google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-சினிமா விமர்சனம்

Wednesday, October 02, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-படமோ முழுக்க முழுக்க (டாஸ்மாக்) நாற்றமெடுக்கும் (டாஸ்மாக்) மனிதர்கள் பற்றிய  "பக்கி" காமெடி.. இப்படத்திற்கு நமது கணக்கெடுப்பு விருப்பு 90%...ஆனால் படமோ 100% (பொழுது) போக்கு படம்..... கதையோ.......? )

http://i1.ytimg.com/vi/R0JNmRIcAY0/hqdefault.jpg

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர்  கோகுல் படம் ஆரம்பிக்கும் போதே ட்ராபிக் சிக்னல் நிறுத்தத்தில்..........

இப்படம் சுமார் மூஞ்சி குமார் (விஜய் சேதுபதி) ரின் கதை என்று சொல்லும் போது........
பாலா (அஸ்வின்) அருகில் வந்து நிற்க அவரது கதை என்று சொல்ல...
பெயிண்டர்  ராஜ் (ராஜேந்திரன்) னும் அவரது கூட்டாளி பட்டி-யும் வந்து நிற்க...அவர்களின் கதை...

இப்படி படம் முழுக்கக் கூட்டம் கூட்டமாகக் கதாப்பாத்திரங்கள் ...எங்கே நாம் மீண்டும் மூடர் கூடம் படத்திற்கு மாறி வந்துவிட்டோமோ என்ற பிரமை.........



அண்ணாச்சி (பசுபதி) யின் டாஸ்மாக் கடை பாரில்....
 பட்டிமன்றம் ராஜா தன் மகள் குமுதா (நந்திதா) வை காதல் டார்ச்சர் பண்ணுவதாகக் குடியும் காதலும் தொழிலாகக் கொண்ட சுமார் மூஞ்சி குமாரை கூட்டி வைத்துப் பஞ்சாயத்து....குமுதாவிடம் குமார் செய்யும்  அலப்பறை காதல் காட்சிகளும்  படத்தைக் கலகலப்பாக அரங்கம் அதிர கொண்டுசெல்கிறது...கடைசியில் அண்ணாச்சி குரூப் குமாரை அடித்துகாயப்படுத்தி விரட்ட....

vijaysethupathi

 
அதே டாஸ்மாக் கடை பாரில்......கள்ளக்காதலி மஞ்சள் ரோஜாப்பூ பேபிக்காக பெயிண்டர் ராஜும் அவனது கூட்டாளியும்  அவளது புருஷனை ரகசியமாகக் கொலை செய்யும்  காட்சி...குமாரின் செல்போனை திருடி பேபியுடன் பேசுவது...போலிஸ்  குடிமக்களை ஸ்டேஷனில்  வைத்து பிராண்டுவது....சாரி..குடிமக்கள் போலீசைப் பிராண்டுவது....என்று படத்திற்கு எதிர்பார்ப்பும் திகில் நிறைந்த காமெடிக் காட்சிகளாக  நகர்கிறது.......

freeonlinephotoeditor
 
இன்னொரு கதையாக ODBC பேங்கில் வேலை செய்யும் பாலா, தன் காதலி (சுவாதி ரெட்டி)யின் சம்மதத்திற்காக ஏங்கி...தனது கூட்டாளிகளுடன் நிறையப் பீர் அடித்துப் பைக் ஒட்டி ஒரு பெண்ணை மோதி உயிருக்கு ஆபத்தாக ஆஸ்பத்திரியில் சேர்க்க.....DRUNK & DRIVE கேசிலிருந்து தப்பிக்க அந்தப் பெண்ணின் அபூர்வ குருப் ரத்தம் அபூர்வமாகக் குமாரிடம் மட்டுமே இருப்பதாக அறிந்து அவரை தேடி அலைய......... அண்ணாச்சியிடம் அடிவாங்கிய குமாரோ அரைப்பாட்டில் பிராந்திக்காகக் கடை கடையாக அலைந்தும் கிடைக்காமல் காதலியை நினைத்து சாவு வீட்டில் பிராந்திக்காக PREYAR சாங் பாட.....

http://i1.ytimg.com/vi/UTMRcfOC0RI/hqdefault.jpg
 

இன்னொரு கதையாக..........அண்ணாச்சி டாஸ்மாக் பாரில் கொலைசெய்யப்பட்ட சிங்கத்தின் தம்பி சிறுத்தை (பரோட்டா சூரி) கொலைகாரர்களைப் பழிவாங்க  துடிக்கும் நமுத்த காமெடியாக ....கடைசியில் அவரும் அவரது அண்ணன் மனைவி பேபிக்கு வெள்ளை ரோஜாப்பூ கொடுத்து.......இருவரும் தப்பி ஓட நினைக்க



 

