google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு சாமிதான் கொன்னுடுச்சு!

Thursday, November 22, 2012

ஒரு சாமிதான் கொன்னுடுச்சு!


ல்லாச் சாமிகளும்
எங்கே போனார்கள்...?
எவனுக்கும் தெரியவில்லை
அவனுக்கும் தெரியவில்லை..
ஆனால்....
அந்த ஆ...சாமியை
ஒரு சாமிதான் கொன்னுடுச்சு!

அவனுக்குளிருந்த சாமி 
அடுத்த சாமி மேல் கோபம் கொண்டு 
அடுத்தவங்களை கொன்னுடுச்சு 
அய்யோ..பாவம் இப்ப
அவனுக்குளிருந்த சாமி 
அவனையும் கொன்னுடுச்சு....

ஒரு சாமிதான் கொன்னுடுச்சு!


(அட..நான் சொல்லலைங்க...
இவுங்கத்தான் சொல்லுறாங்க...) 
Philip PullmanPhilip Pullman
இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுள் இருக்கிறார் என்றால் அவர் ஏன் இந்த பிரபஞ்சத்திலிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறார்...?
ஏனெனில்..அவரைப் பின்பற்றுபவர்கள் அவர் பெயரில் செய்யும் 
கொடுமைகளை,றியாமைகளைக் கண்டு வெளியே வர வெட்கப்பட்டுக் கொண்டு தலைமறைவாக இருக்கிறார்.....    

***********************************************


மதம்...மனிதன்....கடவுள் (மறுவெளியீடு)

இரண்டு மிருகங்கள் போடும்
ஒரு பயங்கரமான சண்டை
ஒவ்வொரு மனிதருள்ளும் நடக்கும்

ஓன்று-
வெறுப்பு,கோபம,ஆணவம்,ஆத்திரம்
அத்தனையின் கெட்ட உருவம்
இன்னொன்று-
அன்பு,சகிப்புத்தன்மை,புரிதல்,
பணிவு,பச்சாதாபம்,பெருந்தன்மை,இறக்கம்
இவைகளின் மொத்த ரூபம்

எந்த மிருகத்துக்கு 
உணவு அளிக்கிரோமா
அந்த மிருகமே 
வெல்லும் கடைசியில்! 

மனித இனத்தின்
மிகப்பெரிய சங்கடம் மதம்
அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள
நம் மரபணு பரிணாமம் ஒப்புவதில்லை 

மனிதாபிமானமற்ற செயல்கள்
அதிக அளவில் அரங்கேறுவது
மதம் சார்ந்த இடங்களில்தான்
மதம் சார்ந்த மனிதர்களே
மாறுவேடத்தில் அலையும்
மனிதாபிமானமற்றவர்கள்

அரசியல்வாதிகளால் மட்டுமே
உலகின் மோசமானவைகளை
அழிக்கின்ற தீர்வாக
போற்றப்படுகிறது மதம்.
உண்மையில் அது தீர்வல்ல
உலகின் பிரச்சனையே அதுதான்.

உலகின் அதிகபட்ச
கொலைகள் கொள்ளைகள்
பெண்பாலின வன்கொடுமைகள்
மதத்தின் பெயரால் நடக்கின்றன

மதம் மனிதனை மிருகமாக்கிறது

சாக்கடை நதிகள் சங்கமிப்பதால்
கடலுக்கு களங்கமில்லைதான்  
அசுத்தங்கள் கலக்கின்றது என்று
அது அணை கட்டி தடுப்பதில்லை.
ஆனாலும் அது ஒரு நாள்
சுனாமியாக பொங்கி வரும்.

மதக்கொடுமைகள்
ஒருநாள் முடிவுக்கு வரும்
பகுத்தறிவு சிந்தனை கொண்டு  
மனிதன் மனிதனாக வாழும்போது...  

***************************************************************************

நண்பர் பதிவு.....................
நன்றி-சிகரம்

மறுபடியும் வருவேன் 

*****************************************************************************

இன்றைய  சிந்தனை.......


 

Thanks-http://freethoughtblogs.com

No one is born a terrorist. Society makes people terrorists. Death penalty does not deter terrorism. Terrorism grows as religious extremism, political and social oppression, poverty and ignorance increase. It’s not hard to kill terrorists but it is hard to build a society where people are not forced to become terrorists. We need to do the hard work. 

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1