google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐ.பி.எல்.போட்டிகள் தடை செய்யப்படுமா?கருத்துக்கணிப்பு

Tuesday, May 21, 2013

ஐ.பி.எல்.போட்டிகள் தடை செய்யப்படுமா?கருத்துக்கணிப்பு


இன்று மட்டுமல்ல சமீப காலமாகவே கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதற்கும் மேலே சூதாட்டமாக மாறிவிட்ட நிலை நாம் அறிந்ததே இப்போதைய  ஐ.பி.எல்.போட்டிகள் அதற்கும் மேல் என்ற நிலையில்... ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த்,அங்கித் சவான்,அஜித் சண்டிலா மற்றும் தரகர்கள் என 17 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ள  நிலையில்.....
இன்னும் வரும் செய்திகள்...

*தமிழகத்தையும் விட்டுவைக்காத கிரிக்கெட் சூதாட்டத்தில் கோடி,கோடிடியாக அள்ளிய முக்கிய குற்றவாளியும் தலைவனும்மாகிய   சென்னை அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த்  சி.பி.சி.ஐ.டி  அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.

http://vyganews.com/wp-content/uploads/2013/05/spot-fixing-conversation.jpg

இந்த சூதாட்டத்தில்  அரசியல்வாதிகளுக்கும்  பங்கு உள்ளது  என்பதை அறியும்போது ஊழல் தன் விளையாட்டை இந்த விளையாட்டிலும் விட்டுவைக்கவில்லை

அதேநேரத்தில் இந்த சூதாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த போலிஸ் அதிகாரியின் மர்ம மரணம்,குட்டிகளின் காமலீலைகள்  இன்றைய கிரிக்கெட் விளையாட்டு  தாதாக்களின் விளையாட்டா...?  என்று என்ன வைக்கிறது.

freeonlinephotoeditor

சென்னையில் ஐகோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மூன்று வீரர்கள் மீதும் கிரிமினல் புகார் கொடுத்துள்ளார்.
லக்னோவைச் சேர்ந்த வக்கீல் விஷ்ணு ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் எஞ்சியுள்ள ஐ.பி.எல்.போட்டிகளையும் தடைசெய்ய வேண்டி மனு கொடுத்துள்ளார்.

கிரிக்கெட்-ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்ற நிலையிலிருந்து தவறி அறிஞர் பெர்னாட்ஷா சொன்னது போல் முட்டாள்களின் விளையாட்டு என்ற நிலைக்கு மாறிவிட்டது...அவர் ஒரு தீர்க்கத்தரிசிதான்

http://qph.is.quoracdn.net/main-qimg-4f280ab90cd0d19ec44ca606723e6929

மக்களின் பணத்தை மதுக்கடைகள் ஒருபுறம்  சினிமாக்கொட்டகைகள் இன்னொரு புறம்  போதாதென்று கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டு ஒருபுறம் புடுங்கிக்கொண்டு இருக்கும்போதும்...அட..நம்ம மக்களெல்லாம் மிகப்பெரிய செல்வச் சீமான்கள் ஆனால் பாவம் நம்ம பிரதமரோ கையில் காசு இல்லாமல் ஓட்ட மாருதிக்காரில் ...என்ன கொடுமையடா இது?

http://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2013/5/16/1368724747389/India-cricket-protests-010.jpg

ஆனால்  சாதாரண கிரிக்கெட் விளையாட்டு பணக்காரர்களும் சினிமா பிரபலங்களும் கைகளிலும்  தொலைகாட்சி ஊடகங்களின் கைகளிலும்   கொடுத்து அதை இந்த நிலைக்கு கொண்டு வரக் காரணகர்த்தா எவரோ....? என்றால் அதுவேறு யாருமல்ல..

http://www.mahamediaonline.com/images/Cricket%20is%20no%20longer%20a%20gentlemasssa.jpg

நாம்தான் நமது கிரிக்கெட் விளையாட்டு மீது உள்ள வெறி
 எனவே இதில் யாரையும் குறைசொல்வதில் நியாயமில்லை
நமக்கும் இதற்கு மேல்  எழுதுவதற்கு மனமில்லை
அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன் .........

ஐ.பி.எல்.போட்டிகளை என்ன செய்ய வேண்டும்..?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி

***************************************************************************
கிரிக்கெட் - கொஞ்சம் சிரிங்க பாஸ்.....? 

http://www.fakingnews.com/wp-content/uploads/2012/12/robot.jpg

ஏம்பா...எங்கள இந்த விளையாட்டுல சேர்த்துக்க மாட்டீங்களா....?
மேட்ச் பிக்ஸிங்லாம் எங்களுக்குத் தெரியாதப்பா..! 

***************************************************************************

------------------------------------------------------------------------------------------------------


----------------------------------------------------------------------------------------------------

http://gifs.gifbin.com/022013/1360173052_amazing_onehanded_cricket_catch__kieron_pollard.gif

-----------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1