google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-1

Thursday, July 18, 2013

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-1


உண்மையான ஹைக்கூ கவிதைகள்-9 (பாஷோ )
இங்கே மட்சுவோ பாஷோவின் ஜப்பனீஸ் ஹைக்கூ கவிதைகளின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளைத் தமிழில் எனது கவிதை நடையில் மொழியாக்கம் படைத்திருக்கிறேன்... 

இங்கே இலக்கணம் இருக்காது கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து....அதே நேரம் தமிழில் நிறையக் கவிஞர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள் அவைகளிலிருந்து இவை நிச்சயம் மாறுபடும்....   

மட்சுவோ பாஷோ கவிதைகள் தீவிர கலைப்படைப்புகள் மட்டுமின்றிச் சமுக அக்கறை கொண்டவைகளாகவும் இருந்தன.....

freeonlinephotoeditor

நீங்கள் தீ மூட்டுங்கள் 
உங்களுக்கு ஒர் அற்புதம் காட்டுகிறேன் 
மிகப்பெரிய பனிப்பந்து......என்று சோகத்தில் சோம்பிக்கிடப்போரை உசுப்பேற்றி வெற்றியுடன் விளையாட அழைக்கிறார்..தூங்காதே தம்பி தூங்காதே என்று பட்டுக்கோட்டையார் பாடியது போல்...  

http://images7.alphacoders.com/415/thumbbig-415144.jpg

 ஒரு தேனீ 
தள்ளாடி விழுகிறது 
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து......என்று மது உண்பவர்களை நையாண்டி செய்கிறாரா...? அல்லது மன்மத லீலையை வென்றார் உண்டோ...? என்று ஒருத்தியிடம் வாழ்ந்துவிட்டு இன்னொருத்தியை நாடுவோரை எள்ளி நகைக்கிறாரா...?. 

https://si0.twimg.com/profile_images/2323535956/mariposa.jpg
 
ஒரு கம்பளிப்பூச்சி, 
இந்த இலையுதிர் கால வீழ்ச்சியிலும்
இன்னும் ஒரு
பட்டாம்பூச்சியாக மாறவில்லை...என்று நல்ல வாய்ப்புகள் வந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் இன்னும் முகாரி பாடுவோரை இகழ்கிறார்.


ஒரு சிள்வண்டு 
தன்னைப் பற்றியே பாடியது  .
முற்றிலும் மாறுபட்டு....என்று இங்கே சுயபுராணம் பேசுபவர்களைக் கரையும்வண்டுகளோடு ஒப்பிட்டு நகைக்கிறார். 



தொடங்கியது ஒரு குளிர் மழை
தொப்பி எதுவும் இல்லை -
அதனால்
என்ன...?.......என்று ஆழமான வாழ்வியல் தத்துவத்தை எளிமையான வார்த்தைகளில்.....துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்ற கதையாகச் சொல்லுகிறார்.


அந்தத் துறவிமடத்தில் 
குளிர்முடிந்த இரவு விருந்துக்கு 
தயாராகக் கத்தரியும் வெள்ளரியும்......என்று இரவு நேரம் புலால் உண்பது உடல் நலத்துக்கு நன்று அல்ல என்ற ஆய்வு அறிவிக்கையை அன்றே வாசித்தவர் பாஷோ. 

freeonlinephotoeditor


மூங்கில் புதருக்குள் 
பின்னிரவு நிலவு ஒளிரும் போது
ஒரு குயில் அழுகிறது....என்று ஊரே திருவிழாக்கோலம் கொண்டிருக்கும் போது பொறாமைக் குணம் கொண்டவர் சிலர் ஓலமிடும் காட்சி

பருத்திக்காட்டில் 
நிலவுப்பூக்கள் 
மலர்ந்தது போல்......இது அவரது கலைநயத்தின் உச்சம் இரவில் பருத்திக்காட்டில் வெடித்த பஞ்சுகள் அவருக்கு எப்படித் தெரிகிறது பாருங்கள்.  

ஒரு வயோதிக கிழவன் 
மெதுவாக உண்ணுகிறான் 
முள் மீன்............என்று வயோதிகத்தின் ஆசையையும் இயலாமையையும் பலவீனத்தையும் நாசுக்காகச் சொல்கிறார். 
http://mam.at.ua/_ph/35/2/565274170.jpg

காலைத்தேநீர் அருந்தும் துறவி 
சாமந்திப்பூ மலர்வது போல்
அமைதி 
......என்று துறவிகளின் சாந்தம் பற்றி உரைக்கிறார்.அவுங்க ஊரு சாமியாருக இப்படித்தான் இருந்திருப்பாயிங்க போல...இங்கே சாமியாருனா ஆட்டம்லா போடனும்   
                 .......................................(இன்னும் வரும்)

நமது ஹைக்கூ-புதியவானம்  
பதிவில் கருத்துப் பெட்டியில் கவிதை எழுதச் சொல்லியிருந்தோம்..தளிர் பதிவு நண்பர் s.சுரேஸ் எழிதிய ஹைக்கூ................
விதைத்தாலும் 
முளைக்கவில்லை...?
குழந்தையிடம் கள்ளம்...........என்ற அருமையான ஹைக்கூ கவிதை எழுதியுள்ளார்.இதற்கு விளக்கமே தேவையில்லை அவ்வளவு எளிமையான வார்த்தைகள் ஆனால் கருத்தோ ரொம்ப ஸ்ட்ராங்...எங்க அப்பா குதிருக்குள்ள இல்லை என்ற கதைபோல ஒரு குழந்தையிடம் ஒர் உண்மையை மறைக்கச் சொல்லுங்கள் அதை அந்தக் குழந்தை அறியாமலே வெளிப்படுத்திவிடும்...தளிர் s.சுரேஸ் அவர்களை வாழ்த்துகிறேன்    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1