பும்  3.5 ( 3.5 / 5.0) மதீப்பீடும் வழங்கி. எழுதுகிறது BEHINDWOODS விமர்சனக் குழு....


freeonlinephotoeditor


இப்படத்தின் த்திரிலிங்கும் பதட்டமும் இளையராஜாவின் பின்னணி இசையால் புத்துயிர் பெறுகிறது.இப்படத்தில் ஒரு ஹீரோ இடம் பெறவில்லை ஆனால் திரைக்கதையோட்டத்தின் நிசப்த்தத்தை நிரப்பும் இசையமைப்பாளரின் அறிவார்ந்த பின்னணி இசை உண்மையான ஹீரோவாக ஸ்கோர் செய்வதாகவும் (The film doesn't feature a hero, but the real hero is the composer's score)............


                                                                    thanks-soundcloud

இப்படத்தின் மிகப்பெரிய பலமேஇசைதான் ஏனென்றால் அது சில முக்கிய காட்சிகளில் வார்த்தைக்குப் பதிலாக காட்சியை  வலுவாக விவரிக்கும் பணியை வெற்றிகரமாகச்  செய்கிறது. சில கதாப்பாத்திரங்களின் வலியை ஆச்சரியமூட்டும் விதம் பிரதிபலிக்கிறது. படத்தின் பதற்றத்தை பற்றிக்கொள்ள வைக்கும் 
( breathtaking orchestra-backed composition) இசை என்று பாராட்டியயும் இப்படத்தை an edge-of-the-seat tale என்று எழுதுகிறது  IBN LIVE வலைத்தளம்

freeonlinephotoeditor

இப்படி அனைத்து வலைதளங்களும் ட்வீட்டர்களும் முகநூல் வாசிகளும் பாராட்டும் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படம் ....... டாஸ்மாக்கும்  சினிமாவும் என்று குடியும் கூத்துமாக மாறிவிட்ட இந்த நாட்டில் இது போன்ற அறிவுஜீவி ரசிகர்களுக்கு அறிவுஜீவி இயக்குனர்கள் எடுக்கும் அறிவுஜீவி படங்களின் கதியென்ன....? விருதுகளும் பாராட்டுப் பத்திரங்களும் போதுமா....? 


 
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் இந்த நாட்டில் எத்தனை அரங்குகளில் ஓடுகிறது...? எந்தத் திரையரங்கில் இப்படம் ஓடுகின்றது என்று வித்தியாசமான சினிமா விரும்பிகள் தேடிப்பிடித்து பார்க்க நினைக்கும் போது.....அந்தப் படங்கள் அரங்கை விட்டு ஓடிவிடுகின்றன...?

freeonlinephotoeditor

 (அண்ணன்...மிஷ்கினுக்கோ கைவசம் போஸ்டர் ஓட்டும் தொழில் இருக்கு..அதுவும் தெரியாதவர்கள் அய்யோ...பாவம் அதுக்குத்தான் படத்தில இரண்டு குத்துப்பாட்டு இருந்துச்சுனா...அம்மணிகளை புரமொசனுக்கு அனுப்பியிருக்கலாம்...இப்படி போஸ்டர் ஓட்ட வேண்டியிருக்காது )

freeonlinephotoeditor

இந்த சினிமா நாட்டில் படம் காட்டுகிறேன் என்று கொள்ளை விலையில் கேன்-கோக்,பட்டர் பாப்கான்,பப்ஸ்,பர்கர்..வியாபாரம் செய்யும் மால் தியேட்டர்கள்கூட இம்மாதிரி படங்களைப் போட்டால் வாங்கும் கூட்டம் வருவதில்லை என்று இப்படங்களை யாரும் வாங்குவதில்லை.........



(முறுக்கு...கடலை மிட்டாய் விற்கும் தியேட்டர்களை இப்போ காணவில்லை...அவைகள் கல்யாண மண்டபங்களாக....) அதே நேரம் ஜனரஞ்சகமான அரங்குகள் இப்படங்களின் வாசனையைக்கூட முகர்வதில்லை.......அப்படியே படம் போட்டாலும் தியேட்டர் ஆபெரட்டர் மட்டுமே படம் பார்த்து...வாழ்க்கை வெறுத்து...வேலையை உதறிவிட்டு ஓடிப்போனவர்கள் கதை நிறைய.....

freeonlinephotoeditor


இப்படிப்பட்ட  ரசிகர்கள் உள்ள சினிமா நாட்டில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களை இவர்கள்  யாருக்காக எடுக்கிறார்கள்..? இன்னும் ஆயிரக்கணக்கான சினிமா (நாய்க்)குட்டிகள் பிறந்தும் யாரும் தேடுவாரின்றி சினிமா லேப் இருட்டு அறைகளிலேயே சாகக்கிடக்கின்றன............ 


                        thanks-YouTube-by IndiaGlitz Tamil Movies



    திரு@thirumarant
படம் எடுத்ததும் இயக்குனர் வேலை முடிந்தது... அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் ரசிகனின் உரிமை... அதவிட்டுட்டு சும்மா நொய் நொய்ன்னு...
தமிழ்ப்பறவை @Tparavai 
@thirumarant ஜெயமோகன் ஆள்தானய்யா நீர். இப்டித்தான் போஸ்ட்மாடர்னிசக் கருத்துக்களை உதிர்ப்பீர்

  சி.பி.செந்தில்குமார்@senthilcp
'ஓநாயுமஆட்டுக்குட்டியும்': பாராட்டு குவிந்தாலும் போஸ்டர் ஒட்ட காசில்லை- மிஸ்கின் ஆதங்கம்!: # காமரா கோணத்தில் ஜம்பு கர்ணன்  ஆகிடுங்க
ஆசான் 3.0@iAasaan 
ஓநாயுமஆட்டுக்குட்டியும் பாத்தா தியேட்டர்ல தான் பாக்கனும்ன்னு பல்லைக் கடிச்சுகிட்டு இருக்கேன்.எப்படியும் இன்னிக்கு ராத்திரி பாத்துருவேன்

ஆல்தோட்டபூபதி@thoatta 
முகமூடியிலிருந்த முட்டாள்தனங்களை டஸ்ட்பின்னில் போட்டுவிட்டு பெஸ்ட்ப்லிம் தர முனைந்திருக்கிறார் மிஸ்கின் # ஓநாயுமஆட்டுக்குட்டியும
tamil@tamilten
பன்னியும் கன்னுக்குட்டியும்' டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' வாய் பிளக்க...


(அண்ணேன்...இப்போ நாலு படம் நடிச்சோமா...அப்படியே ரசிகர் மன்றம் வச்சோமா...அப்புறம் யோக்கியமா மக்களிடம் நடிச்சோமா..அப்படியே அல்லக்கை ரசிகர்களை கூட்டினோமா...அரசியலில் நின்னோமா...ஜெயிச்சோமா.... முதலமைச்சர் ஆணோமா...அவியிங்கள எம்.எல்.ஏ.க்கள் ஆக்கினோமானு..........   )

தலைவா! 
இப்போ உங்களுக்கு தெரிந்திருக்குமே....... 
ஓநாய் சினிமாக்கள் எவை...? 
அவைகளிடம் அகப்பட்டுக் கொண்ட  
ஆட்டுக்குட்டி ரசிகர்கள் யாரு....? என்று


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1