google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாய் (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Sunday, October 27, 2013

பாய் (தெலுங்கு)-சினிமா விமர்சனம்




மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும் பெரிய நட்சத்திர நடிகர்கள் படங்கள் இப்போது மண்ணைக் கவ்வுவது தமிழில் மட்டுமல்ல.... பாலிவுட்டிலும் டோலிவுட்டிலும் 

freeonlinephotoeditor

அந்த வகையில் மிகப் பெரிய தோல்வியை தழுவியப் படம் டோலிவுட் கிங் என்று போற்றப்படும் நாகார்ஜுனாவின் பாய் திரைப்படம் 
வெகுஜன பொழுதுபோக்கு படம் என்று வந்த நாகார்ஜுனா-ரிச்சா இணைந்து நடித்த பாய் படம் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் சுருண்டுகொண்டது.   

freeonlinephotoeditor

கதை............ஹாங்காங் டான் டேவிட் (ஆஷிஷ் வித்யார்த்தி) தனது மகன்கள் ஜேம்ஸ் (சோனு சூட்) மற்றும் டோனி (அஜய்) இருவரையும்விட அதிக நம்பிக்கை வைத்துள்ள தனது கையாள் பாய் (நாகார்ஜுனா)-யை  ஹைதெராபாத்-தில் தனது மாபியா நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ள ஒர் ரகசிய போலிஸ் அதிகாரி அர்ஜுன் (பிரசன்னா) என்பவரை வேட்டையாட அனுப்புகிறார் 

freeonlinephotoeditor

ஹைதெராபாத் வந்த இடத்தில் பாய்-க்கு அந்த போலிஸ் அதிகாரி தனது தம்பி என்று தெரிய வருகிறது அதே நேரம் டான் டேவிட் மகன்கள் இருவரும் பாய்-க்கு எதிராக செயல் படுகின்றனர் அவ்வப்போது ரிச்சாவுடன் காதலும் கும்மாளமும் போட்டுக்கொண்டு இவர்களிடமிருந்தும் டான் டேவிட்டிடமிருந்தும்  பாய் தனது தம்பியையும் தனது குடும்பத்தையும்  காப்பாற்றினாரா....? என்பதே கதை 

freeonlinephotoeditor

நாகர்ஜுனா தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பாலும் துள்ளல் நடிப்பாலும் என்றும் இளமையாக தோன்றினாலும் நம்ம தலைவா....நய்யாண்டி போன்று வழுக்கல் திரைக்கதையால்  தரையில் சறுக்கி விழுந்து பூட்டான் கேஷ் கதாநாயகர் வரிசையில் சேர்ந்துவிட்டார் 

அய்யோ...பாவம்...நல்ல திரைக்கதை இல்லாத படங்களில் நடிக்கும் நடிகர்கள் கதை இதுதான் என்று எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகிவிட்டார் 

freeonlinephotoeditor

நகைச்சுவையும் குடும்ப சென்டிமென்ட்டும் பிரதானமாக உள்ள பாய் படம் முதல் பாதி சொரி சிரிப்பாலும் அவ்வப்போது அலர்சி செய்யும் பாடல்களாலும் அழுதுவடிய......

                               thanks-YouTube-by MAATVMAATV

இரண்டாம் பாதி........அப்பா-மகன் சென்டிமென்ட் என்றும் தம்பி-தங்கை சென்டிமென்ட் என்றும் ஓவர்-டோஸ் வைத்தியம் படம் பார்ப்பவரை பைத்தியமாக்கிறது 

freeonlinephotoeditor

நாகார்ஜுனாவின் சிறப்பான நடிப்பும் அழகான ஒளிப்பதிவும் கண்கவர் காட்சியிடங்களும் படத்தில் இருந்தும் குழப்பமான திரைக்கதையால் பாய் படம் பாவம்...பாய் விரித்து படுத்து தூங்குகிறது 
 
31-10-2013 அன்று
நமது சிறப்பு வெளியீடு...........











ஆரம்பம்-சினிமா விமர்சனம் 
(பரிதியின் பார்வையில் )


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1