google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இளையதளபதி விஜய்-சினிமா?வாங்க அசைபோடலாம்!

Monday, February 18, 2013

இளையதளபதி விஜய்-சினிமா?வாங்க அசைபோடலாம்!


இளையதளபதி விஜய்-
இன்றைய தமிழ் சினிமா உலகில் வயது வித்தியாசமின்றிஅனைவர் இதயங்களிலும் இடம்பிடித்து உச்சத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில்களில் இவரும் ஒருவர்.........

இவர் உருவானவர் என்பதை விட இயக்குனர் தந்தையால் (வள்ளுவர் வாக்கு படி... அவையத்து முந்தியிருக்கச் செய்தல்)உருவாக்கப்பட்ட நடிகர் ஆனால் தனது திறமையால்  நட்சத்திர நடகரானார்.

 தந்தை S.A.சந்திரசேகர்  இயக்கி-தயாரித்த நாளைய தீர்ப்பு ஆரம்பிக்கும் போது இப்படித்தான் பேசுவார் S.A.சந்திரசேகர்......


thanks-SoundCloud



























ஆரம்பத்தில் பிளேபாய் வேடங்களில் நடித்தவர் தன்னை மாற்றிக்கொண்டு அவரது இயல்புக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்தார் குழந்தைகளையும் இளம் பெண்களையும் கவரும் வண்ணம் தனது நடிப்பில் குழந்தைத்தனம் அப்பாவித்தனம் கோமாளித்தனம் அதேநேரம் நாயகர்களுக்குள்ள அதிரடித்தனம் இப்படிப் பல இலக்கணம் இருக்கும் அவர் நடிப்பில்...மற்ற நடிகர்கள் போல் ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் பல்வேறு தனித்துவமிக்க கதாபத்திரங்களைத் தேர்வு செய்து நடித்ததால் வெற்றியின் உச்சியை எளிதில் பிடித்தார் 


பாசில் இயக்கத்தில் ஷாலினியுடன் நடித்த காதலுக்கு மரியாதை விஜய் சினிமா வாழ்க்கையில் ஒரு மணிமகுடம் சூட்டிய காதல் திரைப்படம் இப்படம் எவ்வித விரசமும் ஆபாசமும் இல்லாத கதையமைப்பு மற்றும்  விஜயின் நடிப்பு பார்வையாளர்களைக் கவர்ந்ததுடன் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது அவருக்குப் பெற்றுத்தந்தது.


அவர் திரிஷாவுடனும்  மிரட்டல் நடிப்புடன் விரட்டும் வில்லன் பிரகாஷ்ராஜுடனும்   நடித்த தரணி இயக்கத்தில்   கில்லி  திரைப்படம்  அவரது படங்களில் என்றும் பேசப்படுவது.அந்தப்படத்தில் இடம்பெற்ற அப்படிப் போடு போடு....பாடலுக்கு அவரது ஆட்டத்தைக் கண்டு வியந்தவர்கள் நிறைய...ஆட்டம்னா ஆட்டம் அப்படியொரு ஆட்டம் பாட்டம் 


                                                   thanks-YouTube-amitsriv99




 அதே நேரத்தில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் ஜோதிகாவுடன் அவர் நடித்த குஷி ரொமாண்டிக் காமெடித் திரைப்படம் அவரது நடிப்பின் இன்னொரு பரினாமத்தைக்காட்டியது  தேவாவின் இசையில் பாடல்களும் எஸ்.ஜே. சூர்யாவின் வித்தியாசமான திரைக்கதையும் படத்திற்கு மெருகூட்டியது 

விஜயின் வெற்றித்திரைப்படங்கள் நாம் அசைபோட்டால் அதில் அவரும் அவரது கூட்டாளிகளும் விரசமில்லாது நடித்த நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருக்கும் அவரது பிரெண்ட்ஸ் திரைப்படம் நடிகர் சூர்யாவுடன் நகைச்சுவை நடிகர்கள் வடிவேலு,சார்லி,ரமேஷ்கண்ணா,...என்று ஒரு பட்டாளமே நடித்த இந்தப் படம் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக்கியது 


விஜய் ANTI-HERO வேடத்தில் நடித்த பிரியமானவளே அவரது நடிப்பு திறமைக்குச் சவாலான கதாபாத்திரம் ஒப்பந்த அடிப்படையில் சிம்ரனை திருமணம் செய்து கொள்ளும் பொழுதுபோக்கு குடும்பப் படம் 




பேரரசு இயக்கத்தில் அதிரடிப் படம் திருப்பாச்சியில் விஜய்  வித்தியாசமான கதாபாத்திரத்தை அதாவது கிராமம்-நகரம் சூழ்நிலை குடும்ப செண்டிமெண்ட்-அதிரடியாகச் சென்னையைக் கலக்கிய மூன்று ரவுடிகூட்டத்தை எதிர்த்தல் என்று இவைகள் இரண்டும் கலந்த அவரதுநடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது.


