google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2012 சினிமா:காதல் ஆப்பச்சட்டியும் (நகைச்)சுவை ஆப்பங்களும்

Thursday, January 10, 2013

2012 சினிமா:காதல் ஆப்பச்சட்டியும் (நகைச்)சுவை ஆப்பங்களும்



தோசைக்கும் ஆப்பத்துக்கும் உள்ள வேற்றுமை நாம் அறிவோம்   
கடந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் காதல் ஒருபக்கம் விரசம் மறுபக்கம் என்று இருபக்கம் சுட்டுப்போட்ட தோசைகளாகக் காதல் திரைப் படங்களே அதிகம்.

அதிலும் சில காமநெய் ஊற்றி முறுவலாய் சுட்டவைகள்
ஆனால் அதிலும் சில படங்களை காதல் என்ற ஆப்பச்சட்டியில் காமெடியில் உப்பிய நகைச்சுவையான ஆப்பங்களாய் கோலிவுட் சினிமாபவன் தந்தன  

அவைகள் நாசுக்காக காதலை நகைச்சுவையுடன் கலந்து வாங்கிய காசுக்கு வஞ்சனை செய்யாமல் தந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படங்கள் 

அவைகளில் சில...... 


காதலில் சொதப்புவது எப்படி?-சின்னத்திரையில் வந்த குறும்படம் வெள்ளித்திரையில் வளர்ச்சிப் பெற்று சித்தார்த்-அமலா பால் நடிப்பில் காதல் தோல்வியைக் காதலர்களின் வாக்குமூலம் போல் சொன்னாலும்  வெற்றியில் சொதப்பாத  படம். 

 மனம் கொத்திப் பறவை-எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-ஆத்மியா நடிப்பில் வெற்றிப்படம்.பால்ய நண்பர்கள் காதலர்களாக மாறும் கதை.காட்சிகள் நம்மை சிரிப்பு மழையில் நனையவைக்கின்றன.



அட்ட கத்தி-நடிப்பு இயக்கம் இசை இன்னும் பலவற்றில் பல புதுமுகங்கள் பழைய காதல் புதுச்சுவை. பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ்-நந்திதா காதல் நடிப்பில் இதுவும் காதல் தோல்வியைச் சிரிப்பாய் சொல்லி வெற்றியை நறுக்கென்று வெட்டிய கத்தி.



பாண்டி ஒலிபெருக்கி நிலையம்-ராசு மதுரவன் இயக்கத்தில் சபரிஷ்-சுனைனா காதலர்களாக நடித்தப்படம். ரவுடிகளின் தங்கச்சியைக் காதலிக்கும் காதலன் கதை பழையது ஆயினும் குடும்பச் சென்டிமென்ட் உப்பு அதிகம் ஆனாலும் (நகைச்)சுவையும் அதிகம். 



பாகன்- அஸ்லம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்-ஜனனி ஜோடி நடித்த இப்படம் ஒரு சைக்கிள் கதைசொல்வது போல்.... காதலியை விட பணம் பெரிதாக நினைக்கும் காதலன் தவறை உணர்ந்து மீண்டும் காதல் செய்வதுபோல் கதை..படத்தில் ஒரு பழைய சைக்கிளும் அங்கம். 


என்ன நல்லா சாப்பிட்டிங்களா...?இப்போ எது நால்லாயிருந்துச்சுனு..?

                              .................பரிதி.முத்துராசன்  
************************************************************

2012-ல் சிறந்த காதல் காமெடிப்படம் எது?


ஒருவர் எத்தனை விருப்பங்கள்  வேண்டுமெனிலும்  வாக்களிக்கலாம் .முடிவு-16/01/2013
********************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து......?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1