google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பரிணாம வீழ்ச்சி-மீண்டும் குரங்காக....

Wednesday, November 14, 2012

பரிணாம வீழ்ச்சி-மீண்டும் குரங்காக....


து ஒரு மலைக்கோயில்
ஆயிரம் படிகளுக்கு மேல்
அதன் மேல் நடந்து சென்று
ஆண்டவனைத் தரிசிக்கவேண்டும்.

பாதித் தூரம் சென்றவுடன்
அந்தத் தம்பதியினர்
தத்தி தத்தி நடக்கும்
தங்கள் குழந்தையுடன்
ஓய்வாக இருந்த போது....

அந்தக் குழந்தையோ  
துள்ளி குதித்துக்கொண்டிருந்த
குரங்கு குட்டியைக் கண்டு
அதனுடன் விளையாட சென்றது

பயந்து போன தந்தை
குழந்தையைத் தூக்க ஓடிய போது....

எங்கிருந்தோ பாய்ந்து வந்தது
சப்தமிட்டுக்கொண்டு
அந்தக் குட்டி குரங்கின் அம்மா
அந்தத் குழந்தையை
அது எதுவும் செய்யாமல்
தன் குட்டியோடு குட்டியாக
அரவனைத்துக் கொண்டது...
  
மனிதனின் பரிணாம வளர்ச்சி
உயிர்மலர்ச்சி பற்றி   
ஆறு மில்லியன் வருடங்களுக்கு
முன்பாகவே அது
ஆப்பிரிக்கக் குரங்கிலிருந்து
ஆரம்பித்ததாக ஆய்வு

அது உண்மையாகத்தான்
இருக்க வேண்டும்.
மனிதர்களோ மிருகங்களோ
பிள்ளைகள் மீது எல்லோரும்
பாசமாகத்தான் இருக்கிறார்கள்

ஆனால்

பெற்றோர்கள் மீது
பிள்ளைகளின் பாசம்...
 
பாசப் பால் திரிந்து
வேஷமாக...
நேசப் பால் திரிந்து
விஷமாக..

பணமிருக்கும் பிள்ளைகளின்
பெற்றோர்களுக்கு   
முதியோர் இல்லங்கள்

மனமில்லாத பிள்ளைகளின்
பெற்றோர்களுக்கு
கோயில்களே இல்லங்கள் 
(இப்போது இதற்குக் கூட
கோயில்களில் இடமில்லை)

இப்படியே
இந்த மனிதர்கள்  
ஆறு மில்லியன் வருடங்கள் அல்ல
ஆறு நொடியிலேயே  
ஆகிவிடுகிறார்கள் குரங்காக.....

பரிணாம வீழ்ச்சி!

****************************************************************************
இது
இப்போதைய
பரிணாம வளர்ச்சி
மதுக்கடை நோக்கி.....


******************************************************************************

                                           Thanks-YouTube-Uploaded by ananthveerappan

**********************************************************************************
இதையும் பார்வையிட............
                                 ஒரு வரம் கிடைத்தால்.....

நன்றி.திண்டுக்கல் தனபாலன்.


********************************************************************************

Top 10 Funny Baby Videos!



                                                Thanks-YouTube-Uploaded by BestTVvideo




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1