google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மூடர் கூடம்-(விமர்சகர்கள்) விமர்சனம்

Saturday, September 14, 2013

மூடர் கூடம்-(விமர்சகர்கள்) விமர்சனம்


(குறிப்பு-இது மூடர் கூடம் படம் பற்றிய பல்வேறு வலைத்தளங்கள் ட்வீட்டர்கள்,...இவர்களின் வித்தியாசமான விமர்சனங்களும் என் பார்வையும் .....)

வழக்கமான தமிழ் படங்களில் வரும் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், ஒரு வில்லன், ஒரு காதல் கதை, சில டூயட் பாடல்கள் போன்ற அதிமுக்கியமானவைகள் எதுவும் இல்லாமல் இயக்குனர் நவீன் ஒரு தெளிவான பார்வையுடன் மனதில் என்ன நினைத்தாரோ அதை படத்தின் இறுதிவரை கொண்டுவந்திருக்கிறார்....என்கிறார் சாய் ஷியாம் (iflickz)
freeonlinephotoeditor

(அது சரி...ஷியாம் சார்...நீங்களே 2.5/5 ரேட்டிங் கொடுத்து இப்படி சொன்னால் எப்படி...? இங்கே இப்படி சினிமாவில் புதுமையான ஆராச்சி செய்தவர்கள் முன்னோடி உலகநாயகர்தான்...அவரே தாக்குப்பிடிக்காமல் திண்டாடிவிட்டாரே...ஆனாலும் இயக்குனர் நவீனின் துணிவு பாராட்டப்பட  வேண்டியதுதான்)

freeonlinephotoeditor

நகைச்சுவையும் நையாண்டியும் மூடர் கூடம் படத்தின் கதாப்பாத்திரங்களின் உதவியுடன் ஒன்றோடு ஓன்று பின்னிப் பிணைந்துள்ளது. படத்தின் எதிர்மறையாக சொல்வதென்றால் அளவுக்கு அதிகமான கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு படத்தின் கதையோடு இணைக்கப்பட்டுள்ளது ஆகும்...என்கிறார் எஸ்.சரஸ்வதி (.rediff.com)

freeonlinephotoeditor
(மூடர் கூடம் படம்-ஒரு களிப்பு மிக்கது என்று பாராட்டும்
விமர்சகரி சரஸ்வதியோ 3/5 ரேட்டிங் கொடுத்து...அவர்கள் சொல்வதுபோல் படத்திற்கு மூடர் கூட்டம் என்று பெயர் வைக்கும் அளவுக்கு கூட்டம் கூட்டமாக நடிகர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் படம் பார்ப்பவர்களைவிட அதிக கூட்டம் படத்தில் நடித்துள்ளவர்கள்...?)

freeonlinephotoeditor

படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் அறிமுகப்படுத்தப்படுவதும் அவர்களது முன்கதை நல்ல நகைப்பு ஊட்டுவதாகவும் பாராட்டும் oneindia.in-ன் பயனர் விமர்சிகர் ராதாவின் மதிப்ப்ட்டில் "நவீன் நல்ல இயக்குனர் ஆனால் படத்தில் வரும் மற்ற நடிகர்களோடு ஒப்பிடும் போது சிறந்த நடிகராக தெரியவில்லை" என்கிறார் 

freeonlinephotoeditor
(ஆம்மாம்...படத்தில் வரும் நாய்கூட எல்லோரையும் விட அருமையாக நடித்திருந்தது...அது இன்னும் மனதில் நிற்கிறது..அதன் அறிமுகம் திரில் ஊட்டுவதாகவும்..அப்புறம் நகைப்பூட்டுவதாகவும் நம்ம காமெடி நடிகர்களைவிட நன்றாகவே நடித்திருந்தது... )

freeonlinephotoeditor

ரேட்டிங் 3/5 கொடுத்து...மொத்தத்தில் குதுகலிக்கும் பயணம்...டிரண்ட்செட்டர் படம் என்றெல்லாம் பாராட்டும் மெட்ரோமஸ்தி(metromasti)....இன்றைய கோலிவுட்டில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் காமெடி படம் தயாரிப்பது எளிதான வேலையல்ல...ஆனால் மூடர் கூடம் படம் அதை எளிதாக செய்துள்ளது என்றும் பாராட்டுகிறது 

