google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மரியான்-சினிமா விமர்சனம்

Friday, July 19, 2013

மரியான்-சினிமா விமர்சனம்

freeonlinephotoeditor  
தீர்ப்பு-உலகத்தரமான ஒளிப்பதிவு...இனிமையான திரையிசைப் பாடல்கள்...தனுஷின் யதார்த்தமான நடிப்பு இவைகளுக்காக படம் பார்க்கலாம் 
ன்புள்ள இயக்குனர் பரத்பாலாவுக்கு! காதலையும் அதிரடித் திகிலையும் கலந்து எப்படி உம்மால் இப்படியொரு படம் எடுக்க முடிந்தது..? தமிழ் திரைப்படத்தை உலகத்தரத்திற்கு அழைத்துச் செல்லும் உமது தீவீர முயற்சிக்கு வாழ்த்துக்கள்

படம் ஆரம்பமே அடிதடி காட்சி அல்லது குத்துப்பாட்டு என்று இருக்கும் என்று நினைத்தால்....யதார்த்தமான காட்சிகளால் படம் நகர்ந்து படம் பார்ப்பவர்களை இதுவரை தமிழ் திரையில் கண்டிராத இன்னொரு திகில் உலகத்திற்குள் இட்டுச் சென்று  நெஞ்சை உறையவைக்கிறது. காதலின் வலிமை இங்கே காட்சிபடுத்தப்பட்டுள்ளது.




mariyaan




மரியான் (தனுஷ்) பனிமலர் (பார்வதி மேனன்) காதல் நிறைவேற குறுக்கே நிற்கும் பணத்துக்காக வெளிநாட்டுக்கு வேலைசெய்ய செல்லும் மரியான் வீடு திரும்பு நேரத்தில் அங்கே உள்ள சைகோ புரட்சிக்காரர்களால் பிணைய க் கைதியாக பிடிபட்டு.....சித்திரவதை அனுபவிக்கும் மரியான் தப்பித்தானா...? அவர்கள் காதல் நிறைவேறியதா...? என்பதே கதை.

தனுஷ்-இந்தப்படத்தில் நடிப்பின் உச்சத்தை தொடுகிறார்.மீனவராக ஆழ்கடலுக்குள் கையில் ஈட்டியுடன் அவர் பாய்ந்து செல்வது,பார்வதிமேனனுடன் காதலில் கொஞ்சுவது,புரட்சிக்காரர்களிடம் சித்திரவதைப் படுவது,ஆப்ரிக்க வில்லனிடம் சண்டையிடுவது...பாலைவனத்தில் சிறுத்தைகளுடன்  மரத்தை சுற்றி விளையாடுவது...இப்படி நடிப்பின் பல்வேறு பரிணாமங்களைக்  தன் முகத்தில் காட்டுகிறார் இன்னொரு தேசிய விருது உறுதி.

freeonlinephotoeditor

பார்வதிமேனன்-பணிமலர் என்ற மீனவ இளம் பெண்ணாக நடித்துள்ளார் என்பதைவிட கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.....பாடல் காட்சிகளில் இளம் தேவதையாக மின்னுகிறார்..அதிலும் நெஞ்சே...பாடலில் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.அநியாயத்துக்கு தனுஷ்-தாடி வட்டி வில்லன்-மாமியார்  இப்படி எல்லோரிடமும் அடிவாங்குகிறார்...பாவமாக இல்லையா பரத் பாலா சார்..? அப்புறம் ரொம்ப கரிபூசிய மூஞ்சியோடையே படமுழுக்க அலையுது அம்மணி...ஆனாலும் அழகாத்தான் இருக்கு...ஆங்  

