google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 6 (மெழுகு வர்த்திகள்)-சினிமா விமர்சனம்

Friday, September 20, 2013

6 (மெழுகு வர்த்திகள்)-சினிமா விமர்சனம்

(தீர்ப்பு-இது   சமுக அவலத்தைக் கொண்ட  கதைக்களத்துடன் யதார்த்தமான அதேநேரம் வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட உணர்வுச் சித்திரம்......தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு  மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்)


 
படத்தின் கதை-இன்றைய சமுகத்தின் அவலமாக இருக்கும் பிச்சை எடுக்க குழந்தைகளை கடத்தும் மிகப்பெரிய கடத்தல் கும்பலிடம் 6 வயது மகனை தொலைத்து விட்ட ஒரு தந்தை தன் மகனை தேடி....6 மாதங்கள் பல இடங்களில் தனி ஆளாக அலைந்து திரிந்து...பல சங்கடங்களை சந்தித்து தன் மகனை கண்டுபிடிக்கும் கதை  

span style="color: white;">freeonlinephotoeditor

ரம்மியமான ஒரு பாடலுடன்..படம் ஆரம்பமாகிறது..பாடலின் வரிகளே  தந்தை தன் மகன் மீது வைத்துள்ள பாசத்தை காட்சிகளாக சொல்கிறது... தங்கள் மகனின் 6 வது பிறந்த நாளுக்கு மெரினாவுக்கு சந்தோசமாக வந்த சாப்ட்வேர் இளம் தம்பதியினர் (ஷாம்-பூனம் கௌர்) கடற்கரையில்  தங்கள் மகன் கௌதமை தொலைத்துவிட....

freeonlinephotoeditor

காவல் துறையின் உதவி...? யுடனும் என்பதைவிட நயினார் என்ற பிச்சைக்காரன் உதவியுடனும் தன் மகனை  இந்தியா முழுவதும் நெட்வொர்க் உள்ள  ஒரு குழந்தைகள் கடத்தும்  கும்பல் என்பதை அறிந்து ராம் (ஷாம்) ஆந்திராவில் உள்ள நகரி..வாரங்கல் ..போபால்...மும்பை...அகமதாபாத் போன்ற இடங்களுக்கு தேடிச் செல்கிறார்.அவருடன் உதவிக்கு டாக்சி ஓட்டுனர் ரங்கன் என்பவரும் வருகிறார்.


http://kollytalk.com/posters/wp-content/uploads/2013/08/6-Movie-Pre-Release-Poster.jpg


இந்தத் தேடுதல் பயணம்தான் அதிரடி காட்சிகளாகச் சொல்லி இயக்குனர் படத்தோடு நம்மையும் ஒன்றவைத்து அடுத்து என்ன...? என்ற எதிர்பார்ப்பையும் திகிலையும் நம்முள் ஏற்படுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் ஒவ்வொரு கும்பலையும் ராம் சந்திக்கும் போது ஒரு அதிரடி திருப்பம்  படத்தில் வைத்துள்ளார் அதை இங்கே சொன்னால் படம் பார்க்கும் த்திரில் உங்களுக்கு இல்லாமல் போகும் 


6



ராம் ஆந்திராவில் கிருஷ்ணாராவை தேடிப் போகுமிடம் மேற்படி கிளுகிளுப்பு ஊட்டும் இடமாகும் அங்கே வரும் தெலுங்கு பாடல் நல்ல பொருத்தம்

அதேநேரம் கல்குவாரி ரெட்டிகாருடன் கோயில் குளத்தில் சண்டைபோடுமிடம் வாரங்கலில் மாட்டு இறைச்சி வெட்டுமிடத்தில் இந்த கும்பலில் ஒரு பெரிய தாதாவை  கடப்பாரையில் சொருகுவது.... 

மும்பையில் 50 லட்சம் கேட்கும்  திவாகர் என்ற அரவாணி கடத்தல் கும்பல் தலைவனை சந்திக்குமிடத்தில் இன்னொரு சிறுமியை காப்பாற்றும்  இடம் நெஞ்சை நெகிழவைக்கும் 

அகமதாபாத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை தேடி ராம் வரும் போது அங்கே அவன் மகன் போன்று நிறையக் குழந்தைகள் இருப்பதைக் கண்டு பொங்கி எழும் காட்சியும் அந்தக் குழந்தைகள் பல மொழிகளில் அவரிடம் காப்பாற்ற கெஞ்சும் இடமும் நம் நெஞ்சை விட்டு அகலாது 


நடிகர் ஷாம் சொன்னது போல் அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு நடிகனை வெளிக்கொண்டு வந்த படம்.........நிச்சயமாக மாபெரும் நடிகர் தன் மகன் மேல் பாசத்தில் அவனைத் தேடி அலையும் அவர் உண்ணாமல் உறங்காமல் உள்ள உருவத்தை அப்படியே தன் இயல்பிலும் நடிப்பிலும் காட்சிப்படுத்தியுள்ளார் 


ராமின் மனைவியாக வரும் பூனம் கௌவுரும் பிச்சைகாரன் நயினார் காலில் விழும் போது நடிப்பால் நம் மனத்தைக் கவருகிறார்..
படத்தின் இசை ஸ்ரீகாந்த் தேவா.பாடல்கள் இரண்டும் அருமையாக உள்ளது இயக்குனர் துரை கைதேர்ந்த கவிஞ்சராக வார்த்தைகளால் பாடியே கதை சொல்கிறார் கதை வசனம் ஜெயமோகன் யதார்த்தமான வார்த்தைகளால் காட்சிக்கு ஏற்றவாறு எழுதிஉள்ளார்........படத்தின் சிறப்புக்கு இவரது பங்கும் அதிகம் 

கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு..அப்படியே காட்சிகளை ஓவியங்களாக வரைந்து காட்டியுள்ளது....கதையின் காட்சிகளுக்கு ஏற்ப படத்தின் வண்ணம் மாறுவது அவரது தனித்திறமை 
இந்தப் படத்தின் சிறப்புக்கு காரணம் நடிப்பா? இயக்கமா? வசனமா? என்று கேட்டால் மூன்றும் சேர்ந்து முக்கனியாக இனிக்கிறது 


                              thanks-YouTube-bysaregamasouth saregamasouth


தங்கமீன்கள் திரையில் ஒர்  ஓவியம் என்றால் 6 மெழுகுவர்த்திகள் திரையில் ஒரு காவியம்.....ஹிட்ச்காக் நாவல் படித்த நிறைவு என்பதைவிட இது   சமுக அவலத்தைக் கொண்ட  கதைக்களத்துடன் யதார்த்தமான அதேநேரம் வித்தியாசமான முறையில் சொல்லப்பட்ட உணர்வுச் சித்திரம்......தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு  மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்


படம்..........விறுவிறுப்பு....எதிர்பார்ப்பு...பெற்றோர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்க்கலாம்.... பார்க்கவேண்டும் 

                                                                    ..................பரிதி.முத்துராசன் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1