google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அலெக்ஸ் பாண்டியன்-மூன்று படமா...?

Saturday, January 12, 2013

அலெக்ஸ் பாண்டியன்-மூன்று படமா...?


கண்ணா.... லட்டு திங்க ஆசையா....?
அதுவும்  மூணு லட்டு...?
அலெக்ஸ் பாண்டியன் படத்துக்குப் போனால்
ஒரே டிக்கெட்டில்....? மூன்று படம் பார்க்கலாம்!

படம் ஓன்று-வீட்டில் அலெக்ஸ் பாண்டியன்
படம் இரண்டு-காட்டில் அலெக்ஸ் பாண்டியன்
படம் மூன்று-நாட்டில் அலெக்ஸ் பாண்டியன்


முதல் படத்தில் கார்த்திக்கு மூன்று கதாநாயகிகள்! காமெடிக்குச் சந்தானம்.
கதைக்களம் சந்தானத்தின் வீடு.கதை...? கார்த்தி சந்தானத்தின் மூன்று தங்கைகளுடன் கொஞ்சிக் குலாவுவார்....சிரிப்போ சிரிப்பு! இது நகைச்சுவைப் படம்.(யோவ்...பரிதி அதைவிடு. கதையைச் சொல்லு.) 


இரண்டாவது படம் அருவிகளும் அழகான மரங்களும் உள்ள ஓர் அடர்ந்தக்காடு.அனுஷ்காதான் அங்கே கதாநாயகி.கார்த்தி-அனுஷ்கா...அதென்ன கெமிஸ்ட்ரி/பிஷிக்க்ஸ்/பயாலோஜி...எந்த  மேத்தமேடிக்ஸ்கும்  அதுதான் கணக்கும் புரியவில்லை. சிரிப்பதற்கு..? சாரி அழுவதற்கு  ஓமக்குச்சி மாதிரி...அப்புறம் பயங்கர அடிதடி..அதிரடிச் சண்டைகள்   (யோவ்...பரிதி அதைவிடு. கதையைச் சொல்லு.)  


மூன்றாவது படம்.....நாடு...? அதுதான் தேசப்பற்று.முதலமைச்சராக நம்ம விசு வருவாக...பேனாவும் பேப்பருமாக அலைவாங்க...கூடவே ஒரு கறுப்புஆடு மாதிரி பிரதாப் இருப்பாக வில்லன் மாதிரி ஒரு வில்லன் டாகடர் நம்ம சுமன் இருப்பாக போதாக்குறைக்கு ஒரு சாமியார் இருப்பாக இன்னொரு இந்தி வில்லன் நிறையத் தடி..அடியாட்களுடன் இருப்பாக ..வெள்ளையும் சொள்ளையுமாக நிறைய காருக சர் புர்னு வருவாக...கருப்புப் பூனைப்படை வருவாக ....சுடுவாக வில்லன்கள் எல்லோரும் பொட்டுன்னு போயிடுவாக  ...(யோவ்...பரிதி அதைவிடு. கதையைச் சொல்லு.) 

அண்ணேன்..சுராஜ் அண்ணேன்! என்ன அண்ணேன் எல்லோரும் கதை 
கேட்கிறாங்க...சொல்லிப்புடுவேன்...அப்புறம் என் மேல கேஸு கீசு போடட்டுடக்கூடாது. அண்ணேன் ..உங்கப் பேரு சுராஜா...? சுரா...ரா...ரா...ரா..ஜா...?

ஒரே ஒர் உலகில  ஒரே ஒரு நாடாம்...அதன் பேர் தமிழ்நாடாம் ... அமெரிக்காவிலிருந்து ஒரு கப்பல் நிறையப் போலி மருந்து ஆயிரம் கோடிக்கு வருதாம்.. அதைத் தமிழ்நாட்டுள்ள டிஸ்ட்ரி..அதுதாம்பா ..ஈசுறதுக்குக் கமிஷன் பேசுறாங்கப்பா..நம்ம முதலமைச்சர் விசு விடமாடேனதும் அவரு மகஅனுஷ்காவ கார்த்தியை வச்சு கடத்துறாங்க....என்ன சாமிகளா கதை கேட்டவங்க எல்லோரும் எங்கேப் போனிங்க ...அட மீதிக்கதையை நான் யாருக்கிட்ட சொல்வேன்...?

(யோவ்...பரிதி! போயா நீயும் உன் கதையும் ..ஆளை விடு நாங்க போறோம் )
எங்க தியேட்டருக்கா அண்ணேன்.. சரி பெறட்டும் யான் பெற்ற இன்பம்
அப்படியே திரையரங்குக்கு போகும் போது....கையில் ஒரு கத்தரிக்கோலுடன் போனிங்கனா ..நீங்களே எடிட் பண்ணிக்கலாம்!
   
அதுசரி..நம்ம கருத்துக்கணிப்பு என்னசொல்லுது.....?

அலெக்ஸ் பாண்டியன் வெற்றி எப்படி இருக்கும்...?

வெற்றி
  16 (22%)
மிகப்பெரிய வெற்றி
  9 (12%)
தெரியாது
  45 (64%)

Votes so far: 70
Poll closed  

வாக்களித்த அனைவருக்கும் நன்றி (தெரியாது என்று வாக்களித்த எல்லாம் தெரிந்த அறிவியல் விஞ்ஞானிகளுக்கும் ஆருட கணிப்பர்களுக்கும்  நன்றியோ...நன்றி!)

 .......................................பரிதி.முத்துராசன்.

*************************************************

இது சிரிக்க......BAD MONKEY...?

   

இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து...?

           
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1