ஆக........பீர் பாலா.........பிராந்தி குமாரின் இரத்தத்தை  வாங்கி அந்தப் பெண் உயிரைக் காத்து...கொலை குற்றத்திலிருந்து தப்பித்தாரா...? 
சுமார் மூஞ்சி குமாரு குமுதா மேல் கொண்ட தன் காதலில் வென்றாரா....?  அப்புறம் கள்ளக்காதலி பேபிக்காகக் கொலை செய்த ராஜும் கூட்டாளியும் போலீசில் மாட்டினார்களா...? என்ற மாபெரும் கேள்விகளுக்கு விடை வேண்டுமா...? வெள்ளித்திரையில் காணுங்கள்...ஹா...ஹா...(இன்னும் கதை இருக்கு..அய்யோ என்னது...? போதுமா..? அப்படினா சரி...)

vijaysethupathy

 
(தாதா) டாஸ்மாக் அண்ணாச்சியாக நடித்துள்ள பசுபதி, குமாரின் அப்பாவாக நடித்துள்ள லிவிங்ஸ்டன்,ODBC வங்கி பூச்சாண்டி மானேஜராக மலையாளம் பேசும்   எம்.எஸ்.பாஸ்கர்,சிறுத்தையாகச்  சீரும் பரோட்டா சூரி,குமுதாவின் அப்பாவாக நடித்துள்ள பட்டிமன்றம் ராஜா,கோமாளி கொலைகாரனாக நடித்துள்ள நான் கடவுள் ராஜேந்திரன்....இப்படி ஒரு கூட்டமே படத்தில் சிறப்பாக நடித்து.........சிரிக்க வைக்கிறார்கள் 

freeonlinephotoeditor  
ஆனாலும் என்னவோ விஜய் சேதுபதி வரும் காட்சிகள் மட்டுமே நமக்கு எதிர்பார்ப்பை எகிற செய்கின்றன...அவர் நடிக்கவில்லை  அப்படியே  கதாப்பாத்திரமாக மாறிவிடுகிறார்......இப்படத்தில் அப்படியே நாம் தினம் காணும் டாஸ்மாக் நாற்ற மனிதர்களில்   ஒருவராக........

கதையே இல்லாமல் படமெடுத்து......சிரிப்பால் நம்மைத் திண்டாட வைத்த  இயக்குனர் கோகுல் பாராட்டுக்குரியவர்.(ஒருவேளை..இப்படத்தின் மூலம் குடித்து விட்டு வாகனம் ஒட்டாதீர்கள் என்று விழிப்புணர்வு செய்கின்றாரோ)

freeonlinephotoeditor

 
சித்தார்த் விபின் இசையில் படத்தின் பிரேயர் சாங் நன்றாக உள்ளது..மற்றபடி எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதால் பின்னணி இசைக்கு வாய்ப்பு அதிகம் இல்லை
 மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவு இப்பாடலில் சிறப்பாக உள்ளது.



http://chennaionline.com/images/articles/August2013/bfcb4068-cb7f-417f-aa48-541cc4464c87OtherImage.jpg

 
படத்தில் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன அவைகளில் சில...
பசுபதி அண்ணாச்சியிடம் குமுதா இஸ் வெரி ஹேப்பி என்று சொல்லி...விஜய் சேதுபதி தன் மொபைலில் குமுதாவின் படம் இருப்பதாக சொல்வதும் பசுபதி...மேற்படி படம் என்று பவ்வியமாகப் பார்க்கும் காட்சி...

கார்த்திகை  அன்று விஜய் சேதுபதி விளக்கு ஏற்றுவதாகத் தன் வேஷ்டியில் தீ வைத்துக்கொண்டு...வாழை இலையில் படுத்துக்கிடப்பது...
பேபி சொன்னதற்காக ராஜேந்திரனின் அட்டகாசமான பாட்டும் ஆட்டமும்

                                thanks-YouTube-by thinkmusicindia

இப்படிச் சிரிக்க நிறையக் காட்சிகள் இருக்க.......நல்ல பொழுதுபோகும் 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.........சிரிப்பதற்கு ஆசைப்பட்டால் போய் பாருங்கள்........படமோ முழுக்க முழுக்க (டாஸ்மாக்) நாற்றமெடுக்கும் (டாஸ்மாக்) மனிதர்கள் பற்றிய  "பக்கி" காமெடி.

இயக்குனரிடம் ஒரு கேள்வி..............





இந்தப் படங்களும் காட்சிகளும்  எதுவும்   உங்கள் படத்தில் இல்லையே......அதெல்லாம் பார்ட் 2-ல வருதா....? (போஸ்டர்களை காட்டி போதை ஏற்றி....பிழைக்கத் தெரிந்த டைரடக்க...ரு அய்யா நல்லாவே வருவீக...வந்திட்டீக....)




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1