google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரபலங்களும் அவலங்களும்

Tuesday, October 30, 2012

பிரபலங்களும் அவலங்களும்



யார் இங்கே பிரபலங்கள்?
அவர்களின் செயல்கள்
அவசியங்களா? அபத்தங்களா?
இல்லையேல்
சமுதாய அபலங்களா?

இதற்கு ஒரு முடிவு வேண்டும்
இன்று ஒரு தீர்வு வேண்டுமென்று  
அந்தக் காட்டில் இருந்த குரங்குகள்
கூட்டம் கூடி ஆலோசனை செய்தன

அதில் ஒரு குரங்கு சொன்னது
"நாமெல்லோரும் குரங்குகள்தானே
ஏதோ ஆடி பிழைப்பு நடத்தும்
அந்தக் குரங்கு எப்படிப் பிரபலமானது?
அதற்குக் கா(நா)ட்டாமை செய்ய
என்ன தகுதி இருக்கு?" என்று
கூத்தாடிக் குரங்கை சீண்டியது.
நானும் ஆடுவேன் பாருங்கள்
என்று துள்ளிக் குதித்தது
அந்தக் கூத்தாடி குரங்கோ
கோபத்தில் கீழ்த்தரமாய் கத்தியது   
சபை என்றும் பாராமல்

இன்னொரு குரங்கோ-
"பாட்டுப் பாடும் இந்தக் குரங்கு
இங்கே எப்படிப் பிரபலமானது?" 
என்று பிராண்டியது
ஒரு பாடகிக் குரங்கை பார்த்து
நானும் பாடுவேன் கேளுங்கள்
என்று வாயைத் திறந்து கத்தியது
அந்தப் பாடகிக் குரங்கோ கோபத்தில்  
புகார் செய்யப் புறப்பட்டப் போனது

அங்குக் கூடியிருந்த குரங்குகள்
அடி பிடி தகராறு களோபகரம்
ஒவ்வொருவரும் தாங்களே பிரபலமென்று
அவரவர் திறமைகளைப் எடுத்து விட்டன

அதில் ஓன்று ஆண்டவனிடம் பேசுவதால்
அதுதான் பிரபலமென்று அடம்பிடித்தது   
பேசுவதில் பிரபலம் எழுதுவதில் பிரபலம்
உண்பதில் பிரபலம் உறங்குவதில் பிரபலம்

அப்போது அங்கே வந்த கிழட்டு குரங்கு
"ஏன் நீங்கள் மனிதர்கள் போல்
சண்டை சச்சரவு செய்து கொண்டு?  
நீங்கள் அத்தனை குரங்குகளும்
இங்கே பிரபலமான குரங்குகளே!"
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டம் கலைந்தது

திடுக்கிட்டு விழித்தேன்
திண்டாடிப்போனேன்
கண்டதெல்லாம் கனவு

எங்கும் இல்லை குரங்குகள்!
எங்கும் இருந்தார்கள் மனிதர்கள்!
  images thanks - google
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1