google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதம் மனிதன் மிருகம்

Sunday, October 21, 2012

மதம் மனிதன் மிருகம்



இரண்டு மிருகங்கள் போடும்
ஒரு பயங்கரமான சண்டை
ஒவ்வொரு மனிதருள்ளும் நடக்கும்

ஓன்று-
வெறுப்பு,கோபம,ஆணவம்,ஆத்திரம்
அத்தனையின் கெட்ட உருவம்
இன்னொன்று-
அன்பு,சகிப்புத்தன்மை,புரிதல்,
பணிவு,பச்சாதாபம்,பெருந்தன்மை,இறக்கம்
இவைகளின் மொத்த ரூபம்

எந்த மிருகத்துக்கு 
உணவு அளிக்கிரோமா
அந்த மிருகமே 
வெல்லும் கடைசியில்! 

மனித இனத்தின்
மிகப்பெரிய சங்கடம் மதம்
அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள
நம் மரபணு பரிணாமம் ஒப்புவதில்லை 

மனிதாபிமானமற்ற செயல்கள்
அதிக அளவில் அரங்கேறுவது
மதம் சார்ந்த இடங்களில்தான்
மதம் சார்ந்த மனிதர்களே
மாறுவேடத்தில் அலையும்
மனிதாபிமானமற்றவர்கள்

அரசியல்வாதிகளால் மட்டுமே
உலகின் மோசமானவைகளை
அழிக்கின்ற தீர்வாக
போற்றப்படுகிறது மதம்.
உண்மையில் அது தீர்வல்ல
உலகின் பிரச்சனையே அதுதான்.

உலகின் அதிகபட்ச
கொலைகள் கொள்ளைகள்
பெண்பாலின வன்கொடுமைகள்
மதத்தின் பெயரால் நடக்கின்றன

மதம் மனிதனை மிருகமாக்கிறது

சாக்கடை நதிகள் சங்கமிப்பதால்
கடலுக்கு களங்கமில்லைதான்  
அசுத்தங்கள் கலக்கின்றது என்று
அது அணை கட்டி தடுப்பதில்லை.
ஆனாலும் அது ஒரு நாள்
சுனாமியாக பொங்கி வரும்.

மதக்கொடுமைகள்
ஒருநாள் முடிவுக்கு வரும்
பகுத்தறிவு சிந்தனை கொண்டு  
மனிதன் மனிதனாக வாழும்போது...  

 ********************************
இது இசைதரும் இன்பம்
மதம் தரும் மயக்கத்தைவிட 
மனதுக்கு  நல்லது.............
********************************* 


                 Thanks-YouTube-Uploaded by MadePossible




Thanks-SoundCloud-Spirit by Microworldscenery
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1