google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இரும்பு இதயம் கொண்டவர்.

Saturday, December 08, 2012

இரும்பு இதயம் கொண்டவர்.


அந்த 18 வயது இளைஞன்
உடற்பயிற்சி விளையாட்டு நிபுணன்
அதிகாலை நீச்சல் பயிற்சிக்குப் போகும்போது
மோசமான வாகன விபத்தில்...
brian-boyle-1
அறுபது விழுக்காடு இரத்த இழப்புடன்
மோசமாகச் சேதாரமான இதயத்துடன்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
brian-boyle-2
முப்பத்தி ஆறு முறை இரத்ததானம்
பலமணி நேர இதய அறுவை சிகிச்சை
இரண்டு மாதம் மயக்க நிலை

இத்தனையும் கடந்து
இன்று ஒரு வலிமைமிக்க
விளையாட்டு நிபுணராக...
இரும்பு மனிதராக...
இரும்பு இதயம் கொண்டவராக..  

அவரே- பிரையன் பாயில்.
தேசிய செஞ்சிலுவை தன்னார்வலர்
இரத்ததானத்தின் அவசியத்தை
உலகுக்கு உணர்த்த
பல மாரத்தான் போட்டிகளில்
பங்கு பெறுபவர்..

2012 பாஸ்டன் மாரத்தானில்
செஞ்சிலுவை குழுவில் ஒருவராக
முதல் நிலை வெற்றியாளர்

சிறப்பு 2011 அமெரிக்கச் செஞ்சிலுவை
ஜனாதிபதி விருது

2011 Ironman 70,3 உலகச் சாம்பியன்ஷிப்
லாஸ் வேகாஸ்-மாரத்தானில் தகுதி  
அவரது வாழ்நாளில் மறக்க முடியாதது.

மூன்றாவது முறையாக
2011 Eagleman Ironman 70,3,-மாரத்தானில்
கலந்து கொண்ட வெற்றியாளர்.

நம்பமுடியாத மகத்துவங்கள்
நம்பமுடியாத சாதனைகள்
நெஞ்சில் உறுதி கொண்டவர்கள்
நாளும்தான் படைக்கிறார்கள்
அவர்கள் வாழ்க்கையில்
தொல்லை தரும் விபத்துக்கள்
தொலைந்துதான் போகின்றன. 


 Thanks-video-YouTube-by swimmerboy58
 thanks-images and story source from here



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1