இலங்கை கடற்படையால் இறந்து போகும் மீனவர் சக்கரையாகயாக நடித்துள்ள அப்புக்குட்டி நன்றாகவே நடித்துள்ளார்...சாமியாக நடித்துள்ள ஜெகன் தனுஷுடன் கடத்தப்பட்ட பினயவாதிகளில் ஒருவராக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளார்  அவர்கள் மரியானின் காதலுக்கும் சாகசத்திற்கும் கதையில்வரும் கதாப்பாத்திரங்கள்

freeonlinephotoeditor

இயக்குனர் பரத்பாலா காட்சிகளால் படம் நகர்த்துகிறார்...காதலுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.திகிலூட்டும் காட்சிகளால் காதல் காட்சிகளில் வரும் விரசம் மறைக்கப்படுகிறது.. மறக்கப்படுகிறது. ஆனாலும் சர்ச்சில் செருப்பு வருடும் காட்சி..பார்வதி மேனன் லாலிபாப் சப்பும் காட்சி..தனுஷ்க்கு உதட்டு முத்தம் காட்சிகள் தவிர்த்திருக்கலாம்  பாடல்களை துண்டு துண்டாக கூறுபோட்டு காட்டினாலும் காட்சிகளோடும் கதையோடும் பொருத்தமாக உள்ளது.

freeonlinephotoeditor

புரட்சிக்காரர்கள் மரியானை எண்ணெய் கம்பெனியிடம் பணத்துக்கு போன்செய்யச் சொல்லும் போது மரியான் பணிமலரிடம் போன் செய்து நிலைமையை விளக்குவது நெஞ்சைத்தொடும் காட்சி...வசனங்கள் மனதில் எளிதில் ஒட்டிக்கொள்கின்றன....அந்த ஆப்ரிக்க புரட்சி வில்லன்கள் நல்லத்தேர்வு...எங்கிருந்துங்க பிடிச்சீங்க இவிங்கள...?

freeonlinephotoeditor

ஒளிப்பதிவு-உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மார்க் கொநின்க்கக்ஸ்(Marc Koninckx)...படம் முழுவதும் அவரது கேமரா கலைவண்ணங்கள்...அந்தமானில் எடுக்கப்பட்ட ஆழ்கடல் தனுஷ் காட்சிகள் மற்றும் நம்பியா பாலைவனக் கடல் பகுதி காட்சிகள்...பாளம்பாளமாக வெடிப்பு நிலம் காட்சிகள்...வெள்ளை மணல் பரப்பில் நெஞ்சே எழு...பாடல் காட்சி...இப்படி நிறைய சொல்லலாம் 

freeonlinephotoeditor

இசையும் படத்திற்கு சிறப்பூட்டுகிறது...ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் கதை சொல்கின்றன பின்னணி இசை திகிலூட்டுகின்றன
பாடல் வரிகளில் வரும் வார்த்தைகள் அத்தனையும் பார்வையாளர்களால் படத்தில் வரும் பாடலோடு அரங்கில் முனுமுனுக்கப்படுகிறது அர்த்தமுள்ள வார்த்தைகள் இனிமையான இசையோடு உயிரோடு உலவுகின்றன...

mariyaan


சிலநேரங்களில் காதல் காட்சிகள் நம்மை நெளிய வைக்கிறது...நிறைய நேரங்களில் திகில் காட்சிகள் நம்மை நெகிழவைக்கிறது.. நிறையக் காதல் கொஞ்சம் திகில்...மங்கையரின் கண்ணசைவில் மாமலையும் கடுகானக் கதை..இல்ல ....மாகடலும் வரண்டுபோனக்  கதை...ஆனால் கொஞ்சம் பரத்பாலா பராக்கப் பார்த்திருந்தா....படம் அவலக்கொடி ஆகியிருக்கும்   

                          thanks-YouTube-by IndiaGlitz Tamil Movies
மேற்போக்காகப் பார்த்தால் ஒரு சாதாரணமான காதல் படம்...திகிலூட்டும் காட்சிகளாலும் தனுஷின் மிகைப்படாத யதார்த்தமான நடிப்பால் மிகச் சிறந்த படம்     

தீர்ப்பு-உலகத்தரமான ஒளிப்பதிவு...இனிமையான திரையிசைப் பாடல்கள்...தனுஷின் யதார்த்தமான நடிப்பு இவைகளுக்காக படம் பார்க்கலாம்  

கவர்(ச்சிப்)படம்-பார்வதி மேனன்.....? 

mariyaan



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1