google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரபலங்களின் ஆத்திரமும் மூத்திரமும்

Thursday, November 01, 2012

பிரபலங்களின் ஆத்திரமும் மூத்திரமும்




சிறுவயதிலேயே அவனுக்கு
சின்னஞ்சிறு விசயங்களுக்கு
அளவிட முடியாத கோபம்
எதிரில் இருக்கும் பொருட்களை
எட்டி உதைப்பான் உடைப்பான்
எதிரில் இருப்போர் எவராயினும்
ஏளனமாகப் பேசுவான் ஏசுவான்

அவனது தந்தை
அவனிடம் சொன்னார்
ஓர் ஆலோசனை-

“ஆத்திரம் வரும்போது
ஒரு சுத்தியலையும்
சில ஆணிகளையும்
எடுத்துச் சென்று
வீடு முன் நிற்கும்
மரத்தின் மீது
ஆத்திரம் தீரும் வரை
அடி...அடி...ஆணி அடி

அப்படியே அவனும் செய்து
ஆத்திரமும் குறைந்து
அவனும் மாறிவிட்டான்
அமைதியானவனாக

காலங்காலமாக சொல்லப்படும்
நீதி நெறிமுறைக் கதை
நடத்தைச் சார்பான
ஒழுக்கம் சார்ந்த கதை

இந்தக் காலத்தில்
தொலைகாட்சிகளும்
நாளிதழ்களும்
நமக்குச் சொல்லும் நிகழ்வுகள்
சிறியோர்களெல்லாம்
சமத்தாக இருக்கிறார்கள்
பிரபலங்கள் என்று சொல்லும்
பெரியோர்களெல்லாம்....

துப்பார்க்கு துப்பாய
தூ..தூ.வென்று ஒருவர்
இன்னொருவரோ
கீச்...கீச்..சென்று
தானும் அழுது
அடுத்தவரையும்
அழ வைக்கிறார்

இதுபோல் நிறைய
சமுதாய அவலங்கள்
செய்வதெல்லாம்
சமுதாயப் பிரபலங்கள்

இந்த ஆத்திரத்தை
அடக்க முடியாதவர்களுக்கு
ஆணிகளையும் சுத்தியையும்
கையில் கொடுத்தால்...

அவர்கள் மண்டையில்
அடித்துக் கொள்வார்களா...?
அடுத்தவர் தலையில்
அடித்துக் கொள்வார்களோ..?
அடித்துக் கொல்வார்களா..?


பிரபலங்களின்
ஆத்திரமோ? மூத்திரமோ?
பீச்சியடித்து நாறுகிறது


நாடும் சமுதாயமும்  



***********************************************************************



என் முகநூல் சிரிப்பு வெடி........
Saravana Kalimuthu
சாய்ந்த மின் கம்பங்களுக்கு பதில் புதிய மின் கம்பங்கள் விரைவில் நடப்படும் - மின்சார வாரியம் உறுதி.

ஹிஹி ! இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1