google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2012-ல் சிறந்த அதிரடி நடிகர் யார்?கருத்துக்கணிப்பு

Thursday, January 03, 2013

2012-ல் சிறந்த அதிரடி நடிகர் யார்?கருத்துக்கணிப்பு

http://predprinimatel.ru/upload/2/.thumbs/f609f3419150c98e79a4ef262c43df59_0_500_0.jpg
2012-ல் அதிகத் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் கீழ்க்கண்டவைகள் மட்டுமே அதிரடி(ACTION) திரைப்படங்களாகக் கருதப்படுகிறது அவை வெளியிடப்பட்ட மாதவாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.


வேட்டை- லிங்குசாமியின் இயக்கத்தில் வேலையில்லா மோசடியில் ஈடுபடும் ஆர்யாவின் அதிரடி நடிப்பு தனது அண்ணன் பயந்தாங்கொள்ளி போலீஸ் மாதவனை வீரமாக்கி ரவுடிக்கும்பலை துவசம் செய்து தங்கள் குடும்பத்தைக் காக்கும் படம் 


உடும்பன்-இயக்குனர் பாலன் கைவண்ணத்தில் திலிப் ரோஜெர் நடித்த ஏழைகளுக்கு நியாமான இலவச கல்வி வழங்குவதைப் பற்றிச் சொல்கிறது.


மாசி-கிச்சாவின் இயக்கத்தில் 
அதிரடி நடிகர் அர்ஜுன் நடித்த 
போ(லி)லீஸ் கதைப்படம்

 





தடையற தாக்க- முகிழ் திருமேனியின் இயக்கத்தில் சென்னையில் ஒரு ட்ராவல் ஏஜென்சி உரிமையாளராக அருண் விஜய் நடிப்பில்... நிறையத் திருப்பங்கள் நிறைந்தப் படம் 





முரட்டுக்காளை-1980-ல் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தின் ரீமேக்.இது செல்வ பாரதி இயக்கத்தில் சுந்தர்.சி நடித்த திருப்பங்களும் விருவிருப்பான உச்சகட்ட காட்சியும் நிறைந்த திரைப்படம்.



பாளையங்கோட்டை-நடிகரும் இயக்குனரும ஜி.சேகர் ..தன் குடும்பப் பெருமையைக்காக்க போராடும் கதை.அதிக சண்டைக்காட்சிகள் நிறைந்தது அதுதான் கதையும் கூட.


தாண்டவம்-எ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த அதிரடி திரைப்படம். மாபெரும் பொருட்ச் செலவில் அதிக காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்ட படம். கதை இந்திய தேசப்பற்று உள்ளது போல் தெரியும் 



மாற்றான்-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக ஒட்டிக்கொண்டே....இடைவேளைவரை நடித்தப் படம்...பாசத்தை விட தேசபற்றே தேவை என்பதுபோல் தவறு செய்யும் தன் தந்தையையை தேசத்துக்காகப் பழிவாங்கும் படம் 




திருத்தணி-
அதிரடி இயக்குனர் 
பேரரசு இயக்கத்தில் 
பரத் லோக்கல் ரவுடிகளைப் 
பந்தாடும் அதிரடித் திரைப்படம்   

 

துப்பாக்கி-முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த தேசப்பற்று உள்ள ராணுவவீரனின் சமுதாயம் மற்றும் நாட்டுத்தொண்டு பற்றிய அதிரடித் திரைப்படம் 


சட்டம் ஒரு இருட்டறை-இதுவும் ரீ-மேக் படமே .இயக்கம்-சினேகா பிரிட்டோ நடிப்பு-தமன் குமார் 



பாரசீக மன்னன்-ஜெ.சுரேஷ் 
இயக்கி நடித்த அதிரடித் திரைப்படம் 
இது குழந்தைகள் பாதுகாப்பு 
பற்றிய திரைப்படம்        
  

*******************************************************************************
கருத்துக்கணிப்பு-

2012-ல் சிறந்த அதிரடி நடிகர் யார்?

******************************************************************************


2012-ல் சிறந்த அதிரடிப் படம் எது?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1