அவரது பூவே உனக்காக- படம் அவரை நாசுக்கான காதல் வசனங்கள்,நாகரீகமான காதல் உணர்வு வெளிப்படுத்தும் காதல் கதாநாயகனாக வெளிப்படுத்தி அவரது அதிரடிப் படங்களைப் போல் அன்று அவருக்குப் பாக்ஸ் ஆபிஸ் வெற்றித் தந்தது.



'பஞ்ச்' வசனம் பேசுவதும் அவரை விட்டுவைக்கவில்லை ஆனால் போக்கிரியில் இவரது பஞ்ச்...நா ஒரு தடவ முடிவு பன்னிட்டேன் என் பேச்ச நானே கேட்கமாட்டேன் ....அனைவராலும் ரசிக்கப்பட்டது. வடிவேலுடன் அவரது நகைச்சுவை இந்தப் படத்திலும் பாராட்டதக்கது பிரபு தேவா இயக்கத்தில் அவரது நகைச்சுவை கலந்த அதிரடி போலிஸ் நடிப்பு இவருக்கு நிலையான மிகப்பெரிய வெற்றி 



வெற்றி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வந்த நண்பன் திரைப்படம் இவரது யதார்த்தமான இயல்பான நடிப்பில் ஒளிவீசியது ஒரு மிகச் சிறந்த நகைச்சுவை கதாநாயகனாக அவரை வெளிப்படுத்தியது.


இவரது சமீபத்திய துப்பாக்கி வெற்றிப்படத்தைப் பற்றி நமது தளத்தில் நிறையக் கருத்துக்கணிப்பும் விமர்சனமும் வெளியிட்டு உள்ளோம் இதுவும் நகைச்சுவை கலந்த அதிரடி த்திரிலர் திரைப்படம் இந்திய திரை உலகில் 100 கோடிக்கு மேல் வசூல்மன்னர்கள் வரிசையில் அவரை சேர்த்தப் படம் சில வன்முறை காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் பரவலாகப் பேசப்பட்டு இருக்கும்(சொல்ல முடியாது...அந்த சர்சைகள் கூடஇப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கலாம்)

அதே நேரத்தில் இவருடைய படங்களில் சில பத்ரி,தமிழன்,மதுர,சச்சின்,வேட்டைக்காரன்,சுறா,காவலன்,....இவைகள் அவருக்கு மிகப்பெரிய சறுக்கல் தந்த படங்கள் விரசமான காதல் காட்சிகள்,நரசமான வசனங்கள்,அதிரடி என்ற பெயரில் நண்பகத்தன்மையில்லாதது,நவரசத்தை விட்டு விலகி நிற்கும் நடிப்பு,ரசிகர்கள் கூட்டத்துக்காகவே எடுக்கப்பட்ட தோற்றம்...இப்படி நிறையக் காரணிகள் இவரையும் இவரது சில படங்களையும் மண் கவ்வ ...அவ்வவ்வ...ஆக்கிவிட்டன 


இதை உணர்ந்து இனிவரும் படங்களில் காதலுக்கு மரியாதையின்   இயல்பான நடிப்பும் கில்லியின் நம்பகத்தன்மையும் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பார் எனில்....தமிழ் திரைவானில் என்றும் ஜொலிக்கும் நட்சத்திரமாக(EVER-GREEN SPARKLING STAR)  இவரே இருப்பார் 























இவரது தலைவா தலைசிறந்த படமாக வெற்றிபெற வாழ்த்துவோம்!.  
   
இது நம்ம பஞ்ச்....ச்.....பஞ்ச்....ச்...........பஞ்ச்....ச்

நா ஒரு தடவ துப்பாக்கி-ல நடிச்சதே....போதும்..போதும் 
இன்னொரு தடவ துப்பாக்கி-II-லாம் நடிக்கமாட்டேன் 

           ....................................பரிதி.முத்துராசன் 

 
thanks-SoundCloud
if u want ringtone-Appadi podu by Parithi Muthurasan *************************************************************** 
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து......? 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1