freeonlinephotoeditor
(ஆனால்...இன்றைய மேல்தட்டு வர்க்கம் எந்த நேரத்தில் பதுக்கிய பணம் மதிப்பில்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலும் நடுத்தர வர்க்கம் நாளும் ஏறும் விலைவாசியில் விழி பிதுங்கி....அதற்கும் கீழ் மட்டமோ எதையும் பற்றியும் கவலையில்லாமல்...டாஸ்மாக் குடிமக்களாகவும் 1 ரூபாய் இட்லி சுகவாசிகளாகவும் உள்ள தமிழ் பார்வையாளர்கள் எல்லோரும் வருத்தப்படாமல் யாரும் கொஞ்ச நேரம் சிரிக்க வைத்தாலே புண்ணியம்தான்....)


moodarkoodam

சூது கவ்வும்,நேரம்,பிட்சா படவரிசையில் மூடர் கூடமும் ஓன்று என்று பாராட்டுகிறது IBTIMES அதேநேரம் மூத்தப் பத்திரிகையாளர் ஸ்ரீதர் பிள்ளையோ படத்தில் வரும் நாய்க்கு கூட பாட்டுடன் முன்கதை சொல்வதும்  U சர்டிபிகேட்-க்காக பல இடங்களில் வசனம் பீப் ஒலி கேட்பதும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது....ஆனாலும் OK, wish it was crisper &racy...என்று முடிக்கிறார்.

freeonlinephotoeditor

கிட்டத்தட்ட இதே பார்வையில்தான் நமது தமிழ் சினிமா விமர்சகர்களின் பார்வையும் உள்ளது... 
மொத்தத்தில் ‘மூடர்கூடம்’ படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாக்கி தன்னிலை மறக்கச் செய்யும்… தமிழ் சினிமாவின் தரத்தை மறந்து பார்த்தால் இதுபோன்ற படங்களையும் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதுதான் வேதனையான உண்மை..!....என்கிறார் ஆந்தைரிப்போர்டார் கோடாங்கி 
சிங்கம் புலி@SingamPulii 
மூடர்கூடம் - இந்திய பார்லிமென்ட் .
தமிழ் திரு@krpthiru 
மூடர் கூடம் : Satire வகை படம்தான். பரவாயில்லை. இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்... எதோ மிஸ்ஸிங்.
RajanLeaks@RajanLeaks 
மூடர் கூடம் # சில பல வருடங்கள் முன்னர் செல்வா நடித்து வெளிவந்த கோல்மால் படத்தின் கல்ட் வெர்சன். வவசா வகையறா குப்பைகளுக்கு இது சூப்பர்.
Dr.மொளகா @IamYaksha 
மூடர்கூடம் மாதிரியான படம் பார்க்க வித்தியசமானா மனநிலை தேவை ...பட் எனக்கு பிடுச்சுச்சு ;)


                             thanks-YouTube-by thinkmusicindia
 இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போக.........
என் பார்வையில்.........
A-கிளாஸ் பார்வையாளர்களுக்கு.....சூப்பர் 
B-கிளாஸ் பார்வையாளர்களுக்கு ....பரவாயில்லை 
C-கிளாஸ் பார்வையாளர்களுக்கு.....மொக்கை 
அண்ணேன்...நீங்க எந்த கிளாஸ் என்பதை நீங்கதான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்    
freeonlinephotoeditor

(யோவ்...நல்லாச் சொன்ன....யார் அறிவாளியோ அவியிங்க கண்ணுக்குத்தான் சாமி தெரிவாருனு எங்க ஊர் சாமியாடி குவார்டர் போட்டுக்கிட்டு தள்ளாடிக்கிட்டே குறிசொன்னக் காதையாட்டமாலா இருக்கு...) 
எது எப்படியோ....நண்பர்களே இப்படிப்பட்ட சினிமாக்கள் தமிழில் வருவது......படம் எடுத்தவர்களுக்கு.... இயக்கியவர்களுக்கு.... நடித்தவர்களுக்கு... நல்லதோ இல்லையோ தமிழ் நாட்டுக்கு நல்லது...தமிழ் சமுதாயத்திற்கு நல்லது. 

(அம்புட்டுபேரும்....ஊதிக்கிட்டும் ஊத்திக்கிட்டும் அலைவாயிங்க...பாலியல் வன்கொடுமை இருக்காது..)  

*************************************************************

இங்கே.........................
 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1