google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வைர விழிகள்!

Wednesday, December 19, 2012

வைர விழிகள்!


                                

இருள் சூழ்ந்த வானில்தான்
நட்சத்திரங்கள் ஜொலிக்கும்
உன் ஒளிவீசும் முகத்தில்
ஜொலிக்கும் இவைகள்
விழிகளா? வைரங்களா?

உன் துள்ளும் இளமையை
தொட்டதாலே...
உன் தங்க மேனியில்
தவண்டதாலே....
களையிழந்து போயின
நீ அணிந்த தங்க நகைகள்!

அங்கே இங்கே
அசைந்தாடும் காதணிகள்
இவளிடம் தோற்றோமே..!
இசைக்கின்றன முகாரி!

விட்டால் போதுமென்று
கழன்று விழும் கவலையில்
காரிகையே!..
உன் கை வளையல்கள்!

உன் ஒளிரும் முகத்தில்
மிளிரும் நேற்றிச்சுட்டி
இல்லையே தன் முகத்தில்
என்றுதான் அழுததோ..
அழுதுதான் தேய்ந்ததோ...
அந்த வானத்து வெண்ணிலவு?

இயற்கையிலேயே
அன்பே! நீ பேரழகி!
இன்னும் வேண்டுமோ
இந்த நகைகள் உனக்கு?
கள்வர்கள் கண்டால்
வழிப்பறி தொல்லை உனக்கு?

thanks img from google.co.in
  
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1